ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக்கொள்ள துடிப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும் – கொதித்த கமல்

எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக்கொள்ள துடிப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும் – கொதித்த கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக்கொள்ள துடிப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும் - கொதித்த கமல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் , மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ள கமல்ஹாசன், மதுரை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் என மாவட்டவாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மக்கள் மத்தியில் பேசிய கமல் ஹாசன், “மக்கள் திலகம் எம்ஜிஆர் எங்கள் சொத்து. அவர் மடியில் அமர்ந்தவன் நான்” என தெரிவித்தார். முன்னதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், எம்ஜிஆரிடமிருந்து விருது வாங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கமலின் நெற்றில் எம்ஜிஆர் முத்தமிடும் நெகிழ்ச்சியான காட்சியும் இடம்பெற்றுள்ளது இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி பரப்புரை செய்யும் க...
2021 ம் வருடத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

2021 ம் வருடத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2021 ம் வருடத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.  உலக சுகாதார நிறுவனம்  2021 ஆம் வருடத்தில் ஐரோப்பாவில் கொரோனா  தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று  எச்சரித்துள்ளது. உலகிலுள்ள நாடுகளில் ஒரு சிலவற்றில் கொரோனா நோயின் இரண்டாம் மூன்றாம் நிலைகள் உக்கிரமடைந்துள்ளது. இதானால் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் மீண்டும் பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கிறிஸ்துமஸ் விழா வரவிருப்பதால் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளது. இதனால்  கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமடையும்  என்றும்  உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் “மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் விழாவை கொண்டாடுங்கள், மேலும் அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்” என்றும் அறிவுறுத்தியுள்ளது....
தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை “கட்”

தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை “கட்”

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
  பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. தொடர் கோரிக்கைகளின் எதிரொலியாக, கடந்த மாதம் இந்த குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. இந் நிலையில், இந்த சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மைத்தன்மையை குறைக்கவோ நீக்கவோ மருந்து தரப்படும். இது தொடர்பான முடிவை அரசு நியமித்த மருத்துவர்கள் குழு தீர்மானிக்கும். பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை உருவாக்கவும், 4 மாதங்களில் விசாரணை முடிக்கவும் அவசர சட்டம் வழி வகை செய்கிறது. இந்த சட்டப்பூர்வமான ஆண்மை நீக்க...
வாக்காளர் திருத்தப் பணிகளில் முறைகேடு:  தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

வாக்காளர் திருத்தப் பணிகளில் முறைகேடு: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, கடந்த நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனக் கூறி, அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், கரூர் மாவட்டத்தில் திடீரென 30 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பெயர் சேர்க்க, நீக்க அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அதிமுக மாவட்ட செயலாளரான போக்குவரத்துதுறை அமைச்சரின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய தேர்தல் ஆணைய உ...
கமல் -திமுக 2 பலவீனங்கள் ஒன்றிணைந்து அதிமுக என்ற இமயமலையோடு மோதப் பார்கிறார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

கமல் -திமுக 2 பலவீனங்கள் ஒன்றிணைந்து அதிமுக என்ற இமயமலையோடு மோதப் பார்கிறார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கமல் -திமுக 2 பலவீனங்கள் ஒன்றிணைந்து அதிமுக என்ற இமயமலையோடு மோதப் பார்கிறார்கள் - அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தனித்து போட்டி என கூறிவந்த கமல் தற்போது கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலையை பார்கிறார். கூட்டணி அமைப்பது கட்சியின் விருப்பம் என்றும், கூட்டணி அமைக்கும்போது ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் உடன்பட வேண்டும் எனவும், கமல் ரஜினியுடன் இணைவது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார். மேலும், அதிமுக மாபெரும் இயக்கம் என கூறிய அவர், 2021ல் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் எனவும், அதிமுகவை விட வலிமைப்பெற்ற சக்தி எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘கமலின் விஸ்வரூபம் படத்தை தடை செய்தபோது எம்.ஜி.ஆர் பற்றி பேசாதது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், உள் ஒன்...
சட்டமன்ற தேர்தலில் மகளுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பிரச்சாரம்!

சட்டமன்ற தேர்தலில் மகளுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பிரச்சாரம்!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவர் அரசியலில் இறங்க இருப்பதாகவும் வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதுகுறித்து  அவரும் அவர் மகள் திவ்யா சத்யராஜும் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு, என் குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் நான். என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருக்கிறேன். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யாவின் வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் என் மகளுக்கு பக்கபலமாக இருப்பேன். நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன்." இவ்வாறு சத்யராஜ் கூறினார். ...
மதங்களுக்குள் சண்டை மூட்டி நாங்கள் அரசியல் செய்யவில்லை – கமல்

மதங்களுக்குள் சண்டை மூட்டி நாங்கள் அரசியல் செய்யவில்லை – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக திருநெல்வேலி சென்றுள்ள கமல் மதங்களுக்குள் சண்டை மூட்டி நாங்கள் அரசியல் செய்யவில்லை என பேசியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டிருக்கிறது. இதற்காக நேற்று முன் தினம் மதுரை சென்ற கமல் அங்கிருந்து தொடர்ந்து தென் தமிழக மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் “தமிழகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள் வரை பணம் இல்லாமல் இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சினைகளை சரிசெய்யும்” என்று பேசியுள்ளார் மேலும் “ஆட்சிக்கு வருவோம் என்று நாங்கள் கூறுவது மக்களே ஆள வேண்டும் என்பதற்காகதான். ஆட்சியாளர்கள் மக்களுக்கு சேவகர்களாக இருக்க வேண்டும்....
கழிவறையின் கூரை பகுதியை உடைத்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்த 8 அடி நீளம் கொண்ட பாம்பு!

கழிவறையின் கூரை பகுதியை உடைத்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்த 8 அடி நீளம் கொண்ட பாம்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  தாய்லாந்தில் உணவக கழிவறைக்குள் சென்ற ஊழியர் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நம்மூரில் சிலர் கழிவறைக்குச் செல்லும் போது அங்குச் சிறிய கரப்பான்பூச்சியைப் பார்த்தாலும் பதறியடித்து வெளியே ஓடி வருவார்கள். அப்படி இருக்கும் போது ஒருவர் கழிவறைக்குச் செல்லும் போது, அங்குப் பெரிய பாம்பு ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்? கேட்கவே பகீர் என்று இருக்கிறது அல்லவா? அப்படியான ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் ஃபிட்சன்டுக் என்ற பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் க்னுப் போவின் என்ற ஊழியர் ஒருவர் கழிவறைக்குச் சென்ற போது, அங்குக் கழிவறையின் கூரை பகுதியை உடைத்துக்கொண்டு 8 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது இதைக் கண்டதும் போவின் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது செல்போனை எடுத்து அந்த பாம்பைப...
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பிரதமர் என்றால் அது சர்வாதிகாரம் – மோடியை மறைமுகமாக வெளுத்த கமல்

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பிரதமர் என்றால் அது சர்வாதிகாரம் – மோடியை மறைமுகமாக வெளுத்த கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பிரதமர் என்றால் அது சர்வாதிகாரம் - மோடியை மறைமுகமாக வெளுத்த கமல் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் மற்ற கட்சிகளை விட கமல் முந்திக் கொண்டு பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். தேர்தல் கமிஷன் கமல் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தராமல் வேறு கட்சிக்கு ஒதுக்கி விட்டது. இதில் கடுப்பான கமல் மத்திய அரசையும் குறிப்பாக மோடியையும் சகட்டுமேனிக்கு வெளுத்து வருகிறார். இன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் எதற்கெடுத்தாலும் ஒரே... ஒரே என சொல்லுகிறவர்கள் சர்வாதிகாரம் நிறைந்தவர்கள் என மோடியை வெளுத்திருக்கிறார். "ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ’ஒரே பிரதமர்’. எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு. சம நீதியும், சமூக நீதிய...
புதுமைப்பித்தன் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் – முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட கமல்ஹாசன்

புதுமைப்பித்தன் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் – முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை செய்து வரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் தொடங்கி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி என அடுத்தடுத்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்தத் தேர்தலின் போது, எம்ஜிஆரின் மடியில் தவிழ்ந்து வந்தவன் எனக் கூறி ஆக்ரோஷமாக பேசி வருகிறார் கமல்ஹாசன். மேலும், அரசியலில் தன்னை யாரும் இயக்கவில்லை, யாராலும் இயக்கவும் முடியாது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் தேர்தல் வாக்...