திருப்பதியில் இன்று முதல் பொது தரிசனம் 6 ஆயிரம் பேருக்கு அனுமதி!
திருப்பதியில் இன்று முதல் பொது தரிசனம் 6 ஆயிரம் பேருக்கு அனுமதி!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதியில் இருந்து தரிசன அனுமதி தொடங்கியது. முதல் இரு நாட்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், ஓய்வுபெற்ற தேவஸ்தான ஊழியர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 8-ந்தேதி 6 ஆயிரத்து 300 பேரும், 9-ந்தேதி 8 ஆயிரத்து 350 பேரும் சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து திருப்பதியில் வசிக்கும் உள்ளூர் மக்களும், திருமலை பாலாஜிநகரில் வசிக்கும் உள்ளூர் மக்களும் சாமி தரிசனம் செய்ய நேற்று அனுமதிப்பட்டனர். அவர்களுக்கு நேற்று காலை 9 மணியில் இருந்து திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதியில் 8 கவுண்ட்டர்களிலும், சீனிவாசம் தங்கும் விடுதியில் 6 கவுண்ட்டர்களிலும், அலிபிரி பூதேவி காம்ப்ளக்சில் 4 கவுண்ட்டர்களிலும் டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கப்பட்டது. 9-ந்தேதி 10 ஆயிரம் ப...









