செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

ஓ.பி.எஸ். மகன் வெற்றி முறைகேடால் கிடைத்தது என குற்றம்சாட்டி வழக்கு தொடர இளங்கோவன் முடிவு

ஓ.பி.எஸ். மகன் வெற்றி முறைகேடால் கிடைத்தது என குற்றம்சாட்டி வழக்கு தொடர இளங்கோவன் முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தேனி தொகுதியில் அதிக அளவில் முறைகேடு நடந்ததற்காக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்கிறார் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 38 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றிக்காக உழைத்த கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதும் அதிகார பலம், பண பலத்தால் மோடி வெற்றி பெறுள்ளார். தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அதிகாரபலம், பணபலத்தால் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எனினும் தேனியில் 4½ லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஓ.பன்...
மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி..!

மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி..! சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது அக்கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்டாலின் கட்சித்தலைவர் ஆன பின் நடந்த தேர்தலில் இந்த இமாலய வெற்றி குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.     கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, ஜெகத்...
டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.இராசாவுக்கு திமுகவில் புதுப்பதவி

டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.இராசாவுக்கு திமுகவில் புதுப்பதவி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.இராசாவுக்கு திமுகவில் புதுப்பதவி   டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.இராசாவுக்கு திமுகவில் புதுப்பதவி சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு செய்யப்பட்டார். திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டார். திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டார்....
கவர்னர் அழைப்பு… 30ம் தேதி ஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி..!

கவர்னர் அழைப்பு… 30ம் தேதி ஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு படு தோல்வி அடைந்ததோடு ஜெகன் மோகன் ரெட்டி இமாலய வெற்றி பெற்றதால் அவரை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆந்திரா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஐதராபாத் சென்று, கவர்னர் நரசிம்...
ம.நீ.ம. என்ற 14 மாத குழந்தையை மக்கள் நடக்க வைத்திருக்கிறார்கள்… தேர்தல் முடிவு பற்றி கமல்

ம.நீ.ம. என்ற 14 மாத குழந்தையை மக்கள் நடக்க வைத்திருக்கிறார்கள்… தேர்தல் முடிவு பற்றி கமல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
'மநீம' என்ற 14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர். தமிழக மக்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளோம்; கடமையை செய்ய காத்திருக்கிறோம் நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் பேசக்கூடிய அளவுக்கு மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். நீங்கள் (மோடி)  வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் - கமல்ஹாசன்...
முதல் முறையாக போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் திமுக வெற்றி..!

முதல் முறையாக போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் திமுக வெற்றி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதல் முறையாக போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் திமுக வெற்றி..! தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அதிலும் தி.மு.க. போட்டியிட்ட 19 இடங்களிலும் அக்கட்சி வேட்பாளர்களே வெற்றி வாகை சூடினார்கள். அதேபோல், தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8-ல் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தோல்வி அடைந்தார். புதுச்சேரியை காங்கிரஸ் கைப்பற்றியது. அதேபோல், தி.மு.க. கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை போட்டியிட்ட தலா 2 இடங்களிலும் வெற்றி வாகை சூடியது. அதேபோல், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை போட்டியிட்ட தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ...
தலை வணக்கம் தமிழகமே! – ஸ்டாலின் நன்றி

தலை வணக்கம் தமிழகமே! – ஸ்டாலின் நன்றி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தலை வணக்கம் தமிழகமே! - ஸ்டாலின் நன்றி நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம் என்று குறுஞ்செய்தி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற்றதற்கு வாழ்த்து சொல்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக தலைவர் வைகோ சந்தித்தார். அப்போது ஸ்டாலினை கட்டி அணைத்து வாழ்த்தினார் வைகோ....
மீண்டும் சாதித்து விட்டீர்கள் – மோடியை வாழ்த்தி ரஜினி டிவீட்..!

மீண்டும் சாதித்து விட்டீர்கள் – மோடியை வாழ்த்தி ரஜினி டிவீட்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  மீண்டும் சாதித்து விட்டீர்கள் - மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினி நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடிக்கு ரஜினி வாழ்த்துக் கூறியிருக்கிறார். அவரது டிவிட் பக்கத்தில் "மோடிஜி நீங்கள் சாதித்து விட்டீர்கள். வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்....
உடல்நல குறைவு காரணமாக மருத்துவனையில் நடிகை குஷ்பு அனுமதி

உடல்நல குறைவு காரணமாக மருத்துவனையில் நடிகை குஷ்பு அனுமதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  உடல்நல குறைவு காரணமாக மருத்துவனையில் நடிகை குஷ்பு அனுமதிக்கப்பட்டார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று மாலை நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீர் உடல் நலக்குறைவு காரணமாக குஷ்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.   https://twitter.com/khushsundar/status/1131262258321903616?s=19   இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பான டிவி விவாதங்களில் தன்னால் கலந்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன், என்று குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தென்மேற்கு பருவமழை அடுத்த மூன்று நாட்களில் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் ஜூன் 6 ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக அந்தமான் நிகோபார் தீவுகளில் பலத்த மழை பெய்துவருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவ மழை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது .அதில் தெற்கு வங்கக்க்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் போன்ற இடங்களில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது இப்பருவமழை தொடங்குவதற்குச் ஏற்ற சூழல்  நிலவும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னும் 2  நாட்களில் தொடங்கும் என்று தற்போது தகவல் வெளியாகிறது...