ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

8 ஆண்டுகளுக்குப் பின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் பழனிச்சாமி நாளை திறக்கிறார்!

8 ஆண்டுகளுக்குப் பின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் பழனிச்சாமி நாளை திறக்கிறார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  8 ஆண்டுகளுக்குப் பின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் பழனிச்சாமி நாளை திறக்கிறார்! காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறித்து கடந்த மே 18-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி. அடியாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும். எனவே, டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்றும், மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி காலை 10 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க உத்த...
சுசீந்திரன் உதவியாளரான பெண் இயக்குனர் கதையில் நடிக்கும் அசோக் செல்வன்!

சுசீந்திரன் உதவியாளரான பெண் இயக்குனர் கதையில் நடிக்கும் அசோக் செல்வன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சுசீந்திரன் உதவியாளரான பெண் இயக்குனர் கதையில் நடிக்கும் அசோக் செல்வன்! கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக  நிஹாரிகா நடிக்கிறார். இவர் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான  "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்" என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதினி இயக்க உள்ளார். இவர் இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இது குடும்ப உணர்வுகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கதை என கூறப்படுகிறது. இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்க உள்ளார். ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது இந்நிலையில், தற்போது பூஜையுடன் இப்படத்தின் பாடல் வேலைகள் துவங்கி உள்ளது. இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மேற்பார்வையில் பாடல் வேலைகளை துவக்க...
சாமி கும்பிடப் போனதால் சிறுவன் சுட்டுக் கொலை உ.பி.யில் கொரானாவை மீறி பரவி கிடக்கும் ஜாதிவெறி வைரஸ்!

சாமி கும்பிடப் போனதால் சிறுவன் சுட்டுக் கொலை உ.பி.யில் கொரானாவை மீறி பரவி கிடக்கும் ஜாதிவெறி வைரஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சிவன் கோயிலுக்கு சாமி கும்பிடப் போனதால் சிறுவன் சுட்டுக் கொலை உ.பி.யில் கொரானாவை மீறி பரவி கிடக்கும் ஜாதிவெறி வைரஸ்! உத்தரபிரதேசத்தில் கோயிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்ததற்காக பட்டியலின பிரிவை சேர்ந்த சிறுவன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள தொம்கேரா கிராமத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவரது மகன் விகாஷ் குமார் ஜாதவ் (17). கடந்த 1ம் தேதி சிவன் கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட முயன்றுள்ளார், அப்போது அங்கிருந்த மற்ற சமூகத்தினர் விகாஷை தடுத்துள்ளனர் அதையும் மீறி விகாஷ் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளார். இதைப்பார்த்த மற்றவர்கள் விகாஷை தாக்கியுள்ளனர். இதுபற்றி விகாஷின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு விகாஷின் வீட்டுக்குள் புகுந்...
கொரானா தொற்றால்  திமுக எம்.எல்.ஏ., பிறந்த நாளில் இறந்த சோகம்!

கொரானா தொற்றால் திமுக எம்.எல்.ஏ., பிறந்த நாளில் இறந்த சோகம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா தொற்றுக்கு பலியான திமுக எம்.எல்.ஏ., பிறந்த நாளில் இறந்த சோகம்! திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரானா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து கடந்த வாரம் விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார். ஜெ அன்பழகன் சிகிச்சைக்கு தேவையான சில மருந்துகளை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி வைத்திருந்தார். திமு...
அர்விந்த் கேஜ்ரிவால் முட்டாள் – கவுதம் கம்பீர் ட்வீட்

அர்விந்த் கேஜ்ரிவால் முட்டாள் – கவுதம் கம்பீர் ட்வீட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அர்விந்த் கேஜ்ரிவால் முட்டாள் - கவுதம் கம்பீர் ட்வீட் கொரானா காலகட்டத்தில், டெல்லி அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெல்லி மக்களுக்கே சிகிச்சை அளிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், டெல்லி மருத்துவமனை டெல்லி மக்களுக்கே என்ற முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு முட்டாள்தனமானது என பா.ஜ.க. எம்.பி., கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இதுதொடர்பாக, அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஆளுநர் நல்ல முடிவெடுத்தார். டெல்லி மருத்துவமனைகளில் பிற மாநில நோயாளிகளுக்கு இடமில்லை என்ற உத்தரவு முட்டாள்தனமானது, இந்தியா என்பது ஒன்று. நாம் இந்த தொற்றை ஒன்றிணைந்தே எதிர்த்துப் போராட வேண்டும் என பதிவிட்டுள்ளார்....
கொரானா பிசாசுத்தனமான அசுர அடி ரஜினிகாந்த் எச்சரிக்கை அறிக்கை!

கொரானா பிசாசுத்தனமான அசுர அடி ரஜினிகாந்த் எச்சரிக்கை அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கொரானா கொடுத்தது பிசாசுத்தனமான அசுர அடி கவனமாக இருக்கவும் ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கை போச்சு ரஜினிகாந்த் எச்சரிக்கை! கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றி. அடிபட்ட உடனே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரானா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனைகளை தரும். உங்கள் குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பாக வைப்பது உங்கள் அடிப்படை கடமை. எந்த சூழ் நிலையிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் இருக்காதீர்கள். ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கை போச்சு. இவ்...
பெண் பிரதமரின் மதி நுட்பத்தால் கொரானாவை ஒழித்த முதல் நாடு நியூசிலாந்து!

பெண் பிரதமரின் மதி நுட்பத்தால் கொரானாவை ஒழித்த முதல் நாடு நியூசிலாந்து!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  பெண் பிரதமரின் மதி நுட்பத்தால் கொரானாவை ஒழித்த முதல் நாடு நியூசிலாந்து! உலகையே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக முடக்கிப் போட்டிருக்கும் கொடிய கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என ஒவ்வொரு நாடும் வித விதமான நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அப்படி இருந்தும் கொரானா போவேனா பார் உலக வல்லரசு நாடுகளுக்கு சவால் விட்டு வருகிறது. ஆண்கள் ஆளுகிற நாடுகளை விட பெண்கள் ஆளுகிற நாடுகளில் வைரஸ் தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது உலக அளவில் கொரானாவை முற்றிலும் ஒழித்த முதல் நாடு என்ற பெருமையை பெண் பிரதமர் ஆளும் நியூசிலாந்து பெற்றுள்ளது. ஜெசிந்தா ஆர்டெர்ன் என்ற பெண் பிரதமர் ஆளுகிற இந்த நாட்டில் மொத்தம் 1,154 பேருக்குத்தான் கொரானா தொற்று ஏற்பட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை வெறும் 22 மட்டுமே. மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடு...
கொரானா தடுப்பூசி கிடைக்க இன்னும் ஓராண்டாகலாம் என்கிறார் சிங்கப்பூர் பிரதமர்!

கொரானா தடுப்பூசி கிடைக்க இன்னும் ஓராண்டாகலாம் என்கிறார் சிங்கப்பூர் பிரதமர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    கொரானா தடுப்பூசி கிடைக்க இன்னும் ஓராண்டாகலாம் என்கிறார் சிங்கப்பூர் பிரதமர்! கொரானா வைரஸ் தடுப்பூசி உலகம் முழுவதும் பரவலாக அனைவருக்கும் கிடைக்க குறைந்தது ஓராண்டு ஆகும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் லீ சி யென்லூங் பேசியதாவது:- கொரானா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து உலகம் முழுவதும் அனைவருக்கும் பரவலாக கிடைக்க குறைந்தது ஒரு ஆண்டாகும். அநேகமாக ஓராண்டு காலத்திற்கு மேல் ஆகலாம். நாம் கொரானா வைரசுடன் நீண்ட நாட்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அது காசநோய் போன்ற ஆபத்தான தொற்று நோயுடன் கடந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருவதுபோல் கற்றுக்கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கொரானா தொற்று மனித இனம் நீண்ட காலத்துக்கு பிறக...
பீஸ் கட்டாத முதியவரை கட்டிப்போட்ட ஆஸ்பத்திரிக்கு சீல்!

பீஸ் கட்டாத முதியவரை கட்டிப்போட்ட ஆஸ்பத்திரிக்கு சீல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய பிரதேச மாநிலம் ஷஜாபூரில் தனியார் மருத்துவனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் 80 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்து இறுதியாக 14 ஆயிரம் ரூபாய்க்கான கட்டண ரசீது கொடுத்துள்ளனர். கட்டணத்தை முதியவரால் கட்ட முடியவில்லை. இதனால் அந்த முதியவரின் காலை பெட்டில் உள்ள கம்பியில் கட்டி வைத்துள்ளனர். இந்தப்படம் கடந்த வாரம் வெளியாகியது. முதியவரை கட்டிப்போட்ட படம் வெளியானதை தொடர்ந்து விமர்சனம் எழும்பியது. அம்மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான், மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிலையில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது  ...
வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் கொரானா இல்லாத இடத்தை தேட வேண்டியுள்ளது – சூரி ஆதங்கம்

வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் கொரானா இல்லாத இடத்தை தேட வேண்டியுள்ளது – சூரி ஆதங்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் கொரானா இல்லாத இடத்தை தேட வேண்டியுள்ளது - வேலம்மாள் நிவாரண உதவி நிகழ்ச்சியில் சூரி ஆதங்கம் நகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார். "வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்" மற்றும் "மாற்றம் பவுண்டேஷன்" மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் மனிதாபிமான செயலை அவர் பாராட்டினார். நடிகர் சூரி பேசுகையில், "எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்று திறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் என...