விஜய்க்கு ஒய் பாதுகாப்பு கரிசனமா? கடிவாளமா?
விஜய்க்கு ஒய் பாதுகாப்பு கரிசனமா? கடிவாளமா?
நடிகராக இருக்கும் விஜய் இப்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார்.
2026 ஆட்சியை பிடிப்போம் என்ற முழக்கத்தோடு செயல்படும் விஜய் யாருடைய தூண்டுதலாலேயே அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று ஒரு சாராரும், பாஜகவின் பி டீம் இவர் என ஒரு சாராரும், திமுகவுக்கு மாற்று விஜய் தான் என அவர் தரப்பும் சொல்லி வருகிறார்கள்.
இந்த சூழலில் பனையூர் பங்களாவை விட்டு பெரும்பாலும் வெளியே அரசியல் செய்யாத விஜய் அந்த இட்த்தில் இருந்தே அரசியல் செய்வது கடும் விமர்சனத்திற்கு உள்ளானாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜய் தன் விருப்பம் போல செயல்படுகிறார்.
சமீபத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை தனது பனையூர் பங்களாவுக்கு வரவைத்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது...









