நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு பா.சிதம்பரம் வேண்டுகோள்
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு பா.சிதம்பரம் வேண்டுகோள்
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரானா இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக அதிக அளவில் பரவி வருவதை அடுத்து மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் பரவலை தடுக்க நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கு வரும் 14ஆம் தேதி முடிகிறது. அதே நேரம் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு பல மாநில முதல்வர்கள் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. சில மாநில முதல்வர்கள் அறிவித்து விட்டார்கள்.
இருப்பினும் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்க...









