கடலூர் மாவட்டத்துல பிறந்தது அவமானமா இருக்கு… உங்களுக்கெல்லாம் எதுக்கு ஓட்டு? – தோல்வி விரக்தியில் வாக்காளர்களை திட்டிய தங்கர்பச்சான்!?
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் கடலூர் தொகுதி பாமக.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் பாமக சார்பில் நிஜ திரைப்பட டைரக்டர் தங்கர் பச்சான் போட்டியிட்டார். ஜூன் 4ல் வெளியான தேர்தல் முடிவுகளில் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.85 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். தேமுதிக.,வின் சிவகொழுந்து 2வது இடத்தையும், பாமக.,வின் தங்கர்பச்சான் 3வது இடத்தையும் பிடித்தனர்.
தங்கர்பச்சான் வாங்கிய ஓட்டுகள் 2,05,244 (19.9 சதவீதம்). தேர்தலில் தோல்வியடைந்தாலும், தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கு தங்கர் பச்சான் சென்றுள்ளார்.
அப்போது திறந்தவேனில் நின்று அவர் பேசியதாவது:
என்னை பார்ப்பவர்கள் நீங்கள் எப்படிப்பட்ட படங்களை எடுப்பவர், தயவு செய்து உங்களுக்கு அரசியல் வேண்டாம் என்ற...









