செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

கடலில் விழுந்த விமானத்தில் தப்பித்த விமானியின் செல்பி வீடியோ பரபரப்பு..!

கடலில் விழுந்த விமானத்தில் தப்பித்த விமானியின் செல்பி வீடியோ பரபரப்பு..!

HOME SLIDER, NEWS, செய்திகள், வீடியோ
  அமெரிக்கா நாட்டில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சிறிய ரக விமானம் ஒன்று கடலுக்குள் விழுந்தது. அப்போது தாங்கள் விமானத்துடன் கடலுக்குள் விழுந்துவிட்டோம் என விமான பயணிகள் இன்ஸ்டாகிராமில் இதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகிவருகிறது. அமெரிக்கா நாட்டில் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் சிலர் சிறிய ரகவிமானத்தில் வானில் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கடலுக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்த விமானி மற்றும் பயணிகளும் கடலில் விழுந்தனர்.   https://youtu.be/Tov_9tGq5p0 பின்னர் இவர்கள் விழுந்தது பற்றி அமெரிக்க மீட்புப்படை இவர்களை காற்பாற்ற விரைந்தது. அப்போது தாங்கள் கடலில் விழுந்தது முதல் மீட்புப்படை மீட்கப்பட்டது வரை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து அதை பயணிகள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். தற்போது இது வ...
ஏலச்சீட்டு மோசடி பிக்பாஸ் கவின் அம்மாவுக்கு 5 ஆண்டு சிறை..!

ஏலச்சீட்டு மோசடி பிக்பாஸ் கவின் அம்மாவுக்கு 5 ஆண்டு சிறை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ஏலச்சீட்டு மோசடி பிக்பாஸ் கவின் அம்மாவுக்கு 5 ஆண்டு சிறை..! திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் அருணகிரி- தமயந்தி. இவங்களுடைய மகன் சொர்ணராஜன், மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. இவர்கள் 5 பேரும் அரசிடம் இருந்து எந்தவித அனுமதியும் பெறாமல், 1998-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை திருச்சி கே.கே.நகர் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை நடத்தி வந்துருக்காய்ங்க. இதில் இதில் 34 நபர்கள் தவணை முறையில் சீட்டு பணம் கட்டி வந்துள்ளனர். ஆனால் பணம் கட்டியவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள்  பணத்தை திருப்பி தரவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு சேரவேண்டிய பணம் ரூபாய் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை பெற்றுத் தர வேண்டும் என, கடந்த 2007-ஆம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த...
சினிமாவாகும் வாஜ்பாய் வாழ்க்கை..!

சினிமாவாகும் வாஜ்பாய் வாழ்க்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  சினிமாவாகும் வாஜ்பாய் வாழ்க்கை..! அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் தற்போது படமாகி வெளி வருகின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய். ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கையை படங்களாக எடுத்து வெளியிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்க்கையும் படமாக வெளிவந்தது. இதுபோல் பால்தாக்கரே வாழ்க்கை படமும் வெளியானது. தற்போது மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படங்களாகின்றன. இந்த வரிசையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது. பா.ஜனதாவின் மூத்த தலைவரான வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. இந்த புத்தகத்தை மையமாக வைத்து வாஜ்பாய் வாழ்க்கையை ...
பெங்களூர் ஆஸ்பத்திரியில்  கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்தார் ரஜினி..!

பெங்களூர் ஆஸ்பத்திரியில்  கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்தார் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பெங்களூர் ஆஸ்பத்திரியில்  கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்தார் ரஜினி..! தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணன். இவர் பெங்களூரில் வசிக்கிறார். அவருக்கு  காலில் ஏற்பட்ட பாதிப்பால் நடக்க சிரமபட்டார். இதையடுத்து அவருக்கு காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அண்ணன் சத்ய நாராணாவை சந்தித்து நலம் விசாரிக்க பெங்களூரு வந்தார் ரஜினி. ஆஸ்பத்திரி வந்து அண்ணனை சந்தித்த ரஜினியை ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்று போட்டோ எடுத்து கொண்டனர்....
விஜய் பட இயக்குனரை நடுரோட்டில் அவமதித்த போக்குவரத்து போலீஸ்… அரஜகமாக வசூல் வேட்டையாடிய கொடுமை..!

விஜய் பட இயக்குனரை நடுரோட்டில் அவமதித்த போக்குவரத்து போலீஸ்… அரஜகமாக வசூல் வேட்டையாடிய கொடுமை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    காவல்துறையில் களைகள் ( *நடிகர் விஜய்யை வைத்து திருமலை, ஆதி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரமணா சந்திரசேகர் போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும், அதிகார மீறலில் ஈடுபட்டதாகவும் வேதனை* ) கண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதில் பல நேர்மையான அற்புத மனிதர்களையும் தனிப்பட்டமுறையில் எனக்கு மிக நெருங்கிய பரிட்சையமும், நட்பும் உண்டு. ஆனால்... இன்று மேலே படத்திலுள்ள, நான் சந்தித்த நேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் K. குமரன், காவலர் M. ராமர் இருவரும் அந்த கண்ணியமான நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல் ஒரு சராசரி மனிதப்பிறவியாகக்கூட கருதத்தகுதியற்றவர்கள். இன்று காலை நான்,என் மனைவி, மகள் உட்பட காரில் சென்றபோது சாந்தோமில் என் வீட்டருகில் காவல்துறை சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து...
விரும்பி பாலியல் உறவு வைத்துக் கொண்டு பின்னர் பிரிந்து புகார் அளித்தால் அது பாலியல் பலாத்கார வழக்கில் சேராது – உச்சநீதிமன்றம் அதிரடி

விரும்பி பாலியல் உறவு வைத்துக் கொண்டு பின்னர் பிரிந்து புகார் அளித்தால் அது பாலியல் பலாத்கார வழக்கில் சேராது – உச்சநீதிமன்றம் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஒ   விரும்பி பாலியல் உறவு வைத்துக் கொண்டு பின்னர் பிரிந்து புகார் அளித்தால் அது பாலியல் பலாத்கார வழக்கில் சேராது - உச்சநீதிமன்றம் அதிரடி திருமணம் நடக்காது என்று தெரிந்தும் ஒரு பெண் தொடர்ந்து ஒருவருடன் பாலியல் உறவு வைத்திருப்பது பாலியல் பலாத்காரம் வழக்கில் சேராது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திருமணம் செய்வதாக வாக்குறுதி தந்து தம்மை பலாத்காரம் செய்ததாக ஒரு  பெண் வழக்குத் தொடர்வது செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். துணை ராணுவ வீரர் ஒருவர் மீது தொடரப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் புகார் அளித்த பெண்ணும் அந்த வீரரும் ஆறு ஆண்டுகளாக உடல் உறவில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டது. அந்த வீரர் வேறு ஒரு பெண்ணுடன் மணம் முடிக்க விரும்பிய போது அவர் மீது அந்தப் பெண் பாலியல் பலாத்கார வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரித்த உச்சநீதிமன்றம் திருமணம் செய்...
தப்பி ஓட முயன்ற தீவிரவாதி போல காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்து சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ..!

தப்பி ஓட முயன்ற தீவிரவாதி போல காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்து சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தப்பி ஓட முயன்ற தீவிரவாதி போல காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்து சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ..! தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நான் குற்றம் சாட்டப்படவில்லை. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் என் மீதும்,  என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் தனது வீட்டுக்கு சென்றார். அவருடன் வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோரும் சென்றனர். சிதம்பரம் வீட்டுக்கு சென்றதை அறிந்த சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்ததால் சிதம்பரம் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்றனர். சினிமாவை மிஞ்சிய பரபரப்பான க...
ஆவின் பால் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து படத்தின் பட்ஜெட்டும் மாறும் – ஆதங்கத்தை கொட்டிய “பப்ஜி” இயக்குனர்

ஆவின் பால் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து படத்தின் பட்ஜெட்டும் மாறும் – ஆதங்கத்தை கொட்டிய “பப்ஜி” இயக்குனர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பால் விலை உயர்ந்தால் விலைவாசி கண்டிப்பாக உயரும். அப்படி விலைவாசி உயர்ந்தால் அன்றாட செலவுகள் கூடி ஏற்கனவே திட்டமிட்ட படத்தின் ஷூட்டிங் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதை சூசகமாக சொல்லியிருக்கிறார் பிரபல இயக்குனர் விஜய்ஸ்ரீ. சாருஹாசன் நடிப்பில் தாதா 87 படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இப்போது அம்சவர்தன் நடிப்பில் பீட்ரு என்ற படத்தையும், பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலியை வைத்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg ) எனற படங்களை இயக்கி வருகிறார். பப்ஜி படம் தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட் டிசைனில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலை உயர்வையும் "படத்தின் பட்ஜெட்டில் சிறுமாற்றம்" என குறிப்பிட்டு உள்ளார். வழக்கமாக பால் விலை உயர்வை அரசு எப்போதெல்லாம் அறிவிக்கிறதோ அதன் தொடர்ச்சியாக  அடிப்படை தேவையான எல்லா பொருட்களின் விலையும் சத்தமில்லாமல் உயர்ந்து விடும். இதை கருத்தில் கொண்டே பப்ஜி படம் திட...
விருதுகள் விற்கப்படுகிறதா…  பொது விழாக்களுக்கு வராததால் அஜீத்துக்கு விருது தரப்படவில்லையா ? சந்தேகம் எழுப்பும் பிரபல இயக்குனர்..!

விருதுகள் விற்கப்படுகிறதா…  பொது விழாக்களுக்கு வராததால் அஜீத்துக்கு விருது தரப்படவில்லையா ? சந்தேகம் எழுப்பும் பிரபல இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    விருதுகள் விற்கப்படுகிறதா...  பொது விழாக்களுக்கு வராததால் அஜீத்துக்கு விருது தரப்படவில்லையா ? சந்தேகம் எழுப்பும் பிரபல இயக்குனர்..! சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் தமிழ் படங்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான தாதா 87 படத்தில் 87 வயதான மூத்த நடிகர் சாருஹாசன் நடித்திருந்தார். அதோடு திருநங்கைகளை மிக உணர்வோடு மரியாதையாக காட்டிய படம். இந்த படம் தேசிய விருது தேர்வு கமிட்டியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல் சுற்றிலேயே படம் நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் தாதா87 படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் "அஜீத் பொது விழாக்களுக்கு வராததால் அவருக்கு விருது எதுவும் தரப்படவில்லையா? விருதுகள் விற்கப்படுகிறதா? " என்றும் கேள்விகள் கேட்டிருக்கிறார். இந்த விவகாரம் பெரும்...
தேசிய தர மதிப்பீடு அங்கீகார கவுன்சிலின் அதிகபட்ச மதிப்பெண்ணாக A+ தரம் உயர்ந்த செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி..!

தேசிய தர மதிப்பீடு அங்கீகார கவுன்சிலின் அதிகபட்ச மதிப்பெண்ணாக A+ தரம் உயர்ந்த செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தேசிய தர மதிப்பீடு அங்கீகார கவுன்சிலின் அதிகபட்ச மதிப்பெண்ணாக A+ தரம் உயர்ந்த செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி..! நாடு முழுதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரத்தை அடிக்கடி தேசிய தர மதிப்பீடு அங்கீகார கவுன்சில் ஆய்வு செய்து மதிப்பீடு வழங்கும். சென்னை சோழிங்கநல்லூரில் செயல்படும் செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் கடந்த வாரம் தேசிய தர மதிப்பீடு அங்கீகார கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கல்லூரியின் உள் கட்டமைப்பு வசதிகள், இடவசதிகள், பயிற்சி களங்கள், கல்வியாளர்கள் என பல விதங்களில் ஆய்வுகள் நடை பெற்றது. அந்த ஆய்வின் படி மொத்த மதிப்பெண்களான 4ல் 3.49 பெற்று தர மதிப்பீட்டில் A+ தரம் உயர்ந்து உள்ளது. இதன் மூலம் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவது சாத்தியமாகும். இது குறித்து கல்லூரியின் தலைவர் பாபு மனோகர் கூறும் போது: மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்க வேண்டும...