சக்சஸ் நிகழ்ச்சியில் இயக்குனருக்கு தங்க சங்கிலி பளிசளித்த தயாரிப்பாளர்!
*’சிங்கப்பூர் சலூன்’ சக்சஸ் மீட்!*
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதன் வெற்றி விழா இன்று நடைபெற்றது.
கலை இயக்குநர் ஜெய், “’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் சலூன் அதைச்சுற்றியுள்ள வீடுகள் என மூன்று ஏக்கரில் செட் உருவாக்கினோம். எங்களுக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்த இயக்குநர் கோகுலுக்கு நன்றி. கேமரா மேனும் சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்தார். என்னுடைய குழுவினருக்கும் நன்றி”
பின்னணி இசையமைப்பாளர் ஜாவித், “எனக்கு இந்தப் படம் மிக முக்கியமானது. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் ஐசரிக்கு நன்றி. குறிப்பாக இரண்டாம் பாதி எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. உங்களுக்கும் படம் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி”
பாடலா...









