வியாழக்கிழமை, ஜூலை 16
Shadow

Author: Kodanki

மீண்டும் போலிவுட்டில் களம் இரங்கும் ஜோதிகா!

மீண்டும் போலிவுட்டில் களம் இரங்கும் ஜோதிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தென் இந்தியா படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜோதிகா. இவர் இந்தியில் 1998-ம் ஆண்டு வெளியான 'டோலி சஜா கே ரக்கீனா' என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். அதன்பின் தமிழ் படங்களில் கவனம் செலுத்திய ஜோதிகா, 2001-ல் 'லிட்டில் ஜான்' என்ற இந்தி படத்தில் மீண்டும் நடித்து இருந்தார். அதன் பிறகு இந்தியில் அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை. தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இது ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாறு படம். இதில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்க, துஷார் இத்ராணி இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவை படக்குழுவினர் அணுக அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு ஜோதிகா மீண்டும் இந்தி படத்தில் நடிக்கயிருப்பது ரசிகர்கள் மத்தி...
“வாழை” – மாரி செல்வராஜின் அடுத்த படத்தின் படபிடிப்பு தொடங்கியது!

“வாழை” – மாரி செல்வராஜின் அடுத்த படத்தின் படபிடிப்பு தொடங்கியது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தற்போது உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு வாழை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்ப்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராய குறிச்சியில் இன்று தொடங்கியது. அதனை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்...
விஜயானந்த் விழாவுக்கு வந்து வாழ்த்திய முதல்வர்!

விஜயானந்த் விழாவுக்கு வந்து வாழ்த்திய முதல்வர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா* உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி. கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம். பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்திய மொழிகளில் வெளியாகிறது. வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத...
உதய் ப்ளீஸ் ஆக்‌ஷன் படத்துல நடிக்காதீங்க – ”கலகத்தலைவன்” கோடங்கி விமர்சனம்

உதய் ப்ளீஸ் ஆக்‌ஷன் படத்துல நடிக்காதீங்க – ”கலகத்தலைவன்” கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம், வீடியோ
  உதய் ப்ளீஸ் ஆக்‌ஷன் படத்துல நடிக்காதீங்க - ”கலகத்தலைவன்” கோடங்கி விமர்சனம்   https://www.youtube.com/watch?v=J2m_56oexec
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இணைந்த காந்தியின் கொள்ளு பேரன்…!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இணைந்த காந்தியின் கொள்ளு பேரன்…!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும், எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான துஷார் காந்தி, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இன்று கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் இந்த ஒற்றுமை நடைப்பயணம், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மத்திய அரசுக்கு எதிராகவும் தொடங்கியதாக கூறப்பட்டது. அதன்படி, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் நவம்பர் 7 ஆம் தேதி நுழைந்த ராகுல்காந்தியின் நடைப்பயணம், இன்று அம்மாநிலத்தின் அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில் தொடங்கிய...
தளபதி 67-இல் கமலா? ரசிகர்கள் உற்சாகம்!

தளபதி 67-இல் கமலா? ரசிகர்கள் உற்சாகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அடுத்தடுத்து படங்கள் குறித்த அப்டேட் கொடுத்து வரும் ஒரே தமிழ் நடிகராக விஜய் மட்டுமே. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான “தளபதி 67” படத்திற்கான ஒரு புதிய அப்டேட் வெளியாகி, ரசிகர்களை உற்சாகக் கடலில் நீச்சலடிக்க வைத்துள்ளது. சமீபத்தில் வெளியாகி இந்தாண்டின் மிகப்பெரும் தமிழ் படமாக பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனை உலகளவில் அள்ளிய படம் தான் விக்ரம். கமலஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில், யாரும் எதிர்பாராத விதத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு பக்கா மாஸ் ஆக்‌ஷன் படமாக உருவாகிய விக்ரம் படம், உலகளவில் பெரும் மக்கள் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த படம் விஜய்யுடன் “தளபதி 67” தான் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தளபதி 67 குறித்த தகவல் விர...
“கலகத்தலைவன்” உதய்நிதியை வாழ்த்திய கழகத்தலைவர் முதல்வர் ஸ்டாலின்!

“கலகத்தலைவன்” உதய்நிதியை வாழ்த்திய கழகத்தலைவர் முதல்வர் ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “கலகத் தலைவன்” படம் பார்த்து வாழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் !!! ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார். படத்தை பார்த்தார். பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  “கலகத் தலைவன்” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். நாளை நவம்பர் 18 ஆம் முதல் உலகமெங்குமுள்ள ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘கலகத் ...
“துக்ளக்” தர்பார் நடத்தி டப்பிங் கலைஞர்கள் உழைப்பை சுரண்டும் ராதாரவி – குற்றம் சுமத்தும் உறுப்பினர்கள்!

“துக்ளக்” தர்பார் நடத்தி டப்பிங் கலைஞர்கள் உழைப்பை சுரண்டும் ராதாரவி – குற்றம் சுமத்தும் உறுப்பினர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, தமிழக அரசியல்
  *வாட்ஸ் ஆப் தர்ணா* *Day – 26* *மரியாதைக்குரிய தயாரிப்பாளர்களே!* *தயவு செய்து, மற்ற கலைஞர்களை போல டப்பிங் கலைஞர்கள் சம்பள பணத்தையும், அவர்களிடமே நேரடியாக கொடுங்கள்* முகமது பின் துக்ள‌க் என்று ஒரு *கோமாளி* அரசன் இருந்தான். அவன் ட‌ப்பிங் ச‌ங்க‌ த‌லைவ‌னாக‌ இருந்தால், த‌யாரிப்பாள‌ர்க‌ள் டப்பிங் கலைஞர்கள் ச‌ம்ப‌ள‌த்தை அவ‌னிட‌ம் கொடுப்பார்க‌ளா? ட‌ப்பிங் ச‌ங்க‌த்தை பொருத்த‌வ‌ரை *ராதார‌விதான் துக்ள‌க்....* குழ‌ந்தைக‌ளையும் ச‌ங்க‌த்தில் உறுப்பின‌ர்க‌ளாக‌ சேர்ப்பார்... அதுவே ச‌ட்ட‌ப்ப‌டி குற்ற‌ம்... அந்த குழ‌ந்தைகள் ட‌ப்பிங் பேசினாலும், 10% க‌ட்டாய‌ம் அவர்களிடமும் டப்பிங் புரோக்கர் க‌மிஷ‌ன் கொடு என்று மிரட்டி, கையேந்தி, சங்க வளர்ச்சி என்ற பெயரில் *பிச்சை எடுக்க தயங்காதவர்* துக்ள‌க் ராதார‌வி. ஒருவேளை ந‌ன்றாக‌ டப்பிங் பேசிய‌ ஒரு குழ‌ந்தை உறுப்பினரை பாராட்டி, ...
நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க அமீர்கான் முடிவு!

நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க அமீர்கான் முடிவு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், 35 ஆண்டுகாலமாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென முத்திரையை பதித்திருக்கிறார். அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்து நிலவிய நிலையில், வசூல் ரீதியாக கடும் இழப்பை சந்தித்தது. இதனால், அடுத்ததாக அமீர் கான் நடிக்கவிருந்த 'சாம்பியன்ஸ்' படத்தில் அவர் நடிக்கமாட்டார் என்று தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், சாம்பியன்ஸ் படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு அமீர் கான் பேசியதாவது, "சாம்பியன்ஸ் படத்தின் கதை அற்புதமான, அழகான கதை. லால் சிங் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நான் நடிக்க இருந்தேன். ஆனால், தற்போது நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளேன். சாம்பியன்ஸ் படத்தில் நடிக்க ...
விஜய்-அஜித் படங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் !

விஜய்-அஜித் படங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. வாரிசு படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். தெலுங்கு பட அதிபர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கில் விஜய் படங்களுக்கு வரவேற்பு உள்ளதால் இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுபோல் துணிவு படத்தையும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து ஆந்திரா, தெலுங்கானாவில் கணிசமான தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை ...