புதன்கிழமை, ஜூன் 10
Shadow

திரைப்படங்கள்

கருத்துக்களை பதிவு செய் முதல் போஸ்டரை வெளியிட்ட திருமாவளவன்..!

கருத்துக்களை பதிவு செய் முதல் போஸ்டரை வெளியிட்ட திருமாவளவன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *சமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை மைய்யாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளப் படம் " கருத்துக்களை பதிவு செய் *இப்படத்தின் முதல் விளம்பர பதாகையை ( First Look Poster ) பாராளுமன்ற உறுப்பினர் " எழுச்சித் தலைவர்  தொல் திருமாவளவன்  வெளியிட்டார். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் பேரன் ஆரியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வங்காளத்தைச் சேர்ந்த உபாசனா அறிமுகம் ஆகிறார். படத்தின் இயக்குனர் ராகுல் மற்றும் படக் குழுவைச் சேர்ந்த ஜே.எஸ்.கே.கோபி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த தோழர் தொல் திருமாவளவன் அவர்கள், இது போன்ற திரைப்படங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், தோழர் வன்னியரசு ஆகியோர் கலந்துகொண்டனர்....
விழுந்து எழுவதும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஜெயிப்பதும் லிப்ரா புரொடக்‌ஷனுக்கு புதிதல்ல… குற்றம் சாட்டியவர்களுக்கு காலம் பதில் சொல்லும் – லிப்ரா ரவி

விழுந்து எழுவதும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஜெயிப்பதும் லிப்ரா புரொடக்‌ஷனுக்கு புதிதல்ல… குற்றம் சாட்டியவர்களுக்கு காலம் பதில் சொல்லும் – லிப்ரா ரவி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    அனைவருக்கும் வணக்கம் கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற மிகப்பிரமாண்டாமான முறையில் புரோமோட் செய்து 350+ க்கும் மேற்ப்பட்ட திரையில் வெளியீடு செய்துள்ளோம் இதற்கு முழு ஆதரவு தந்த விஜயா புரொடக்ஷன்ஸ் சுந்தர் , பாரதிரெட்டி மேடம் அவர்களுக்கும் , இயக்குனர் விஜய் சந்தர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் இறுதிவரை என்னுடன் இருந்து என் உடன்பிறவா அண்ணணாக உதவிய பெடரேசன் தலைவர் .அருள்பதி , அவருடன் சேர்ந்து உதவிய  JSK சதீஷ் குமார், தேணாண்டாள் முரளி ,  H.முரளி அவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்...
மீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கும் “சக்ரா”

மீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கும் “சக்ரா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஷால் நடிப்பில் 'ஆக்ஷன்' படம் வெளியாகும் அன்றே அவர் நடிக்கும் அடுத்தப் படமான 'சக்ரா' படத்தின் முதல் பார்வை போஸ்டரும் இன்று வெளியானது. விஷால் ஃபிலிம் ஃபாக்டரி சார்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இயக்குநராக அறிமுகமாகும் எம் எஸ் ஆனந்தன் இயக்கும் 'சக்ரா' படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறியதாவது :- குடும்ப உணர்வுகளோடு, தொழில் நுட்பம் சார்ந்த ஆக்ஷன் திரில்லரை தேசபக்தியோடு உருவாகும் படம் தான் 'சக்ரா'. தொழில் நுட்பம் சார்ந்தது என்பதால் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு படமாகவும் இருக்கும். அறிமுக இயக்குநருக்கு முதல் படத்திலேயே பெரிய நாயகன் கிடைப்பது அதிர்ஷ்டம். அதிலும், விஷால் நாயகனாக கிடைத்தது என்னுடைய மிகப்பெரிய அதிர்ஷ்டம். ஒரு இயக்குநராக 'சக்ரா' படத்திற்கு கதை எழுதும்போதே இந்த மிலிட்டரி அலுவலர் கதாபாத்திரத்திற்கு...
28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் அமலா..!

28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் அமலா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நான் இன்னொரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு திரும்பி வந்துள்ளேன்.. அமலா அக்கினேனி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் தமிழில் திரைப் பயணத்தைத் தொடங்கும் அமலா அக்கினேனியின் செய்தி. 'மைதிலி என்னை காதலி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி 1980-90 களில் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா. ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடித்த பல படங்கள் வெற்றி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றிருக்கிறார். 1991-ல் ஃபாசில் இயக்கத்தில் 'கற்பூர முல்லை' படத்தில் தனி நாயகியாக நடித்திருந்தார். அதன் பின்பு தெலுங்கு ந...
தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..!

தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் பிரமாண்ட படம் தர்பார். இதில் ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு உட்பட பலர் நடிக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது. இப்போது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது. ரஜினிகாந்த் டப்பிங் பணியை இன்று தொடங்கினார். இன்றும் நாளையம் அவர் நடித்த காட்சிகளில் டப்பிங் பேசி முடிக்க இருக்கிறார் ரஜினி. ரஜினி டப்பிங் பேசும் படங்கள் வெளியாகி வைரல் ஆனது....
தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஆக அறிமுகமாகும் படம் ஹாலிவுட் ரீமேக்கா..!?

தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஆக அறிமுகமாகும் படம் ஹாலிவுட் ரீமேக்கா..!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் தனஞ்செயன். பல படங்களை தயாரித்திருந்த தனஞ்செயன் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கப்போவதாகவும், அதற்காக பல மாதங்களாக கதை விவாதத்தில் ஈடுபட்டு அழகான திரைக்கதையை உருவாக்கி படத்தையும் பூஜை போட்டு தொடங்கி விட்டார் என சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வந்தது. இந்த நிலையில் சமூக வலைதளபக்கம் ஒன்றில் தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஆக உள்ள படம் ஹாலிவுட் ரீமேக் என பதிவு வெளியாக தமிழ் திரையுலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஏற்கனவே கதை திருட்டு புகார்களில் தமிழ் திரையுலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. பலரும் நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கி வருகிறார்கள். இந்த சூழலில் தயாரிப்பாளர் இயக்குநர் ஆகும் படம் ரீமேக் படம் என்ற தகவல் உண்மையா இல்லையா என்பதை சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் இயக்குனர் தான் சொல்ல முடியும். காத்திருப்போம். - கோடங்கி...
நடிகர் அவதாரம் எடுத்த பிரபல முன்னணி தயாரிப்பாளர்..!

நடிகர் அவதாரம் எடுத்த பிரபல முன்னணி தயாரிப்பாளர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தரமணி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜேஎஸ்கே, மம்மூட்டி நடித்த 'பேரன்பு' படத்தில் கெளரவ வேடமொன்றில் நடித்திருந்தார். தற்போது அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் பிரதான வேடங்களில் நடிக்கும் 'அக்னி சிறகுகள்' படத்தில் வலுவான பாத்திரமொன்றில் நடித்து வருகிறார். இயக்குநர் நவீன் 'அக்னி சிறகுகள்' படத்தில் நடிக்க அணுகியபோது, கதையிலும் தன் பாத்திரப் படைப்பிலும் வெகுவாக கவரப்பட்ட ஜேஎஸ்கே இப்போது அப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான காட்சிகள், படத்தில் நடிக்கும் பிரதான பாத்திரங்களுடன் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சிவா தயாரிக்கும் 'அக்னி சிறகுகள்' படத்துடன், சிபிராஜ் நடிக்கும் 'கபடதாரி', ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றிலும் நல்ல வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க...
நீண்ட நாட்களுக்கு பின் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா..!

நீண்ட நாட்களுக்கு பின் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா-இளையராஜா சந்திப்பு நிகழ்ந்து அது பரபரப்பான செய்தியானது. அதேப்போல தேனியில் பாரதிராஜா-ராதிகா சந்திப்பு நிகழ்ந்தது. திருமணம் ஒன்றிற்காக தேனி சென்றிருந்தார், இயக்குநர் பாரதிராஜா. அங்கு பாரதிராஜாவின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கும் ' மருதா ' படப்பிடிப்பில் இருந்த ராதிகா, பாரதிராஜா வீட்டுக்கு சென்று சந்தித்து இருவரும் உரையாடி இருக்கின்றனர். நேற்றைய காலை உணவு பாரதிராஜா வீட்டில்தான்..!...
ஆக்‌ஷன் என் சினிமா கேரியரில் மிகப் பெரிய படம் – விஷால் மகிழ்ச்சி

ஆக்‌ஷன் என் சினிமா கேரியரில் மிகப் பெரிய படம் – விஷால் மகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      இயக்குனராக நினைப்பவர்கள் , ஈகோ பார்க்காமல் அனைவரும் ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் – நடிகர் விஷால் ‘ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசிய விபரம் வருமாறு வசனகர்த்தா பத்ரி பேசும்போது, டிரைலரை பார்க்கும்போதே தெரிந்திருக்கும் ஆக்ஷன் பொருத்தமான பெயர் தான் என்று. இன்னொரு பெயர் உலகம் சுற்றம் வாலிபன் என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக நாடுகள் பலவற்றில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இப்படம் விஷால் ரசிகர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றார். நடிகர் சாரா பேசும்போது, சுந்தர் அண்ணா எப்படி இயக்குகிறார் என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அ...