செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

நடிகர் சங்க நில மோசடி வழக்குக்கு பயந்து அதிமுகவில் ஐக்கியமானாரா ராதாரவி? – கோடங்கி ஸ்பெஷல்

நடிகர் சங்க நில மோசடி வழக்குக்கு பயந்து அதிமுகவில் ஐக்கியமானாரா ராதாரவி? – கோடங்கி ஸ்பெஷல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க நில மோசடி வழக்குக்கு பயந்து அதிமுகவில் ஐக்கியமானாரா ராதாரவி? நடிகர் ராதாரவி முதலில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுக வந்தார். பின்னர் அங்கிருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். அதன் பின் மீண்டும் திமுக வந்தார். சமீபத்தில் நடைபெற்ற கொலையுதிர் காலம் பட விழாவில் நடிகை நயன்தாராவை தரக்குறைவான வகையில் விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இதனால் திமுக தலைமையால் கட்சியில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டார். அதன் பின் எந்த கட்சியிலும் சேராமல் இருந்த ராதாரவி திடீரென மீண்டும் அதிமுகவில் இணைந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து அதிமுகவில் ஐக்கியமாகி விட்டார். இந்த திடீர் சேர்க்கைக்கு நடிகர் சங்க நில மோசடி வழக்கு விசாரணையும், பயமும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ராதாரவி பதவியில் இருந...
நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்… ஒரு பகீர் ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்… ஒரு பகீர் ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்... ஒரு பகீர் ரிப்போர்ட் நடிகர் சங்கத்திற்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடப்பது தெரிந்ததே. முந்தைய பாண்டவர் அணி சார்பில் ஒரு டீமும், ஐசரி கணேஷ்-பாக்யராஜ் கூட்டணி தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி பெயரில் ஒரு டீமும் களத்தில் நிற்கிறார்கள். 29 பதவிகளுக்கு 76பேர் நிற்கிறார்கள். விஷால் தலைமையில் உள்ள பாண்டவர் அணி மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு எதையும் வைக்க முடியாததால் பாக்யராஜ் -ஐசரி கணேஷ் அணி நடிகர் சங்க கட்டட பணிகள் தாமதத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கிடையில் பாண்டவர் அணியில் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலை தவிர மற்ற எந்த பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. அதே நேரம் நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ஒருகோடி ரூபாய் நிதி கொடுத்து, சுமார் 2 கோடிவரை 1.1 சதவீத வட்டியில் கடன் கொடுத்ததோடு ...
வருகிறது இ-சிகரெட்டுகளுக்கான தடை..!

வருகிறது இ-சிகரெட்டுகளுக்கான தடை..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிகரெட் பாதிப்பு மரணம் வரை கொண்டு செல்லும் என்பதால் பல நாடுகளில் சிகரெட்டுக்கு தடை உள்ளது. நம்மூரிலும் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை உள்ளது. ஒரு சில நாடுகளில் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இ-சிகரெட் என்ற எலெக்ட்ரானிக் சிகரெட்கள் பயன்படுத்தப்படுகிறது. இது நிகோடின் விஷத்தன்மையை குறைவாகவே கொடுக்கும் என்பதால் இ-சிகரெட் பயன்பாட்டில் உள்ளது. இதனை இந்தியாவில் பயன்படுத்தலாமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தும் படி உத்தரவின்பேரில் போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு செய்தது. அதில் இ-சிகரெட்களும் புகைப்பவர்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் எனபதோடு சிகரெட் தரும் அனைத்து வகை பாதிப்புகளும் இ-சிகரெட்டிலும் இருப்பது தெரியவந்தது ...
நடிகர் சங்க தேர்தலில் ரஜினி – கமல் ஆதரவு யாருக்கு… பரபரப்பு ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலில் ரஜினி – கமல் ஆதரவு யாருக்கு… பரபரப்பு ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலில் ரஜினி - கமல் ஆதரவு யாருக்கு... பரபரப்பு ரிப்போர்ட் நடிகர் சங்க தேர்தல் அடுத்த கட்டத்தை எட்டியது. வரும் 23ம் தேதி தேர்தல் நடை பெற உள்ளது. மொத்தமுள்ள 29 பதவிகளுக்கு விஷாலின் பாண்டவர் அணி, ஐசரி கணேஷ்-பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி இரண்டிலும் சேர்த்து தனித்தனி மனுக்களை கணக்கிட்டால் மொத்தம் 79 பேர் போட்டியிடுகிறார்கள். பாண்டவர் அணியின் தலைவர் நாசரின் வேட்புமனுவை உலக நாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்தும், சின்ன சின்ன வேஷங்களில் நடித்தவரும் டப்பிங் யூனியனில் ராதாரவியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றவருமான சாலமோன் என்பவர் வழிமொழிந்தும் உள்ளனர். நாசரின் வேட்புமனுவை கமல்ஹாசன் முன் மொழிந்ததால் கமல் ஆதரவு பாண்டவர் அணிக்கு என்பது வெட்ட வெளிச்சம் ஆனது. ஆனால் சுவாமி சங்கரதாஸ் அணியின் தலைவர் வேட்பாளர் பாக்யராஜ் வேட்புமனு தாக்கல் செய்த பின் "ரஜினி...
நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போறோம் – பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக்

நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போறோம் – பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போகிறோம் - பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக் தமிழ் திரையுலகில் இப்போது ஹாட் டாப்பிக் நடிகர் சங்க தேர்தல் தான். வழக்கமாக ஒரு தேர்தல் என்றால் பதவியில் இருப்பவர்கள் ஏற்கனவே தாங்கள் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்பார்கள். அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் குற்றச்சாட்டு, முறைகேடு என எதையாவது சொல்லி ஓட்டு கேட்பார்கள். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி ஏற்கனவே செய்த சாதனைகளை சொல்லி அது தொடர மீண்டும் வாய்ப்பு கேட்கிறது. கடந்த முறை பாண்டவர் அணியோடு இருந்த பலரும் இப்போது அங்கிருந்து விலகி பாக்யராஜ் -ஐசரி கணேஷ் என இரட்டைத தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியாக நிற்கிறார்கள். பாண்டவர் அணி மீது முறைகேடு குற்றச்சாட்டோ, நிர்வாக குற்றச்சாட்டோ எதையும் வைக்க முடியாமல் நடிகர் சங்க புதிய கட்...
புரட்சிக்கு முயற்சித்த ராணுவ தளபதியை வெட்டி உயிரோடு மீன்களுக்கு இரையாக்கி மரண தண்டனை கொடுத்த வட கொரிய அதிபர் கிம்…

புரட்சிக்கு முயற்சித்த ராணுவ தளபதியை வெட்டி உயிரோடு மீன்களுக்கு இரையாக்கி மரண தண்டனை கொடுத்த வட கொரிய அதிபர் கிம்…

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இராணுவ புரட்சிக்கு முயற்சித்த தளபதியை வெட்டி உயிரோடு மீன்களுக்கு இரையாக்கி "ஜேம்ஸ் பாண்ட்" பட பாணியில் கொடூரமான மரண தண்டனை வழங்கிய வட கொரியா அதிபர் கிம். வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதிலும், மீண்டும் வேறு யாரும் தனக்கு எதிராக செயல்படக்கூடாது என எச்சரிக்கும் விதமாக கொடூரமான முறையில் மரண தண்டனையை வழங்கி வருகிறார். தந்தையின் மறைவுக்கு பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கிம் ஜாங் அன், இதுவரை அரசில் உயர் பதவி வகிக்கும் 16 பேருக்கு மரண தண்டனை அளித்து இருக்கிறார். தனது உரையின் போது சத்தமாக கைதட்டவில்லை என்பதற்காக தனது சொந்த மாமாவையே பீரங்கிகளை தகர்க்க பயன்படுத்தும் துப்பாக்கி குண்டு மூலம் சுட்டு கொலை செய்துள்ளார். வடகொ...
உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை திடீரென சந்தித்த தமிழக கவர்னர்…!

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை திடீரென சந்தித்த தமிழக கவர்னர்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை திடீரென சந்தித்த தமிழக கவர்னர்...! சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், பாஜகவுன் கூட்டணி வைத்த ஆளும் கட்சியான அ.தி.மு.க. படு தோல்வி அடைந்தது. இந்த சூழலில் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் , ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி கவர்னர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. மேலும் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றுக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை திடீரென்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது மாநிலம் தொடர்பான முக்கிய பிரச்ச...
நாசருக்கு கமலின் பகிரங்க ஆதரவால் ரஜினியை தனக்கு ஆதரவாக காட்டிக் கொள்கிறாரா பாக்யராஜ் – கோடங்கி சிறப்பு கட்டுரை

நாசருக்கு கமலின் பகிரங்க ஆதரவால் ரஜினியை தனக்கு ஆதரவாக காட்டிக் கொள்கிறாரா பாக்யராஜ் – கோடங்கி சிறப்பு கட்டுரை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  பரபரப்பு கூடும் நடிகர் சங்க தேர்தல் தேறுவாரா பாக்யராஜ்... தொடருவாரா விஷால்... தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். வாக்குப்பதிவு நடந்த அதே தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் - ஐசரி கணேஷ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமி அணி போட்டியிடுகிறது.   சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணியைச் சேர்ந்த கார்த்தியை எதிர்த...
ரஜினி எங்களை வாழ்த்தினார் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் ஐசரி-பாக்யராஜ் அணி பேட்டி

ரஜினி எங்களை வாழ்த்தினார் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் ஐசரி-பாக்யராஜ் அணி பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்த கையோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் தலைமையில் இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்த தேர்தல...
அரசியல் தலையீடும் இல்லை – வேட்புமனு தாக்கலுக்கு பின் நாசர் பேட்டி

அரசியல் தலையீடும் இல்லை – வேட்புமனு தாக்கலுக்கு பின் நாசர் பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன். நடிகர் சங்க தேர்தலில் எந்த அரசியல் குறுக்கீடும் இல்லை - நாசர் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் M. நாசர்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம்,சிபிராஜ் ஆகியோர் இன்று தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் .கார்த்தியின் வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தலைவராக போட்டியிடும் M.நாசர் வெற்றி வாய்ப்பை பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது. " இது ஜனநாயக முறைப்படி நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல். கடந்த முறை நாங்கள் தேர்தலை வேறொரு களத்தில் வேறொரு சூழ்நிலையில் சந்தித்...