எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக்கொள்ள துடிப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும் – கொதித்த கமல்
எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக்கொள்ள துடிப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும் - கொதித்த கமல்
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் , மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ள கமல்ஹாசன், மதுரை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் என மாவட்டவாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மக்கள் மத்தியில் பேசிய கமல் ஹாசன், “மக்கள் திலகம் எம்ஜிஆர் எங்கள் சொத்து. அவர் மடியில் அமர்ந்தவன் நான்” என தெரிவித்தார். முன்னதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், எம்ஜிஆரிடமிருந்து விருது வாங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கமலின் நெற்றில் எம்ஜிஆர் முத்தமிடும் நெகிழ்ச்சியான காட்சியும் இடம்பெற்றுள்ளது
இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி பரப்புரை செய்யும் க...









