ஜெ.,மரண தேதி..! பல்டி அடித்த சசிகலா சகோதரர் திவாகரன்
ஜெ.,மரண தேதி..!
பல்டி அடித்த சசிகலா சகோதரர் திவாகரன்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் இன்று மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரரான திவாகரன் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2017 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாகவும், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை குழுமத்துக்கு சொந்தமான மருத்துமனைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்ட பின்னர் மறுநாள் 5-ம் தேதி தாமதமாக அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டதாகவும் சசிகலா சகோதரர் திவாகரன் இன்று தெரிவித்துள்ளார்.
திவாகரனின் இந்த பேச்சு முன்னாள் முதல்வர் ஜெ., மரண சர்ச்சையில் மீண்டும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அரசியல் வட்டாரத்திலும் திவாகரன் பேச்சு பெரும் பரபரப்பையும் மக்கள் ம...








