ஆன்லைன் விளையாட்டுக்கு தடை செய்ய மக்கள் கருத்து தெரிவிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை செய்ய மக்கள் கருத்து தெரிவிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசின் உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது குறித்த அவசியம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உளவியல் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகக்கூடிய தீமையைப் பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர்.
சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
வரைமுறையற்று ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது.
பல்வேறு நாடுகளில் ஆன்ல...









