ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

புதிய மின் இணைப்பு பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு!

புதிய மின் இணைப்பு பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புதிய மின் இணைப்பு பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 1-3-2020 முதல் புதிய தாழ்வழுத்த மின் இணைப்பு பெற ( குடிசை மற்றும் விவசாயம் நீங்கலாக ) இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ,மாநிலம் முழுவதும் உள்ள பொது மக்கள் தாழ்வழுத்த புதிய மின்னிணைப்பு பெறுவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளத்தின் மூலம் ( www.tangedco.gov.in ) இணையவழி விண்ணப்பத்தில் கோரும் விவரங்களை பூர்த்தி செய்து துணை ஆவணங்களின் நகல்களை ஸ்கேன் செய்யப்பபட்ட பதிவேற்றம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது....
மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை!

மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை! சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று எப்போது சொன்னாரோ அப்போதிருந்தே ரஜினி என்ன பேசினாலும், செய்தாலும் பரபரப்பாக கவனிக்கப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே அணி சேர்க்க ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்னமும் அரசியல் கட்சியாக அறிவிக்கவில்லை. அதே நேரம் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி தமிழகம் முழுதும் பொறுப்பாளர்களை நியமித்து தீவிரமாக ஆட்களை சேர்த்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளை அழைத்து ரஜினி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது....
மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாள் நிகழ்விற்கு போன  அஜீத்!

மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாள் நிகழ்விற்கு போன அஜீத்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழில் அறிமுகமாகி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய சினிமாவின் புகழ் உச்சியில் இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு போனபோது திடீரென மரணம் அடைந்தார். இவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி மும்பை வீட்டில் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள வீட்டில் ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் போனிகபூர் குடும்பத்தாருடன் நடிகர் அஜித்தும் கலந்துக் கொண்டார். போனிகபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் இப்போது அஜீத் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் தயாரிப்பில் நேர் கொண்ட பார்வை படத்திலும் அஜீத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழ் புத்தாண்டில் உதயமாகும் ரஜினி கட்சி!? நாளை முக்கிய முடிவு!

தமிழ் புத்தாண்டில் உதயமாகும் ரஜினி கட்சி!? நாளை முக்கிய முடிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழ் புத்தாண்டில் உதயமாகும் ரஜினி கட்சி!? தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக நிலவி வந்தது. இதை உறுதி படுத்தும் விதமாக கடந்த ஆண்டு விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன். அதற்கான பணிகள் நடக்கிறது என்று சொல்லி ரசிகர்களை குஷிபடுத்தினார். ஏற்கனவே ரஜினி ரசிகர் மன்றம் இப்போது ரஜினி மக்கள் மன்றமாக பரபரப்பாக தமிழகம் முழுவதும் அடித்தள வேலை செய்து வந்தது. இந்த நிலையில் இன்னும் ஒரு ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அரசியல் கட்சி அறிவிப்பை உடனடியாக வெளியிட்டால்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட வசதியாக இருக்கும் என்பதால் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த ரஜினி முடிவு செய்தார். வரும் ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு அன்று தனது கட்சியின் பெயரும் கொடியும் வெளியிட ரஜினி முடிவு செய்து அதற்கான பணிகளில் ...
சமூக வலைதளங்கங்களில் இருந்து பிரதமர் மோடி விலக முடிவு!

சமூக வலைதளங்கங்களில் இருந்து பிரதமர் மோடி விலக முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மிக முக்கியமான சமூக வலைதளங்கங்களில் இருந்து பிரதமர் மோடி விலக முடிவு! பிரதமர் மோடியை சமூக வலைதளமான பேஸ்புக்கில் 44.72 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும், யூடியூபில் 4.5 மில்லியன் பேரும், டுவிட்டரில் 53.3 மில்லியன் பேரும் பின் தொடர்கிறார்கள். பெரும்பாலும் தனது கருத்தை இதுபோன்ற சமூக வலைதளங்கங்களில் மூலமாக மக்களுக்கு சொலவது பிரதமர் மோடியின் வழக்கம். இந்நிலையில் மிக ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களிலிருந்து விலகலாமா என யோசித்து வருவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில், “இந்த ஞாயிற்று கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறலாமா என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். பிரதமரின் இந்த டுவிட்டர் பதிவுக்கு பலரும் ...
உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு!

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு! சிஏஏக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது.. குறிப்பாக சமீபத்தில் வெடித்த டெல்லி வன்முறை இந்திய மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அதே போல் தமிழகத்திலும் சிறுபான்மையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டில்லி சென்ற தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் சந்தித்து சிஏஏ, என்பிஆர் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணம் சமீபத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போராட்டமாக மாறியதால் போலீசார் தடியடி நடத்தினர். அதை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் நள்ளிரவில் இஸ்லாமியர்கள் போராட்டத்தை தொடங்கியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது....
இந்தியன் 2 விபத்து விளக்கம் தர கமலுக்கு போலீஸ் சம்மன்!

இந்தியன் 2 விபத்து விளக்கம் தர கமலுக்கு போலீஸ் சம்மன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் விபத்து குறித்த விசாரணையில் பதில் அளிக்கும் படி நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர். சென்னையை அடுத்த பூந்தமல்லி ஈவிபி ஷூட்டிங் ஸ்பாட்டில் கடந்த வாரம் திடீரென கிரேன் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு உதவி இயக்குனர் உட்பட 3 பேர் அதே இடத்தில் பலியானார்கள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் இந்த விசாரணையின் போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி நடிகர் கமல் ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது....
திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்… இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை!

திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்… இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்... இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை! தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கடந்த சில நாட்களாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருந்தது. அதிமுக கூட்டணியில் எப்படியும் ஒரு எம்பி பதவியை பெற தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோதிலும், அதிமுக அதற்கு இணங்கவில்லை. திமுக கூட்டணியில் இந்த பிரச்சனையே இல்லை. இருந்த போதும் சீனியர்களை ஒதுக்கிவிட்டு இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார். ஏற்கனவே மாநிலங்களவை எம்பி இருந்து வரும் திருச்சி சிவா மற்றும் என் ஆர் இளங்கோ ஆகியோர்களின் ப...
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல்!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  திமுக தலைவர் ஸ்டாலின் ஞாயிறன்று தனது 67-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆனால் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல்நலக்குறைவு காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று முன்னரே அறிவித்து விட்டார். இந்நிலையில் மக்களுக்காக உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலிக்கட்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அன்பு சகோதரர் திரு. @mkstalin அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட "என் மனமார்ந்த வாழ்த்துக்கள்"...
CAA சட்டம் – ரஜினிக்கு நன்றி சொன்ன இஸ்லாமிய தலைவர் !

CAA சட்டம் – ரஜினிக்கு நன்றி சொன்ன இஸ்லாமிய தலைவர் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    CAA சட்டம் - ரஜினிக்கு நன்றி சொன்ன இஸ்லாமிய தலைவர் ! சென்னை போயஸ் கார்டனில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்தார். பின்னர் அபுபக்கர்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிஏஏ விவகாரம் தொடர்பாக ரஜினி கூறிய கருத்துக்கு நன்றி தெரிவித்தேன். ரஜினி கூறிய கருத்துக்கள் இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது ரஜினிக்கு சிஏஏ பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது எதுவும் இல்லை. இந்திய பொருளாதாரம் சிறப்பாக வரவேண்டும் என்பதுதான் ரஜினியின் எண்ணம். மதக் கலவரம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய கடமை அனைவருக்குமே உண்டு. இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு வந்தால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று கூறியுள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறோம், நன்றி சொல்கிறோம். அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ...