ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஒரே பெயரில் 25 பள்ளிகளில் வேலை… ஓராண்டில் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய  பலே டீச்சர்!

ஒரே பெயரில் 25 பள்ளிகளில் வேலை… ஓராண்டில் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய பலே டீச்சர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஒரே பெயரில் 25 பள்ளிகளில் வேலை... சுமார் ஒரு கோடி ஓராண்டில் சம்பாதித்த பலே டீச்சர்! இந்த குளறுபடி கூத்து வட இந்தியாவில் உள்ள முக்கியமான உ.பி.யில் தான் நடந்துள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அனாமிகா சுக்லா. அவர் அங்குள்ள மெயின்புரி நகர் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் அறிவியல் ஆசிரியாராக பணியாற்றுகிறார். சமூகத்தில் பின் தங்கிய விளிம்பு நிலை பெண் குழந்தைகள் தங்கி படிக்கும் உறைவிட பள்ளியாகும் இது. இதே பெயரில் உள்ள பள்ளிகள் உத்திர பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. உ.பி.யில் அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளம் ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. அனாமிகா சுக்லாவின் பெயர் ஒரே நேரத்தில் ரேபரேலி பள்ளி பதிவேட்டிலும், மெயின்புரி பள்ளி பதிவேட்டிலும் இருப்பது தற்செயலாக கண்டு பிடிக்கப்பட்டது. பள்ள...
65வயதுக்கு மேல் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை – தேவஸ்தானம் அறிவிப்பு

65வயதுக்கு மேல் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை – தேவஸ்தானம் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  65 வயதுக்கு மேல் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு திருப்பதியில் அனுமதி இல்லை 11ம் தேதி முதல் கோவில் திறப்பதால் கட்டுப்பாடுகள் தீவிரம். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். கொரானா பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், 5-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது, 8-ந் தேதி முதல் கோவில்களை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, வருகிற 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக ஏழுமலையான் கோவில் திறக்கப்படுகிறது. 83 நாட்களுக்கு பிறகு 11-ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரி...
55 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டதா “தலைவி” !?

55 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டதா “தலைவி” !?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    55 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டதா "தலைவி" ! கொரானா பரவல் பரபரப்பிலும் முன்னாள் முதல்வர் ஜெ., தொடர்பான செய்திகள் எது வந்தாலும் பெரும் வைரல் ஆகி வரும் நேரம் இது. காரணம் அவருக்கு சொந்தமான சொத்துக்களை யார் உரிமை கொள்வது என்ற வழக்கின் தீர்ப்பு வேறு வந்துள்ளது. இந்த நேரத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரமாண்டமான பொருள் செலவில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆ...
சென்னையில் கொரானாவை ஒழிக்க கமல்ஹாசன் தொடங்கிய நாமே தீர்வு..!

சென்னையில் கொரானாவை ஒழிக்க கமல்ஹாசன் தொடங்கிய நாமே தீர்வு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கொரானா பிடியில் இருந்து சென்னையை மீட்க நாமே தீர்வு திட்டத்தை தொடங்கினார் மக்கள் நீதி மய்யத் தலைவர கமல்ஹாசன்.   ஜூன் 5ம் தேதியான இன்று உலக சுற்றுச் சூழல் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 'நாமே தீர்வு' என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார் கமல். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இன்று உலக சுற்றுச்‌ சூழல்‌ தினம்‌. உலகத்தைப் பசுமையாக மாற்றப் பல வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும்‌ நாம்‌, இன்று நம்‌ சென்னையையும்‌ வேறு ஒரு பச்சைக்கு மாற்ற வேண்டியதிருக்கிறது. கரோனாவுக்கு எதிரான இன்று நடக்கும்‌ போரில்‌ என்ன செய்வார்கள்‌ என்று காத்திருந்தும்‌, ஏதாவது செய்வார்கள்‌ என்று பார்த்திருந்தும்‌ களைத்தவர்களின்‌, நாமாவது ஏதாவது செய்ய வேண்டும்‌ என்ற சிந்தனை தான்‌ நாமே தீர்வு. இந்த நோயின்‌ தீவிரத்தை மருத்துவர்கள்‌ கட்டு...
வாங்குவது 1.5 லட்சம் கணக்கில் காட்டுவது ரூ.354 டப்பிங் சங்கத்தில் பல கோடி ஸ்வாகா… ராதாரவி மீது தொடரும் புகார்!

வாங்குவது 1.5 லட்சம் கணக்கில் காட்டுவது ரூ.354 டப்பிங் சங்கத்தில் பல கோடி ஸ்வாகா… ராதாரவி மீது தொடரும் புகார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தென்னிந்திய டப்பிங் யூனியனில் உறுப்பினர் சேர்க்கைக்கு ஆள் ஒருவருக்கு ரூ.1.5 லட்சம் வாங்கிக் கொண்டு கணக்கில் ரூ.324 என்று குறிப்பிட்டு பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்னிந்திய டப்பிங் யூனியன் தலைவராக நடிகர் ராதாரவி பதவி வகிக்கிறார். இவர் மீது ஏற்கனவே நடிகர் சங்க நிலத்தை மோசடியாக விற்ற வகையில் நில மோசடி வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. பண மோசடி, நில மோசடி வழக்கில் காஞ்சிபுரம் போலீசில் குற்றப்பத்திரிகை தாக்கலான நிலையில் ராதாரவி எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று கூறப்பட்ட போது திடீரென மத்தியில் ஆளும் பி.ஜே.பி கட்சியில் போய் சேர்ந்தார் ராதாரவி. நடிகர் சங்க வழக்கின் நிலை கேள்விக்குறி ஆன நிலையில் டப்பிங் யூனியனில் உறுப்பினர்கள் சேர்க்கையில் பல கோடி ரூபாய் மோசடி நடப்பதாகவும், உறுப்பினர் சேர்க்கைக்கு பெறப்படும் தொகையை கணக்கில் காட்டாமல் ...
யானையை கொன்ற நபர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் – விஜயகாந்த்

யானையை கொன்ற நபர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் – விஜயகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
யானையை கொன்ற நபர்களுக்கு தண்டனை கடுமையாக வழஙக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து காட்டு யானை ஒன்று பசியுடன் ஊருக்குள் வந்துள்ளது. பசியுடன் தெருவில் சுற்றிய கருவுற்றிருந்த அந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்தை வைத்து சில மனித மிருகங்கள் கொடுத்துள்ளன. அதனை அந்த யானை சாப்பிட்ட போது, அதன் வாயிலேயே வெடிமருந்து வெடித்து பரிதாபமாக உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இந்த சம்பவம் மனிதாபிமானத்துக்கு ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இத்தகைய செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கொரோனா போன்ற பல வைரஸ்கள் பரவி மனித இனம் அழிந்து வருவது, இது போன்ற சம்பவங்களின் பிரதிபலிப்பாகதான் பார்க்கிறேன். யானையை வெடி வைத்துக் கொன்ற அந...
தனியார் ஆஸ்பத்திரி கட்டண கொள்ளைக்கு துணை போகிறதா தமிழக அரசு?!

தனியார் ஆஸ்பத்திரி கட்டண கொள்ளைக்கு துணை போகிறதா தமிழக அரசு?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தனியார் ஆஸ்பத்திரி கட்டண கொள்ளைக்கு துணை போகிறதா தமிழக அரசு?! கொரானா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் கொரானாவுக்கு சிகிச்சை அளிக்கும் அனுமதி தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. பிரபலமான பல தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்ட நிலையில் திடீரென ஒரு தனியார் தொலைக்காட்சியில் தமிழகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கொரானா சிகிச்சை அனுமதிக்கு பல லட்சம் ரூபாய் கட்டணம் என்றும் நாளொன்றுக்கு ரூம் வாடகை சில லட்சங்கள் என்றும், மருத்துவ உடைக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் என்றும் வசூலிக்கப்பட்ட விவரத்தை ரகசிய கேமரா வைத்து படம் பிடித்து அம்பலப்படுத்தியது. ஆரம்பத்தில் சிகிச்சை அளிக்க மறுத்து பயந்து ஒதுங்கிய தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் இப்போது திடீரென சிகிச்சை கட்டணமாக பல லட்சங்களை பகிரங்கமா...
அரசு கொள்ளை அடிப்பதாக கூறிய பிரசன்னா திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்?!

அரசு கொள்ளை அடிப்பதாக கூறிய பிரசன்னா திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  மின் கட்டண ரீடிங் விவகாரம் அரசு கொள்ளை அடிப்பதாக கூறிய பிரசன்னா திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்?! கொரானா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த நான்கு மாதங்களாக மின்வாரிய கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் கடந்த இரண்டு மாதங்களாக முந்தைய மாத மின்கட்டணத்தையே செலுத்தலாம் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது நான்கு மாதத்திற்கும் மொத்தமாக மின் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதால் மிக அதிகமாக மின்கட்டணம் வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பதாகவும் மின்வாரியம் கொள்ளை அடிப்பதாக எத்தனை பேர் உணர்கிறீர்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார் இதனால் மின் வார...
முற்றும் மோதல்… சீன விமானங்களுக்கு அமெரிக்கா தடை

முற்றும் மோதல்… சீன விமானங்களுக்கு அமெரிக்கா தடை

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  முற்றும் மோதல்... சீன விமானங்களுக்கு அமெரிக்கா தடை உலகமெங்கும் பரவி லட்சக்கணக்கான மக்களை வாட்டி வதைத்து வரும் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இயங்கக்கூடிய 3 விமான நிறுவனங்களும் தங்களது இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. அதனால் அந்த விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது. ஆனாலும், அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு சீன விமானங்கள் மட்டும் இயங்கி வந்தன. ஜனவரி மாதம் வரை, அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் விமான நிறுவனங்கள் பரஸ்பரம் வாரத்துக்கு சுமார் 325 விமானங்களை இயக்கின. பிப்ரவரியில் அது அதிரடியாக 20 என்ற அளவுக்கு குறைந்தது. அதிலும் சீன விமானங்கள் மட்டுமே இயங்கின. மார்ச் மாதத்தில் சீனாவின் விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளி நாடுகளிலிருந்து இயக்கக்கூடிய விமானங்களுக்கான கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி, வாரத்துக்கு ஒரு வெளிநாட்டு விமானம் மட்டுமே அனுமத...
ஆன்லைனில் ஹால்டிக்கெட் ஜூன் 15ல் திட்டமிட்டபடி 10th,+1 +2 தேர்வு!

ஆன்லைனில் ஹால்டிக்கெட் ஜூன் 15ல் திட்டமிட்டபடி 10th,+1 +2 தேர்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆன்லைனில் ஹால்டிக்கெட் ஜூன் 15ல் திட்டமிட்டபடி 10th,+1 +2 தேர்வு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10, +1 மற்றும் +2 வகுப்பு பொதுத் தேர்வுகள் இந்த மாதம் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூன் 15-ம் தேதி 10 மற்றும் 11-ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஜூன் 18-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீதமுள்ள தேர்வுகள் நடக்கின்றன. இதற்கான ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களும் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....