சனிக்கிழமை, ஜூலை 11
Shadow

Author: Kodanki

தமிழகத்தில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

தமிழகத்தில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வை எழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்பட இருப்பதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் இந்த இணையதளங்களில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு...
ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்- வீட்டில் இருந்தபடி தபால் மூலம் சமர்பிக்க ஏற்பாடு!

ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்- வீட்டில் இருந்தபடி தபால் மூலம் சமர்பிக்க ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை, அவர்களது வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்க சென்னை நகர மண்டல அஞ்சல்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, வருடாந்திர ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதிலிருந்து ஓய்வூதியதாரர்களுக்கு மாநில அரசு விலக்கு அளித்திருந்தது. இந்த ஆண்டு மாநில அரசின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் 7,15,761 பேர் வருகிற ஜூலை முதல் செப்டம்பர் மாதம்வரை தங்களது ஆயுள...
மாமனிதன் அழுத்தமானவன் –  கோடங்கி விமர்சனம்

மாமனிதன் அழுத்தமானவன் –  கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
மாமனிதன் அழுத்தமானவன் -  கோடங்கி விமர்சனம்   யதார்த்த இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி காயத்ரி, அனிகா, மானஸ்வி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாமனிதன். ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் விஜய் சேதுபதி தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசிக்கிறார். பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் என விஜய் சேதுபதி ஆசைப்படுகிறார். அப்போது, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகிறார். இதன் பின் விஜய் சேதுபதி ஆசை நிறைவேறியதா? மாமனிதனாக யாரை சொல்கிறார்கள்? என்பதே படத்தின் மீதி கதை. 2 குழந்தைகளுக்கு அப்பாவாக விஜய் சேதுபதி, அம்மாவாக காயத்ரி. இருவருமே யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விஜய் சேதுபதியின் மகள்களாக வரும் அனிகா மற்றும் மானஸ்வி, ஜுவல் மேரி என அனைவரும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். வழக்க...
மர்மமான திரில்லர் அனுபவத்தை தரும் மாயோன் – கோடங்கி விமர்சனம்

மர்மமான திரில்லர் அனுபவத்தை தரும் மாயோன் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மர்மமான திரில்லர் அனுபவத்தை தரும் மாயோன் - கோடங்கி விமர்சனம்    டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் மாயோன்.படத்தை இயக்கியவர் என்.கிஷோர். சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார், பகவதி பெருமாள், ஹரிஷ் பேராடி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசை – இளையராஜா, ஒளிப்பதிவு ராம்பிரசாத், எடிட்டிங் – ராம் பாண்டியன் மற்றும் கொண்டலராவ், கலை-பாலசுப்ரமணியன், பாடல்கள்- இளையராஜா   பழைய கதை பாணியில் ஆன்மீகம் கலந்த சஸ்பென்ஸ் டெக்னாலஜி வைத்து, புதையல், ஆராய்ச்சி, கோயில் எல்லாம் கலந்து ஒரு  சுவாரஸ்யமான திரைப்படத்தை கொடுக்க முயற்ச்சித்த இயக்குனர் கிஷோர் முதலில் பாராட்டப்பட வேண்டியவர்.   புதுக்கோட்டை மாவட்டத்தில் மாயோன் மலை என்ற பகுதியில் ஒரு பழங்காலக் கோயிலுக்குள்...
வேழம் வித்தியாசம்! கோடங்கி விமர்சனம்

வேழம் வித்தியாசம்! கோடங்கி விமர்சனம்

MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கோடங்கி விமர்சனம் வேழம் வித்தியாசம்!   ஊட்டிக்கு தனது காதலியுடன் பைக்கில் டிராவல் செய்து கொண்டிருக்கும் ஹீரோ அசோக் செல்வனை திடீரென இரும்பு ராடால் தாக்கி விட்டு அவரது காதலி ஐஸ்வர்யா மேனனை மர்ம ஆசாமி கடத்தி சென்று கொன்று விடுகிறார். காதலியை யார் கொன்றார்கள்? எதற்காக கொன்றார்கள்? கொலையாளி சிக்கினானா இல்லையா எனபதை சொல்லும் படம் தான் வேழம். முழுக்க முழுக்க சைக்கோ த்ரில்லர்வகை படம்தான் இது. 7 ஆண்டுகள் கழித்து என அதன் பிறகு படம் ஆரம்பிக்க தாடி லுக்கில் அசோக் செல்வன் வந்து படம் முழுக்க கொலைகாரனின் வாய்ஸை மட்டுமே அடையாளமாகக் கொண்டு கொலையாளியை தேடுவதும், கடைசி கிளைமாக்ஸ் காட்சிவரை யூகிக்க முடியாமல் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்து ஓவர் டோஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இது போன்ற சைக்கோ கில்லர் கதைகளில் கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் காட்சியமைப்புகள் படம் பார்க...
அந்த பாடலை கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் – இமான்.

அந்த பாடலை கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் – இமான்.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
*அந்த பாடலை கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் – இமான்.* இசை தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கலை வடிவம். மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு வாழ்வியல் மருந்தாக இருப்பது திரை இசை. எத்தகைய பெரிய துன்பங்களையும் நல்ல இசை ஆறுதல் படுத்திவிடும். அதிலும் நமக்கு நெருக்கமான மொழியும்,இசையும் சேரும் போது எத்தகைய நெஞ்சையும் கரைய செய்து விடும். அது போல் தமிழர்களின் நெஞ்சங்களை தான் இசை மூலம் நிறைய செய்தவர் டி.இமான். தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குறிய இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். பெரிய படமோ, சின்ன படமோ இவரது பாடல்களே அந்த படத்திற்கு தனி அந்தஸ்தை கொடுத்து விடும். இருபது ஆண்டுகள் என்ற அசாதாரணமான இமானின் இசைப் பயணத்தில் 100 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து 150 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. 2002 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தி...
பெண்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றிநடை போடும் மாமனிதன்!

பெண்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றிநடை போடும் மாமனிதன்!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாமனிதன்”. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது YSR நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். "மாமனிதன்" திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற நிலையில், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக அமைந்திருப்பதால் பெண்கள் குடும்பம் சகிதமாக வந்து இப்படத்தை பார்க்க துவங்கியுள்ளனர். நேற்று மாலை மற்றும் இரவு நேரக் காட்சிகளில் பெண்களின் கூட்டம் திரையரங்கில் அலைமோதியது. அனைவருக்குமான படமாக ”மாமனிதன்” வந்திருப்பதால், ஒருமுறையாவது இப்படத்தை காண வேண்டும் என்ற ...
ஓபிஎஸ்.. வளர்ச்சியும்,. வீழ்ச்சியும்!

ஓபிஎஸ்.. வளர்ச்சியும்,. வீழ்ச்சியும்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  *ஓபிஎஸ்.. வளர்ச்சியும்,. வீழ்ச்சியும்*,.. 1969ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர் 1973ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய போது ஓ.பி.எஸ் தன்னை அதில் இணைத்துக் கொண்டார்.பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் தனது நீண்டகால அரசியல் செயல்பாட்டின் வழியாக 1996ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்த்தெடுக்கப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா மீது பல்வேறு ஊழல் வழக்குகள் இருந்ததால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படைய...
உலகின் மிக அழகான பெண்.. உற்சாகத்தில் ஆம்பர் ஹியர்ட் !

உலகின் மிக அழகான பெண்.. உற்சாகத்தில் ஆம்பர் ஹியர்ட் !

CINI NEWS, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
லண்டனில் உள்ள மேம்பட்ட முக அழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் டி சில்வா 2016 - ஆம் ஆண்டில் உலகின் மிக அழகான முகம் யாருடையது என்பதைக் கண்டறிய பண்டைய முக மேப்பிங் நுட்பமான பிஹச்ஐ பயன்படுத்தினார். இந்த பிஹச்ஐ- யானது அழகுக்கான கிரேக்க கோல்டன் ரேஷியோவிற்கு முகம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதைக் கணக்கிடப் பயன்படுகிறது. இதைத் தொடர்ந்து டாக்டர் ஜூலியன் டி சில்வா ஆராய்சிக்கு பிறகு நடிகை ஆம்பர் ஹியர்ட் முக அமைப்பானது கிரேக்க கோல்டன் ரேஷியோவிற்கு 91.85 சதவீதம் துல்லியமாக இருப்பதைக் கண்டறிந்தார். அதைத் தொடர்ந்து, இதே நுட்பத்தை பயன்படுத்தி ராபர்ட் பாட்டின்சன் முக அமைப்பானது கோல்டன் ரேஷியோவிற்கு 92.15 சதவீதம் துல்லியத்துடன் இருப்பதை கண்டறிந்துள்ளார். இதன் மூலம் நடிகை ஆம்பர் ஹியர்ட் உலகின் மிக அழகான பெண் என்றும் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் உலகி...
தமிழகத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய நிலை வரவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தமிழகத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய நிலை வரவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னை சைதாப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் ஒரே நாளில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பி4, பி5 ஒமைக்ரான் புதிய வைரஸ் பரவுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,603 அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 8 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை தண்டையார்பேட்டை மாநகராட்சி மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தொற்று அதிகரித்தாலும் உயிர் இழப்பு இல்லாத நிலை. காய்ச்சல், சளி, தொண்டை வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 7 நாட்கள் தனி...