சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

ரோஹித் சர்மா சத்தால் வெற்றி பெற்ற இந்தியா

ரோஹித் சர்மா சத்தால் வெற்றி பெற்ற இந்தியா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான இன்று சவுத்தாம்டனில் நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பந்து வீசியது. 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 228 என் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர், தவான் மற்றும் விராட் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா சதம் விளாசினார் இதன் காரணமாக இந்தியா வெற்றி பெற்றது....
விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ், ஜெயம் ரவி போட்டி… சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்..!

விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ், ஜெயம் ரவி போட்டி… சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டி..! நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. நிர்வாகிகளில் சின்ன மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது. விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு ஜெயம் ரவி, உதயா போட்டியிடுகிறார்கள். தேர்தல் 23ம் தேதி நடை பெற உள்ளதால் தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது....
சொன்னா சிரிக்க கூடாது… எனக்கு இந்திய பிரதமர் பதவி… என் புருசனனுக்கு அமெரிக்க அதிபர் பதவி மேல ஒரு ஆசை – சொன்னது பிரியங்கா சோப்ரா…

சொன்னா சிரிக்க கூடாது… எனக்கு இந்திய பிரதமர் பதவி… என் புருசனனுக்கு அமெரிக்க அதிபர் பதவி மேல ஒரு ஆசை – சொன்னது பிரியங்கா சோப்ரா…

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சொன்னா சிரிக்க கூடாது... எனக்கு இந்திய பிரதமர் பதவி... என் புருசனனுக்கு அமெரிக்க அதிபர் பதவி மேல ஒரு ஆசை - சொன்னது பிரியங்கா சோப்ரா... அட கொப்புறான் சத்தியமா நெசமாலும் தாங்க... நம்ப விஜய் பட ஹீரோயின் பிரியங்கா சோபரா இந்திக்கு போய் இப்ப ஹாலிவுட் படத்துல நடிக்க போயிட்டாங்க. இவங்களுக்குத்தான் இப்படி ஒரு ஆசை... இந்த பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவங்க கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்கு போய் மண மக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவுடன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா ஒரு முன்னணி இதழுக்கு அளித்த பேட்டியில் "தனக்கு இந்திய பிரதமராக ஆவதற்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதோட விட்டா பரவாயில்லை அவரின் காதல் கணவர் நி...
மாற்று திறனாளியை பாராட்டிய ரஜினி… எதற்கு தெரியுமா…

மாற்று திறனாளியை பாராட்டிய ரஜினி… எதற்கு தெரியுமா…

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அதிக முறை ரத்ததானம் செய்து உலக சாதனை செய்த மாற்று திறனாளி வாலிபரை பாராட்டிய ரஜினி..! மும்பை, ஒர்லி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். மாற்றுத்திறனாளி. தமிழரான இவர், விளையாட்டு மற்றும் சமூக பணிகளில் ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 26 ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான முறை ரத்ததானம் செய்து உலக சாதனை படைத்து உள்ளார். மும்பையில் தர்பார் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினியை உலக சாதனை செய்த மாற்று திறனாளி சந்தித்தார். அப்போது அவரை ரஜினி வாழ்த்தினார்....
உலகின் முதல் “V” வடிவ விமானம்… 300 பேர் பறக்கலாம்..!

உலகின் முதல் “V” வடிவ விமானம்… 300 பேர் பறக்கலாம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உலகில் அதிவேக பயணத்தில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது விமான பயணம்தான். அதிலும் ஏர்பஸ் விமானங்களிதான் அதிக பயணிகள் ஒரே நேரத்தில் பயணிப்பார்கள். வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்பு, எரி பொருள் சிக்கனம் ஆகியவற்றை மனதில் வைத்து ஒவ்வொரு நாடுகளும் தினம் தினம் புதிது புதிதான கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நெதர்லாந்து நாட்டின் கே.எல்.எம்.விமான நிறுவனம் புதிய விமானம் ஒன்றை வடிவமைத்து உள்ளது. ஆங்கில எழுத்து "V" வடிவத்தில் உருவாக்கப்பட்ட இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 314 பயணிகள் பறக்க முடியுமாம். அதோடு மற்ற விமானங்களை விட 20 சதவீத எரிபொருள் சிக்கனமும் கிடைக்குமாம். பறவையின் இறக்கை போல விமானம் வடிவமைக்கப்பட்டதால் மேலே எழும்புவதற்கும், கீழே இறங்குவதற்கும் மிகுந்த வசதியாக இருக்குமாம். குறிப்பாக பாதுகாப்பு மிக அதிகமாம். விரைவில் இந்தவகை வி வடிவ ...
சினிமாவுக்கு குட் பை சொன்ன ஒரிஜினல்  பவர் ஸ்டார்..!

சினிமாவுக்கு குட் பை சொன்ன ஒரிஜினல் பவர் ஸ்டார்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பவர் ஸ்டார் இனி நடிக்க மாட்டாராம். இந்த செய்தியை பார்த்ததும் தமிழ் சினிமா ரசிகர்கள் ஷாக் ஆக வேண்டாம். சினிமாவில் நடிக்க மாட்டேன் என சொன்னவர் நம்மூர் பவர் ஸ்டார் இல்லை. இந்த பெயரை முதல் முதலில் ரசிகர்கள் சூட்டிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாண். இவரைத் தான் பவர்ஸ்டார் என்று அழைத்தார்கள். இந்த பவன் கல்யாண் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள பவர் ஸ்டார் பவண் கல்யாண் இனி சினிமாவுக்கு திரும்ப வாய்ப்பில்லை என அறிவித்து ஆந்திர அரசியல் , சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்....
நீட் தேர்வு முடிவு நாளை வெளியீடு..!

நீட் தேர்வு முடிவு நாளை வெளியீடு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நீட் தேர்வு முடிவு நாளை வெளியீடு..! நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த தேர்வு கடந்த மாதம் (மே) 5-ந்தேதியும், 20-ந்தேதியும் நடைபெற்றது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவு நாளை (புதன்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம் கடும் எதிர்ப்பு “இந்தி மொழி கட்டாயம் இல்லை” 3-வது மொழி பாடத்தை மாணவர்களே தேர்வு செய்துகொள்ள மத்திய அரசு திருத்தம்..!

தமிழகம் கடும் எதிர்ப்பு “இந்தி மொழி கட்டாயம் இல்லை” 3-வது மொழி பாடத்தை மாணவர்களே தேர்வு செய்துகொள்ள மத்திய அரசு திருத்தம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தி கட்டாயமில்லை தமிழகத்தின் எதிர்ப்பால் திருத்தம் செய்த மத்திய அரசு. புதிய கல்வி கொள்கையை வகுப்பதற்காக ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் மத்திய அரசு நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு அளித்த அறிக்கையில் மும்மொழி கொள்கை, வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் பள்ளி கல்வியை மாற்றி அமைப்பது, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. இந்தியாவில் மும்மொழி கொள்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், அதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களில் அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்றும், இந்த நடைமுறை 6-ம் வகுப்பில் இருந்து தொடங்கவேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநில மொழியையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என...
விழுந்து நொறுங்கியதா… இந்திய விமானப்படை விமானம் திடீர் மாயம்… அதிர்ச்சியில் இராணுவம்..!

விழுந்து நொறுங்கியதா… இந்திய விமானப்படை விமானம் திடீர் மாயம்… அதிர்ச்சியில் இராணுவம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்திய விமானப்படை விமானம் திடீர் மாயம்... அதிர்ச்சியில் இராணுவம்..! இந்திய விமானப்படைக்கு சொந்தமான அண்டனோவ் ஏ.எந்32 ரக போக்குவரத்து விமானம் அசாமின் ஜோர்கத் விமான தளத்திலிருந்து திங்கள் கிழமை மதியம் 12.25க்கு புறப்பட்டுள்ளது. அதில் விமானி உட்பட மொத்தம் 13 பேர் பயணித்திருக்கிறார்கள். மதியம் 1 மணியளவில் அருணாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் ராடார் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. அதிகாரிகள் எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து பாதுகாப்புத்துறைக்கு புதிதாக பதவியேற்ற அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டிவிட்டர் பதிவில் “காணாமல் போன விமானம் குறித்து விமானப்படை துணை தலைவர் ராகேஷ் சிங்கிடம் பேசியுள்ளேன். விமானத்தில் பயணித்த அனைவரும் நலமுடன் திரும்ப பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார். https://twitter.com/rajna...
இப்தார் நிகழ்ச்சியில் ரஜினியின் பாட்ஷா பட வசனம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்..!

இப்தார் நிகழ்ச்சியில் ரஜினியின் பாட்ஷா பட வசனம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பாட்ஷா வசனம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்..! சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிமுக பாஜக அணி படுதோல்வி அடைந்தது. துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். இதையடுத்து அதிமுக பாஜக இடையே மெல்ல விரிசல் ஏற்பட்டது. மேலும் பாஜக அரசில் எப்படியும் மகனுக்கு மந்திரி பதவி வாங்கி விடலாம் என்ற எண்ணமும் நிறைவேறவில்லை. இந்த சூழலில் அதிமுக கட்சி சார்பில் ரம்ஜான் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை தேர்தல் தோல்வி குறித்து குறிப்பிடும்போது, 'நல்லவர்களை ஆண்டவர் சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார். கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார், ஆனால் கைவிட்டுவிடுவார். அதுபோலத்தான் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள்' என்று கூறினார். இதே வசனத்தை தான் 'பாட்ஷா' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த...