தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் – குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி
தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் - குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி
கொரானா பீதி, வைரஸ் பரவல் , உலக அளவில் தொற்று தாக்கத்திலும், பலி எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருந்தாலும் இந்த பதட்டத்திலும் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அண்மையில் டிரம்ப் பற்றி பேசிய ஜோ பிடன், “வரும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோற்றால் அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியே வரமாட்டார். அவரால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தேர்தலில் முறைகேடு செய்ய முயற்சி செய்வார்” எனக் குற்றம் சாட்டினார்.
இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்க...









