சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

ஓட்டு கேட்டு  வராதீர்கள் -விஜய் ரசிகர் வீடுகளில் தொங்கும் போர்டுகளால் அதிமுக கூட்டணி ஷாக் !

ஓட்டு கேட்டு வராதீர்கள் -விஜய் ரசிகர் வீடுகளில் தொங்கும் போர்டுகளால் அதிமுக கூட்டணி ஷாக் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருவதையொட்டி தமிழகத்தில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவினர் ஓட்டுக் கேட்டு வர வேண்டாம் என விஜய் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ‘சர்கார்’. அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த கந்துவட்டிக் கொடுமை, மருத்துவத்துறை குறைபாடுகள் என பலவற்றையும் சுட்டிக்காட்டி இதில் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சர்கார் பட பேனர்களை எல்லாம் கிழித்து எரிந்தனர் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஓட்டுக்கேட்டு வரும் அதிமுகவினரை புறக்கணிக்கும் வகையில், அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம், இது விஜய் ரசிகன் இல்லம் என்ற பதாகைகளை வீட்டு வாசலில் மாட்டி வைத்திருக்கின்றனர்...
நதியை இணையுங்கள்… கமலுக்கும் எனக்கும் உள்ள நட்பை கெடுக்காதீர்கள் – ரஜினி

நதியை இணையுங்கள்… கமலுக்கும் எனக்கும் உள்ள நட்பை கெடுக்காதீர்கள் – ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படப்பிடிப்பு கிளம்பிய சூழலில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு பற்றிய வாக்குறுதி உள்ளது வரவேற்கத்தக்கது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நதி நீர் இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டில் நதிகளை இணைத்தால் தண்ணீர் பிரச்னை, வறுமை தீரும் என தெரிவித்த ரஜினி, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே நதிகள் இணைப்பு குறித்து தாம் வலியுறுத்தியதாகவும், அந்த திட்டத்திற்கு பகீரத்ன யோஜனா என பெயர் வைக்குமாறு அவரிடம் கூறியதாகவும், பகீரத்ன என்றால் சாத்தியமில்லாதது சாத்தியமாகும் என்பது பொருள் என்றும் தெரிவித்தார். அப்போது, கமலுக்கு ஆதரவா என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த ரஜினி, யாருக்கும் ஆதரவு இல்லை என்ற என்னுடைய தேர்தல் நிலைப்பாட்டி...
சினிமா தயாரிப்பாளரிடம் 40 லட்சம் மோசடி செய்த சென்னை தியேட்டர் உரிமையாளர் தம்பதி..!

சினிமா தயாரிப்பாளரிடம் 40 லட்சம் மோசடி செய்த சென்னை தியேட்டர் உரிமையாளர் தம்பதி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சினிமா தயாரிப்பாளரிடம் 40 லட்சம் மோசடி செய்த தியேட்டர் உரிமையாளர் தம்பதி..! சென்னை திருவெற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டர் உரிமையாளர்கள் சுசீலா இவரது கணவர் தவமணி. இவர்களுடன் சினிமா தயாரிப்பாளர் தங்களது தியேட்டர் தொழிலை மேம்படுத்த பங்குதாரராக இணைத்து கொண்டு படங்கள் வாங்கி வெளியிடும் தொழில் செய்து வந்தார்கள். இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு MSM தியேட்டரை சீரமைக்க 25 லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் தங்கராஜிடம் கடனாக கேட்டிருக்கிறார் சுசீலா. இந்த கடனுக்காக ராயபுரத்தில் உள்ள சொத்தை அடமானமாக எழுதி கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகையை தனது வங்கியில் இருந்து தங்கராஜ் காசோலை மூலம் சுசீலாவுக்கு வழங்கி இருக்கிறார். கடன் வாங்கிய சில மாதங்களில் கணவன் மனைவியான சுசீலா-தவமணி தம்பதியின் வரவு செலவு கணக்குகளில் தவறு இருப்பது தெரிந்ததும் அவர்களோடு இணைந்து செய்து வந்த தொழிலில் இருந்து தங்கராஜ் விலக...
பெருங்காமலூர் நல்லூர் வலி மிகுந்த வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு வீரத்திருவிழா..!

பெருங்காமலூர் நல்லூர் வலி மிகுந்த வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு வீரத்திருவிழா..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  *வீரத்திருவிழா - 100* *சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் கடந்த 2015 - வது ஆண்டு முதல், யுத்தம் நடைப்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் மன்னில் வருட வருடம் வீரத்திருவிழா மிகப் சிறப்பாக நடைபெற்று வருகிறது.* *பிரமலைக்கள்ளர்கள்பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களிடம் 03.04.1920 ல் கைரேகை வைக்கமாட்டோம் என்று எதிர்ப்பு காட்டிய விடுதலைப் போரில் 17 வீரத்தியாகளின் உயிர் தியாகம் செய்ததின் 100 ஆம் ஆண்டு துவக்கம்.* *படுகாயம் அடைந்த தியாகிகளுக்கு தண்ணீர் கொடுத்த வீரத்தாய் மாயக்கா நிறைமாத கர்பிணியும் அதில் பலியானார்.* *இந்த 100 ஆண்டு துவக்க விழாவை வீரம் விளைந்த பெருங்காமநல்லூர் மண்ணில் கொண்டாட, சீர்மரபினர் நலச்சங்கம் எடுத்த முயற்சிக்கு, கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது தான் மிகவும் சோதனை.* *சோதனைகளை கடந்து ஒரு 15 மணி நேரத்தில் மாற்று ஏற்பாட...
ரஜினியின் அரசியல் தாமதம் நல்லதுக்கா..!? ஜெ.,அண்ணன் மகன் தீபக் சூசக தகவல்

ரஜினியின் அரசியல் தாமதம் நல்லதுக்கா..!? ஜெ.,அண்ணன் மகன் தீபக் சூசக தகவல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல், காலியான எம்.எல்.ஏ., தொகுதிகளில் இடைத்தேர்தல் என தமிழகம் மிக பரபரப்பாக காணப்படுகிறது. கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழக அரசியலில் எதிர் எதிர் அணியின் தலைவர்களாக இருந்த செல்வி.ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி இருவரும் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் முடிவு எல்லாராலும் கவனிக்க படும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் தீபக்’கிடம், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற மற்றும் இடை தேர்தல் பற்றி கருத்து கேட்டோம். அதற்கு அவர் கூறிய பதில்: “ரஜினிகாந்த் கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இந்த தேர்தலே வேறு மாதிரி இருந்திருக்கும். ரஜினிகாந்த் போட்டியிடாத தேர்தலை தான் இங்கு மக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி பார்த்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் ரஜினி அரசியலுக்கு வரவில்லை ...
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் “நீட்” ரத்து – ராகுல்காந்தி அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் “நீட்” ரத்து – ராகுல்காந்தி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
*காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல் காந்தி.* *காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.* *விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.* *மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.* *'நியாய்' எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்.* *100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் - காங். தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு.* *2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் - காங். தேர்தல் அறிக்கை.* *தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - காங். தேர்தல் அறிக்கை.* *இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை - காங். தேர்தல் அறிக்கை.*...
நயன்தாரா பற்றிய சர்ச்சை பேச்சு திமுகவில் இருந்து துரத்தப்பட்ட ராதாரவி..!

நயன்தாரா பற்றிய சர்ச்சை பேச்சு திமுகவில் இருந்து துரத்தப்பட்ட ராதாரவி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த நடிகர் ராதாரவி திமுக வில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். நயன்தாராவை விமர்ச்சித்த ராதாரவி சமீபத்தில் நடந்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதெல்லாம் சீதையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றும், நயன்தாரவைப் பற்றி வராத செய்திகளே கிடையாது மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்கள் என்றும் அருவருக்கத்தக்க வகையில் மேடையிலேயே பேசியிருக்கிறார் நடிகர் ராதாரவி. அவரது அடிப்படை நாகரீகமற்ற பேச்சுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களைதெரிவித்து வருகின்றனர். அவர் மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விக்னேஷ் சிவன், சின்மயி உள்பட பலர் வலியுறுத்தி வருகி...
முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் சேதுபதி!

முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ் சினிமாவின் செம பிஸியான நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.சூப்பர் டீலக்ஸ்,மாமனிதன்,சிந்துபாத் என கைவசம் நிறைய பணடங்களை ரிலீசுக்கு தயாராக வைத்துள்ளார். அடுத்ததாக வாலு,ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தருடன் விஜய்சேதுபதி இணைகிறார். இந்த படத்தை விஜயா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் ,ராஷி கண்ணா நடிக்கின்றனர். சூரி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதெராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. இதனை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் பதிவிட்டுள்ளார்....
‘பொள்ளாச்சி சம்பவத்தை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’!

‘பொள்ளாச்சி சம்பவத்தை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
M பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தரமானதாகவும் கருத்துள்ளதாகவும் “ கருத்துக்களை பதிவு செய் ”என்ற படத்தை தயாரிக்கிறது.. இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள் தான். இணை தயாரிப்பு - JSK கோபி. இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் ராகுல். இவர் ஏற்கெனவே ஜித்தன் 2 ,1 A.M என்று இரண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்று இருக்கிறார். அந்த இரண்டு படங்களுமே ஹாரர் டைப் படங்கள். இப்போது இயக்கும் கருத்துக்களை பதிவு செய் படமும் ஹாரர் டைப் படமே. ஹாரர் டைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு என்பதை நம்புகிறவன் நான் என்கிறார் ராகுல்... படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது...சமூக வலை தல மான பேஸ்புக் பற்ற...
பொள்ளாச்சி பாலியல் குற்றங்களில் உண்மையை கண்டறிய திலகவதி IPS தலைமையில் உருவான குழு!

பொள்ளாச்சி பாலியல் குற்றங்களில் உண்மையை கண்டறிய திலகவதி IPS தலைமையில் உருவான குழு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் களமிறங்கும் 28 பேர் கொண்ட நிபுணர்கள் குழு! பொள்ளாச்சியில் எழுந்த பாலியல் குற்றங்கள் தமிழகத்தையே அதிர வைத்துள்ளன. குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஒவ்வொரு நாளும் கசிய கசியப் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன. குற்றங்களின் தீவிரத்தைவிடவும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது, அரசு அந்த வழக்குகளைக் கையாண்ட விதம். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து காவல் துறையினரும் விசாரணையை மூடிமறைப்பதாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பத்திரிகையாளர் சந்திப்பில் காவல் துறை கண்காணிப்பாளர், ஆளும் கட்சியினருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்ததும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிட்டதும் காவல்துறையின் அலட்சியத்தை வ...