1½ வருடத்துக்கு பின் கனிமொழி வீட்டுக்கு சென்ற கருணாநிதி
1½ வருடத்துக்கு பின் கனிமொழி வீட்டுக்கு சென்ற கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். சுமார் 1 வருட காலம் அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை
அதன் பிறகு அவரது உடல் நிலை ஓரளவு தேறியது. இதையடுத்து 1 வருடத்துக்கு பிறகு முரசொலி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு முரசொலி பவள விழா கண்காட்சி படங்களை பார்வையிட்டார். சமீபத்தில் தனது இல்லத்தில் கொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார். அதன் பிறகு அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார்.
கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி.யின் வீடு சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ளது. இந்த நிலையில் கருணாநிதி நேற்று இரவு கனிமொழி வீட்டுக்கு சென்றார். அங்கு கனிமொழி மற்றும் ராஜாத்தி அம்மாளை சந்தித்தார்.இரவு 8.15 மணிக்கு சென்ற அவர் 9 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் இருந்தார். பின்னர் அவர் அங்கிர...









