’அங்கம்மாள்’ திரைப்பட விமர்சனம் 3/5
’அங்கம்மாள்’ திரைப்பட விமர்சனம்
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித் துணி என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் அங்கம்மாள்.
இளம் வயதில் கணவரை இழந்த கீதா கைலாசம், தனது இரண்டு மகன்களை வளர்ப்பதற்காகக் கடுமையாக உழைக்கிறார். பால் வியாபாரம், விவசாயம் என்று கடுமையான உழைப்பாளியாக மட்டும் இன்றி, தைரியமான பெண்ணாக இருக்கிறார். அந்தக் காலப் பெண்கள் போல ஜாக்கெட் அணியாத பெண்மணியாக இருப்பதுதான் இந்தக்கதை படமாகக் காரணம்.
மூத்த மகனான விவாசாயி பரணி திருமணமாகி அம்மாவுடன் இருக்க, இளைய மகன் சரண் நன்றாக படித்து மருத்துவராகிறார். அவர் பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க, அவரது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கிறார்கள். பெண் வீட்டார் ஜாக்கெட் அணியாமல் இருக்கும் தனது அம்மாவை பார்த்து தவறாக நினைப்பார்கள் என்பதாலும், காலத்துக்கு ஏற்ப தனது அம்மாவும் மாற வேண்டும்...









