சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி..!

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய உள்துறை மந்திரி அமீத்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதையை நிமித்தமானதாம். சனிக்கிழமை நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தாம் டெல்லி வந்துள்ளதாகவும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த கூட்டத்தில் பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்....
தனுஸ்ரீ தத்தா சொன்னதில் உண்மையில்லையாம் மும்பை போலீஸ் அறிக்கையால்  மீ டு புகாரில் மீண்ட நானா படேகர்

தனுஸ்ரீ தத்தா சொன்னதில் உண்மையில்லையாம் மும்பை போலீஸ் அறிக்கையால் மீ டு புகாரில் மீண்ட நானா படேகர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் புகாரில் ஆதாரங்கள் இல்லை -மும்பை போலீஸ் அறிக்கை 2008–ம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் பாடல் காட்சியொன்றில் நானா படேகர் அத்துமீறி நுழைந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறிய தனுஸ்ரீ தத்தா, இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆட்கள் என்னை மிரட்டினார்கள். காரில் குடும்பத்தினரோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் கூறினார். அந்த படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவரும் தமிழில் ஜீவாவுடன் ரவுத்திரம் படத்தில் நடித்தவருமான கணேஷ் ஆச்சார்யா எனக்கு நேர்ந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்றும் தனுஸ்ரீ தத்தா கூறியிருந்தார். இதுபோல் டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி ‘சாக்லேட்’ படப்பிடிப்பில் எனது உடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நிற்கும்படி கூறினார் என்று அவர் மீதும் தனுஸ்ர...
நயன்தாரா காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா… சாதாரண மக்கள் என்றால் அலட்சியமா..? – போலீசாரை காய்ச்சி எடுத்த நீதிமன்றம்

நயன்தாரா காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா… சாதாரண மக்கள் என்றால் அலட்சியமா..? – போலீசாரை காய்ச்சி எடுத்த நீதிமன்றம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நயன்தாரா காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா... சாதாரண மக்கள் என்றால் அலட்சியமா..? - போலீசாரை காய்ச்சி எடுத்த நீதிமன்றம் சேலத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவரின் மகள் கவுசல்யா(19). இவர் கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனதாக திருச்செங்கோடு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி காணாமல் போன பெண்ணின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசாருக்கு நீதிபதி சரமாரி கேள்விகள் கேட்டு கிடுக்கிப்பிடி போட்டதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் "புகார் கொடுத்து 3 மாதங்கள் முடிந்தும் இன்னமும் ஏன் போலீஸாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. நயன்தாரா போன்ற...
கேப்டன் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட ஐசரி-பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி..!

கேப்டன் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட ஐசரி-பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்தனர். மேலும் இந்த சந்திப்பின் போது, தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்கியராஜ், பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசிரி.கணேஷ், பொருளாளர் பிரசாந்த், துணை தலைவர்கள் குட்டி பத்தமினி, உதயா மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோர் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐசரி கனேஷ் பேட்டி: நடிகர் விஜயகாந்த்தை சந்தித்து எங்கள் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். இன்னும் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். ராதாரவி மட்டுமின்றி எங்கள் அணிக்கு எல்லாருடைய ஆதரவும் உள்ளது என்றார். இந்த தேர்தலில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்றும், நடிகர் சங்...
ஜெ., சமாதியில் மாம்பழ கூடை வைத்து நடிகை விந்தியா அஞ்சலி..!

ஜெ., சமாதியில் மாம்பழ கூடை வைத்து நடிகை விந்தியா அஞ்சலி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஜெ., சமாதியில் மாம்பழ கூடை வைத்து நடிகை விந்தியா அஞ்சலி..! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு அதிமுக தலைவர்கள் மாலை, மலர்களுடன் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்வதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான விந்தியா நேற்றிரவு திடீரென ஜெயலலிதா சமாதிக்கு மாம்பழக்கூடையுடன் வந்தார். விந்தியாவுக்கு ஆந்திராவில் 200 ஏக்கரில் மாம்பழ தோட்டம் ஒன்று உள்ளது. வித விதமான மாம்பழங்களை அங்கே அறுவடை செய்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ஒவ்வொரு ஆண்டும் அதில் விளையும் மாம்பழங்களில் ஒரு பகுதியை அவர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஜெயலலிதா மரணமடைந்ததால் அவர் நினைவாக வழக்கமாக அவருக்கு அனுப்பி வைக்கும் வகையில் விந்தியா மாந்தோப்பில் விளைந்த மாம்பழங்களில் கொஞ்சம் எடுத்து கொண்டு ஜெயலலிதாவின் சமாதிய...
கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வெளியில் பறக்காதாம்…!

கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வெளியில் பறக்காதாம்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வெளியில் பறக்காதாம்...! ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அதுமட்டுமின்றி மாநாட்டின் இடையே அவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பிரதமர் மோடி சந்தித்து பேசும் திட்டம் எதுவும் கிடையாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஏற்கனவே புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இந்திய போர் விமானங்கள் சென்று லேசர் குண்டு வீச்சு நடத்...
நடிகர் சங்க நில மோசடி வழக்குக்கு பயந்து அதிமுகவில் ஐக்கியமானாரா ராதாரவி? – கோடங்கி ஸ்பெஷல்

நடிகர் சங்க நில மோசடி வழக்குக்கு பயந்து அதிமுகவில் ஐக்கியமானாரா ராதாரவி? – கோடங்கி ஸ்பெஷல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க நில மோசடி வழக்குக்கு பயந்து அதிமுகவில் ஐக்கியமானாரா ராதாரவி? நடிகர் ராதாரவி முதலில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுக வந்தார். பின்னர் அங்கிருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். அதன் பின் மீண்டும் திமுக வந்தார். சமீபத்தில் நடைபெற்ற கொலையுதிர் காலம் பட விழாவில் நடிகை நயன்தாராவை தரக்குறைவான வகையில் விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இதனால் திமுக தலைமையால் கட்சியில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டார். அதன் பின் எந்த கட்சியிலும் சேராமல் இருந்த ராதாரவி திடீரென மீண்டும் அதிமுகவில் இணைந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து அதிமுகவில் ஐக்கியமாகி விட்டார். இந்த திடீர் சேர்க்கைக்கு நடிகர் சங்க நில மோசடி வழக்கு விசாரணையும், பயமும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ராதாரவி பதவியில் இருந...
நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்… ஒரு பகீர் ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்… ஒரு பகீர் ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்... ஒரு பகீர் ரிப்போர்ட் நடிகர் சங்கத்திற்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடப்பது தெரிந்ததே. முந்தைய பாண்டவர் அணி சார்பில் ஒரு டீமும், ஐசரி கணேஷ்-பாக்யராஜ் கூட்டணி தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி பெயரில் ஒரு டீமும் களத்தில் நிற்கிறார்கள். 29 பதவிகளுக்கு 76பேர் நிற்கிறார்கள். விஷால் தலைமையில் உள்ள பாண்டவர் அணி மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு எதையும் வைக்க முடியாததால் பாக்யராஜ் -ஐசரி கணேஷ் அணி நடிகர் சங்க கட்டட பணிகள் தாமதத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கிடையில் பாண்டவர் அணியில் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலை தவிர மற்ற எந்த பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. அதே நேரம் நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ஒருகோடி ரூபாய் நிதி கொடுத்து, சுமார் 2 கோடிவரை 1.1 சதவீத வட்டியில் கடன் கொடுத்ததோடு ...
வருகிறது இ-சிகரெட்டுகளுக்கான தடை..!

வருகிறது இ-சிகரெட்டுகளுக்கான தடை..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிகரெட் பாதிப்பு மரணம் வரை கொண்டு செல்லும் என்பதால் பல நாடுகளில் சிகரெட்டுக்கு தடை உள்ளது. நம்மூரிலும் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை உள்ளது. ஒரு சில நாடுகளில் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இ-சிகரெட் என்ற எலெக்ட்ரானிக் சிகரெட்கள் பயன்படுத்தப்படுகிறது. இது நிகோடின் விஷத்தன்மையை குறைவாகவே கொடுக்கும் என்பதால் இ-சிகரெட் பயன்பாட்டில் உள்ளது. இதனை இந்தியாவில் பயன்படுத்தலாமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தும் படி உத்தரவின்பேரில் போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு செய்தது. அதில் இ-சிகரெட்களும் புகைப்பவர்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் எனபதோடு சிகரெட் தரும் அனைத்து வகை பாதிப்புகளும் இ-சிகரெட்டிலும் இருப்பது தெரியவந்தது ...
நடிகர் சங்க தேர்தலில் ரஜினி – கமல் ஆதரவு யாருக்கு… பரபரப்பு ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலில் ரஜினி – கமல் ஆதரவு யாருக்கு… பரபரப்பு ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலில் ரஜினி - கமல் ஆதரவு யாருக்கு... பரபரப்பு ரிப்போர்ட் நடிகர் சங்க தேர்தல் அடுத்த கட்டத்தை எட்டியது. வரும் 23ம் தேதி தேர்தல் நடை பெற உள்ளது. மொத்தமுள்ள 29 பதவிகளுக்கு விஷாலின் பாண்டவர் அணி, ஐசரி கணேஷ்-பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி இரண்டிலும் சேர்த்து தனித்தனி மனுக்களை கணக்கிட்டால் மொத்தம் 79 பேர் போட்டியிடுகிறார்கள். பாண்டவர் அணியின் தலைவர் நாசரின் வேட்புமனுவை உலக நாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்தும், சின்ன சின்ன வேஷங்களில் நடித்தவரும் டப்பிங் யூனியனில் ராதாரவியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றவருமான சாலமோன் என்பவர் வழிமொழிந்தும் உள்ளனர். நாசரின் வேட்புமனுவை கமல்ஹாசன் முன் மொழிந்ததால் கமல் ஆதரவு பாண்டவர் அணிக்கு என்பது வெட்ட வெளிச்சம் ஆனது. ஆனால் சுவாமி சங்கரதாஸ் அணியின் தலைவர் வேட்பாளர் பாக்யராஜ் வேட்புமனு தாக்கல் செய்த பின் "ரஜினி...