ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

8 வழிச்சாலைக்கு எந்த விவசாயியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற முதல்வருக்கு தர்மபுரி விவசாயிகள் கண்டனம்

8 வழிச்சாலைக்கு எந்த விவசாயியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற முதல்வருக்கு தர்மபுரி விவசாயிகள் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்மையான விவசாயி என்றால், சேலம் 8 வழிச்சாலை உறுதியாக வராது என்று அவர் எழுத்துப்பூர்வமாக அறிக்கை விட வேண்டும் என்று சேலம் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு விசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள இருளப்பட்டியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, வரும் 16ஆம் தேதி தர்மபுரி எம்.பி., செந்தில்குமாரை சந்தித்து, திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக 8 வழிச்சாலைக்கு நிரந்தர தடை விதிக்க கோரிக்கை விடுக்க முடிவெடுக்கப்பட்டது.   மேலும், 8 வழிச்சாலைக்கு எந்த விவசாயியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறும் முதல்வருக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் ஏற்கனவே இருக்கும் பல சா...
‘சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள்’ டார்ச் சின்னம் மறுக்கப்பட்டதில் கமல் ஆவேசம்!

‘சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள்’ டார்ச் சின்னம் மறுக்கப்பட்டதில் கமல் ஆவேசம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “சுதந்திரம், ஜனநாயகம் அன்றாடும் கவனிக்கப்பட வேண்டும். இந்திய ஜனநாயகம் நோய்வாய்ப்பட்டு இருக்கிறது. அதனால் தான் எங்கள் கட்சிகளில் நிறைய மருத்துவர்கள் உள்ளனர். அரங்கம் எங்கும் தலைகளை பார்க்கவில்லை, தலைவர்களை பார்க்கிறேன். தமிழகத்தில் எங்களுக்கான டார்ச் லைட் சின்னம் தேர்தல் ஆணையம் மறுக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் பல மாற்றங்கள் செய்ய காத்து கொண்டு இருக்கிறோம். சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள். நேர்மை தான் எங்கள் யுத்தி. பணத்திற்காக வாக்குகளை விற்காதீர்கள்” என தெரிவித்துள்ளார்....
விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பட தடை நீக்கம்!

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பட தடை நீக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளனர். விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் மாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் தாங்கள் வாங்கியதாகவும் எனவே விநியோக உரிமை தங்களுக்குத் தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, மாமனிதன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா சார்பில் ஆஜரான வழக்க...
தமிழகத்தில் கமல் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை!

தமிழகத்தில் கமல் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்பட சில மாநிலங்களுக்கு 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.  2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தற்போது சின்னம் ஒதுக்கியுள்ளது. * சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம் * அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியுள்ளது. * தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு * புது...
அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவரும் சண்ட்ரா லிண்ட்செ என்ற பெண்ணுக்கு போடப்பட்டது. அமெரிக்க நேரப்படி காலை 9.30 மணிக்கு சண்ட்ராவுக்கு அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது....
கமிஷன் அரசாங்கம் என அதிமுகவை வசை பாடிய கமல்

கமிஷன் அரசாங்கம் என அதிமுகவை வசை பாடிய கமல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கமிஷன் அரசாங்கம் என அதிமுகவை வசை பாடிய கமல் டிவிட்டரில் கமல் வெளியிட்ட பதிவு; "கமிஷன் அரசாங்கத்தை" துரத்தி விட்டு "mission அரசாங்கம்" அமைக்க கரம் கோர்க்கவேண்டும் . தமிழகத்தில் தொழில்முனைவோருக்கான புறச்சூழல் புதர் மண்டிக் கிடக்கிறது; இந்தக் காட்டைத் திருத்தும் முன்னத்தி ஏராக மக்கள் நீதி மய்யம் இருக்கும். "கமிஷன் அரசாங்கத்தை" துரத்தி விட்டு "mission அரசாங்கம்" அமைக்க  தொழில்முனைவோர் கரம் கோர்க்கவேண்டும்.   https://twitter.com/ikamalhaasan/status/1338387365862096898?s=20...
டெல்லியில் போராடும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்!

டெல்லியில் போராடும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியில் போராடும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். மத்திய அரசின் வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 19 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக டெல்லி ஹரியானா பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளின் போராட்டம் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. விவசாயிகள் மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டம் தற்போது தீவிரமாக வலுத்து வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியில் போராடும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக உண்ணாவிரத போராட்டத்தை இன்று முதல் துவங்கியுள்ளனர்....
41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன்தான் கூட்டணி… இல்லை எனில், தேமுதிக தனித்து களமிறங்குமாம்!

41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன்தான் கூட்டணி… இல்லை எனில், தேமுதிக தனித்து களமிறங்குமாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன்தான் கூட்டணி... இல்லை எனில், தேமுதிக தனித்து களமிறங்குமாம்! 2021 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டிவரும் நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 67 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது, சட்டமன்ற தேர்தல், கட்சிப்பணிகள், களப்பணிகள், கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், பிரசார ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. ‘டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு ஒரு நிரந்தர முடிவு ஏற்படுத்திட முன்வர வேண்...
இந்தாண்டின் கடைசி சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது

இந்தாண்டின் கடைசி சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தாண்டின் கடைசி சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது சூரியன் மற்றும் பூமிக்கு இடையே சரியாக ஒரே நேர்க்கோட்டில் நிலா  வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டின் கடைசி முழு சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.03 மணிக்கு தொடங்கி நாளை நள்ளிரவு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பூமி மற்றும் சூரியனுக்கு இடையே நிலவு கடந்து செல்லும்போது சூரியன் மறைக்கப்படுவது சூரிய கிரகணம் எனப்படுகிறது. இந்த நேரத்தில், நிலவின் நிழல் பூமியின் மேற்பரப்பின் மீது விழும். பொதுவாக சூரிய கிரகணம் பகலிலும் சந்திர கிரகணம் இரவிலும் நிகழும். இந்திய நேரப்படி இந்த கடைசி சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் நம்மால் பார்க்க முடியாது. அதே நேரத்தில் சிலி, அர்ஜென்டைனா நாடுகளில் பகல் நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால் அங்கு பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்....