சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

அல்லு அர்ஜூனின் புஷ்பா பட பாணியிலேயே செம்மரங்களை கடத்தியவர் கைது!

அல்லு அர்ஜூனின் புஷ்பா பட பாணியிலேயே செம்மரங்களை கடத்தியவர் கைது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தால் கவரப்பட்டு திரைப்பட பாணியிலேயே செம்மரங்களை கடத்தியவர் மகாராஷ்டிராவில் சிக்கியிருக்கிறார். கைதான கடத்தல் நபர் லாரி ஓட்டுநர் யாசீன் இனாயதுல்லா ஆவர். அண்மையில் புஷ்பா படத்தை பார்த்த இந்த நபர் தனது லாரியிலேயே செம்மரங்களை கடத்தியிருக்கிறார். கர்நாடக ஆந்திர எல்லையில் இருந்து செம்மரங்களை கடத்திக் கொண்டு மகாராஷ்டிராவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்திருக்கிறார் யாசீன். அப்போது சங்லி மாவட்டத்தின் மீரஜ் நகர் காந்தி செளக் பகுதியை கடக்கும் போதுதான் மகாராஷ்டிரா போலிஸாரால் வசமாக பிடிபட்டிருக்கிறார். அப்போது அவரது லாரியில் இருந்து 2.45 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்....
3 வயது குழந்தையை கரடி அகழிக்குள் தள்ளி விட்ட கொடூர தாய்!

3 வயது குழந்தையை கரடி அகழிக்குள் தள்ளி விட்ட கொடூர தாய்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்டில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. அங்குள்ள அகழியில் நின்று கொண்டிருந்த கரடியை எல்லோரும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தையை அகழிக்குள் தள்ளிவிட்டார். அந்தப் பெண் தனது குழந்தையை அகழிக்குள் தள்ளிவிட்ட காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அகழிக்குள் விழுந்த அந்த சிறுமிக்கு அருகில் சென்று கரடி மோப்பம் பிடிக்கத் தொடங்கியது.   இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் இதுகுறித்து பூங்கா ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து அகழிக்குள் இருந்த கூண்டுக்குள் கரடியை விரட்டியடித்த நிலையில், அந்தக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. ஆனால், இந்த சம்பவம் குறித்து எதையும் அலட்டிக் கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த ...
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின்

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் ஆளுநர் குறித்த அண்ணாவின் கேள்வியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையை அடுத்து நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக...
“இப்போது மட்டுமல்ல வாழ்நாளில் எப்போதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது” – நாடாளுமன்றத்தில் ஆனல் தெறிக்க விட்ட ராகுல் காந்தி

“இப்போது மட்டுமல்ல வாழ்நாளில் எப்போதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது” – நாடாளுமன்றத்தில் ஆனல் தெறிக்க விட்ட ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸின் வயநாடு தொகுதி எம்.பி.யும், கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, "ஏழைகளுக்கு ஓர் இந்தியா, பணக்காரர்களுக்கு ஓர் இந்தியா" என பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், “மாநில உரிமைகளைக் காப்பதில் ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என்றார். ராகுல்காந்தி தனது பேச்சில், "குடியரசுத் தலைவர் உரையில் பேசப்படாத 3 அடிப்படை விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். முதலாவதாக, நான் மிக முக்கியமானதாகக் கருதுவது, 'இரண்டு இந்தியா' யோசனை. இங்கு இரண்டு இந்தியா உள்ளன. அபரிமிதமான செல்வம், அபரிமிதமான அதிகாரத்தை வைத்துக்கொண்டு, வேலை தேவையில்லாத, தண்ணீர் இணைப்பு, மின்சா...
4 பெட்ரூம், 8 மனைவிகள் – அட்டவணை போட்டு படுக்கையை பகிரும் தாய்லாந்து ஹீரோ.!

4 பெட்ரூம், 8 மனைவிகள் – அட்டவணை போட்டு படுக்கையை பகிரும் தாய்லாந்து ஹீரோ.!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  ஒன்ன வைச்சி ஒழுங்கா வாழுறதுக்கே வழியில்ல... ஒருத்தன் 8 பேரோட ஒரே வீட்டுல சந்தோஷமா வாழ்ந்தா... கேக்கவே செமய்யா இருக்கில்ல... தாய்லாந்தில் வசிக்கும் டாட்டூ கலைஞர் ஒருவர் தனது எட்டு மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழும் செய்தி உலகம் முழுக்க உள்ள பெருசுகள் முதல் சிறுசுகள் வரையில் வயிறு எரிய வைத்துள்ளது... யார்ரா அவன் ? எட்டு பேரா ? எப்படி ? எப்படி ?எனக்கே அவன பார்க்கனும் போல இருக்கு என ஆர்வத்துடன் கேட்க்கின்றனர். தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஓங் டாம் சொரோட், தான் எப்படி எட்டு மனைவியரை திருமணம் செய்து அனைவருடனும் ஒரே வீட்டீல் மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்பதை பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்தார், அந்நிகழ்ச்சி யூடியூப்பில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. நிகழ்ச்சியில் சோரோட் தனது ஒவ்வொரு மனைவியையும் அறிமுகப்படுத்தி அவர்கள் எப்படி அவரை  சந்தித்தார்கள்...
50ரூபாய் மதிப்புள்ள சாப்பாட்டை 10ரூபாய்க்கு வழங்கும் கார்த்தி மக்கள் நல மன்றம்!

50ரூபாய் மதிப்புள்ள சாப்பாட்டை 10ரூபாய்க்கு வழங்கும் கார்த்தி மக்கள் நல மன்றம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    50ரூபாய் மதிப்புள்ள சாப்பாட்டை 10ரூபாய்க்கு வழங்கும் கார்த்தி மக்கள் நல மன்றம். கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ரூ50 மதிப்புள்ள தரமான, சுவையான பிரிஞ்சி சாதம் (வெஜிடபிள் பிரியாணி) ரூ 10 க்கு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சுத்தமான முறையில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.   https://twitter.com/onlykodanki/status/1489182806618296323?s=20&t=WfBBch_nL1hwEO_17u6ihA தினசரி சராசரியாக100 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள்; குறிப்பாக ஊருக்கே உணவு சப்ளை செய்யும் ஸ்விக்கி, ஜூமோட்டோ டெலிவரி பாய்கள் போன்றோர் இந்த உணவகத்தில் தினசரி உணவு உட்கொள...
குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொண்டவர்கள் முதல்வரிடம் வாழ்த்து!

குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொண்டவர்கள் முதல்வரிடம் வாழ்த்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட (National Service Scheme) மாணவ, மாணவியர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.   https://twitter.com/CMOTamilnadu/status/1489173122935058432?s=20&t=WfBBch_nL1hwEO_17u6ihA
கோயில் தேரோட்டத்தை தடுக்கிறார்? I மோசடிக்கு துணை போகிறார்? நக்கீரன் கோபால் மீது எழும்பிய புகார்

கோயில் தேரோட்டத்தை தடுக்கிறார்? I மோசடிக்கு துணை போகிறார்? நக்கீரன் கோபால் மீது எழும்பிய புகார்

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, செய்திகள், வீடியோ
    கோயில் தேரோட்டத்தை தடுக்கிறார்? I மோசடிக்கு துணை போகிறார்? நக்கீரன் கோபால் மீது எழும்பிய புகார்   https://youtu.be/OOOVOFO8rZM
வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் கமல்ஹாசன் -கோவையில்  2 நாட்கள் பிரசாரம்!

வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் கமல்ஹாசன் -கோவையில் 2 நாட்கள் பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். கமல்ஹாசன் ஒரு மாதம் கோவையிலேயே தங்கி இருந்து, நகரில் இருக்கக்கூடிய முக்கிய பகுதிகளுக்கு ரோடுஷோ மூலமும், வீதி வீதியாக நடந்து சென்றும் மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கமலின் இந்த பிரசாரம் அப்போது மக்கள் மத்தியில் வித்தியாசமாகவும், மிக வரவேற்பையும் பெற்றது. இருப்பினும் அந்த தேர்தலில் கமல்ஹாசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசனிடம் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கோவையில் தங்கியிருந்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்ட போதும், எப்படி தோற்றோம் என்பதை மக்கள் நீதி மய்யத்தினர் தேர்தல் முடிந்த கையோடு, வார்டு மற்றும் பூத் வாரியாக ஆய்வு செய்தனர். அப்போது சில பூத்களில் மட்டுமே வாக்குகள் பின்தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங...
கோழிக்கோடு விமான நிலையத்தில் 23 கிலோ தங்கம் பறிமுதல்!

கோழிக்கோடு விமான நிலையத்தில் 23 கிலோ தங்கம் பறிமுதல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வருவோரில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சி சுங்க அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர். ஆபரேசன் டெசர்ட் ஸ்டார்ம் என்ற பெயரில் களம் இறங்கிய அதிகாரிகள், நேற்று காலை முதல் இரவு வரை கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்த அனைத்து விமானங்களையும் கண்காணித்தனர். இதில் சந்தேகப்படும் நபர்கள், பயணிகள் அனைவரையும் தனிமைப்படுத்தினர். பின்னர் அவர்களின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. இச்சோதனையில் 23 கிலோ கடத்தல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தல் தங்கம் அனைத்தும் பயணிகள் தங்களின் உடமைகள் மற்றும் தாங்கள் கொண்டு வந்த பொருள்களில் மறைத்து வைத்திருந்தனர். அவை அனைத்தையும் அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றினர். அதிகாரிகள் கைப்பற்றிய தங்கத்தின் மதிப்பு ரூ.10.50...