சனிக்கிழமை, ஜூலை 25
Shadow

politics

சினிமாவை மிஞ்சும் ஆக் ஷன்… சாலை தடுப்பில் மோதி, வானில் பறந்து மாடிக்குள் பாய்ந்த கார்..!

சினிமாவை மிஞ்சும் ஆக் ஷன்… சாலை தடுப்பில் மோதி, வானில் பறந்து மாடிக்குள் பாய்ந்த கார்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சினிமாவை மிஞ்சும் ஆக் ஷன் அதிக வேகம்... கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி, வானில் பறந்து மாடிக்குள் பாய்ந்த கார்..! அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதி சாலை வழியாக (உள்ளூர் நேரப்படி) நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் படுவேகமாக வந்த ஒரு வெள்ளைநிற சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு சுவரின்மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் சுமார் இருபது அடி உயரத்துக்கு வானில் பறந்து எகிறிய கார், பக்கவாட்டில் இருந்த ஒரு கட்டிடத்தின் மாடி ஜன்னலுக்குள் பாய்ந்து, சொறுகி நின்றது. பல் டாக்டர் ஒருவருக்கு சொந்தமான கிளினிக்கில் நோயாளிகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்திருக்கும் அறைக்குள் முன்பகுதி புகுந்த நிலையில் பின்பக்கத்தின் பெரும்பகுதி அந்தரத்தில் தொங்கியபடி ஒரு கார் நிற்கும் காட்சியை கண்ட அப்பகு...
கமலை ஒதுக்கி ரஜினியை வரவேற்கும் குருமூர்த்தி..! உடையும் ஆன்மீக அரசியல் ரகசியம்

கமலை ஒதுக்கி ரஜினியை வரவேற்கும் குருமூர்த்தி..! உடையும் ஆன்மீக அரசியல் ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கமலை ஒதுக்கி ரஜினியை வரவேற்கும் குருமூர்த்தி..! உடையும் ஆன்மீக அரசியல் ரகசியம் ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னாலும் சொன்னார் ஷெட்டில் தூசி படிந்து கிடக்கும் வண்டிகளும், ரிப்பேர் ஆகி ஓரம் கட்டப்பட்ட வண்டிகளும் அவரச கதியில் பிரசாரத்துக்கு ரெடியாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ரஜினியோ தனிக்கட்சி, அதிலும் ஆன்மீக அரசியல் என்று பொடி வைத்து பேசியிருக்கிறார். தமிழகம் மதசார்பற்ற மாநிலம் என்ற நிலையில் ரஜினியின் ஆன்மீக அரசியல் எடுபடுமா என்ற விவாதம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பிஜேபியின் ஆதரவோடுதான் ரஜினி ஆன்மீக அரசியல் நிலைப்பாடு எடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் இல்லாமல் இல்லை. அதை மெய்ப்பிக்கும் விதமாக ரஜினியின் பாபா முத்திரையில் பாஜவின் தாமரை சின்னம் முன்பாகவும், அதற்கு பின்னால் பாபா முத்திரையும் இருந்தது. வெளிப்படையாக விமர்சனங்கள் எழுந்த்தும் பா...
கொள்ளையன் நாதுராமை பிடிக்க  சினிமா பாணியில் துப்பாக்கி சூடு, கார் சேஸிங்,13 கிலோமீட்டர் துரத்தல்..!

கொள்ளையன் நாதுராமை பிடிக்க சினிமா பாணியில் துப்பாக்கி சூடு, கார் சேஸிங்,13 கிலோமீட்டர் துரத்தல்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சினிமா பாணியில் துப்பாக்கி சூடு, கார் சேஸிங்,13 கிலோமீட்டர் துரத்தல்..! ஒருவழியாக சிக்கிய கொள்ளையன் நாதுராம் சென்னை கொளத்தூரில் முகேஷ்குமார் என்பவரின் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, ரொக்கப் பணம் ரூ.2 லட்சம் கொள்ளை போனது. மேற்கூரையில் துளையிட்டுத் திருடப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு வடமாநில ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கூட்டாளிகளான நாதுராம் மற்றும் தினேஷ் சௌத்ரி எப்படியோ ராஜஸ்தானுக்குத் தப்பிச் சென்றனர். இவர்களைப் பிடிப்பதற்காக பெரிய பாண்டியன், முனிசேகர் தலைமையில் ஆறு பேர் கொண்ட தனிப்படை கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ராஜஸ்தான் சென்றது. அங்கு கொள்ளையர் களைக் கண்டறிந்து நெருங்கும்போது இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் முதலில் இந்தக் கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான நாதுராம் தான் சுட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. பின்பு, பெ...
“தமிழர்களால் பெருமை படுகிறோம்” பொங்கல் வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் தெரசா மே..!

“தமிழர்களால் பெருமை படுகிறோம்” பொங்கல் வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் தெரசா மே..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
"தமிழர்களால் பெருமை படுகிறோம்" இங்கிலாந்து பிரதமர்  பொங்கல் வாழ்த்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வரும் நிலையில், பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. https://twitter.com/search?q=Theresa%20May%20pic.twitter.com%2FfWnUus4Wip&src=typd தெரசா மே தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அவர் பேச துவங்கும் முன் தமிழில் வணக்கம் என்று சொல்கிறார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் உலக முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள். இங்கிலாந்து வளர்ச்சிக்கு மிகுந்த பங்காற்றியுள்ளனர். தமிழர்களால் தாங்கள் பெருமை படுகிறோம். வரும் ஆண்டு...
தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை -வைரமுத்து விளக்கம்

தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை -வைரமுத்து விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஆண்டாளை பெருமைப்படுத்துவதே எனது நோக்கம், ஆண்டாள் பற்றிய தனது கட்டுரை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது என கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த கவிஞர் வைரமுத்துவின் அறிக்கை: “தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது; பரப்பப்பட்டும் இருக்கிறது. அருள் கூர்ந்து அந்தக் கட்டுரை முழுவதையும் தவறாமல் நீங்கள் படிக்க வேண்டும். அப்போது விளங்கும் என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது என்று. குறிப்பாக என்னைத் தங்கள் வீட்டில் ஒரு சகோதரனாய் நினைக்கிற எத்தனையோ தாயுள்ளங்கள் அதைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்று என் மனம் துடிக்கிறது. தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை. கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வதற்காகத் தம் மொத்த வாழ்வையும் ஒப்படைத்துக்கொண்ட உ...
அவனியாபுர ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்..!

அவனியாபுர ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அவனியாபுரத்தில் சீறிப் பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்..! ஜல்லிக்கட்டு புரட்சியின் மூலம் தமிழர் பண்பாட்டு அடையாளம் மீட்கப்பட்டது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறுகின்றன. பொங்கல் விழாவையொட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆவேசத்துடன் அடக்கினர். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் காளைகளைப் பாதுகாக்கும் உறுதிமொழி எடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஊர் மரியாதைக்குரிய காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதன் பின்னர் வாடிவாசலில் இருந்து காளைகள் தொடர்ந்து சீறி பாய்ந்தன. மாடுபிடி வீரர்களும் இந்த காளைகளை ஆவேசத்துடன் அ...
அமீத்ஷா மீதான போலி எண்கவுண்டர் வழக்கின் நீதிபதி மர்ம மரணம் வழக்கு நாளை மீண்டும் விசாரணை..!

அமீத்ஷா மீதான போலி எண்கவுண்டர் வழக்கின் நீதிபதி மர்ம மரணம் வழக்கு நாளை மீண்டும் விசாரணை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமீத்ஷா மீதான போலி எண்கவுண்டர் வழக்கின் நீதிபதி மர்ம மரணம் வழக்கு நாளை மீண்டும் விசாரணை..! குஜராத் மாநிலத்தில், 2005–ம் ஆண்டு, சொராபுதின் ஷேக் உள்பட 3 பேர் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டதாக, தற்போதைய பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பி.எச்.லோயா, கடந்த 2014–ம் ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி, மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தபோது, மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கும், சொராபுதின் வழக்குக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவருடைய சகோதரி, 2 மாதங்களுக்கு முன்பு சந்தேகம் எழுப்பி இருந்தார். இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்...
தை பிறந்தால் வழி பிறக்கும்… ஆட்சி கலையும்- டிடிவி தினகரன்

தை பிறந்தால் வழி பிறக்கும்… ஆட்சி கலையும்- டிடிவி தினகரன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தை பிறந்தால் வழி பிறக்கும் ஆட்சி கலையும் என்று திருக்குறுங்குடி ஆலயத்தில் வைத்து சொல்வது கடவுள் பெருமாள் சொல்வது போன்றது என்று கடந்த அக்டோபர் மாதம் சொன்ன தினகரன் அதை நினைவூட்டும் வகையில் அடுத்த கட்ட செயல்களை செய்து வருகிறார். பொங்கல் வாழ்த்து கூறும் போதே கிலி ஏற்படுத்துகின்றனர் அரசியல் கட்சியினர். தை பிறந்தால் தமிழகத்தை பிடித்துள்ள சனி ஒழியும் என்கிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். அதே போல வாழ்த்து கூறியுள்ள டிடிவி தினகரனோ, பதரைப் போல ஒரு களையை போல இன்றைய ஆட்சி அதிகாரத்தில் முளைத்துள்ளவர்களை நீக்கிட இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டசபையில் எம்எல்ஏவாக தனது செயல்பாடுகளை காட்டிய தினகரன், நேற்று சசிகலாவை சந்தித்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்து வந்திருக்கிறார். கட்சி மற்...
என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்- ரஜினிகாந்த்

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்- ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்: நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும், தை முதல் நாளில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே குளித்து, புத்தாடை அணிந்து வீட்டில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தும் டுவிட்டர் வாயிலாக தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வ...
வாழ்வில் ஏற்றம் பெரும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..! – கோடங்கி

வாழ்வில் ஏற்றம் பெரும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..! – கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, Trailer, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம், வீடியோ
பிறந்தது தை..! வாழ்வில் மாற்றத் “தை” தொழிலில் ஏற்றத் “தை” வசதியில் உயரத் “தை” உலகுக்கு வீரத் “தை” தேவையான பணத் “தை” அளவில்லாத செல்வத் “தை” எல்லாரோடும் சமாதானத் “தை” எப்போதும் சந்தோஷத் “தை” குறைவில்லாமல் பெற இறைவனின் ஆசியும், நல்ல நண்பர்களின் துணையும் இருக்கட்டும். இனிய பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துகள்..! அன்புடன் கோடங்கி @ ஆபிரகாம் லிங்கன்...