வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுப் பிரியர்கள் ஆனதற்கு தெருவுக்கு தெரு அரசு டாஸ்மாக் கடை திறந்ததுதான் காரணம் – அறிமுக இயக்குனர் அதிரடி

ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுப் பிரியர்கள் ஆனதற்கு தெருவுக்கு தெரு அரசு டாஸ்மாக் கடை திறந்ததுதான் காரணம் – அறிமுக இயக்குனர் அதிரடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுப் பிரியர்கள் ஆனதற்கு தெருவுக்கு தெரு அரசு டாஸ்மாக் கடை திறந்ததுதான் காரணம் - அறிமுக இயக்குனர் அதிரடி ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில்,கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் “தனுஷு ராசி நேயர்களே”. இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இவர் நடிகர் சந்தானபாரதியின் மகன். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையையும், அதனை தொடர்ந்த நடக்கும் அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். யோகிபாபு காமெடி பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி மில்லியன் ...
வெற்றி களைக்கட்டும் புதிய கூட்டணி. “வானம் கொட்டட்டும்” முதல் பாடல் வெளியீடு!

வெற்றி களைக்கட்டும் புதிய கூட்டணி. “வானம் கொட்டட்டும்” முதல் பாடல் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வெற்றி களைக்கட்டும் புதிய கூட்டணி. “வானம் கொட்டட்டும்” முதல் பாடல் வெளியீடு. மணிரத்னம் வழங்கும் மெட்ராஸ் டாக்கீஸ் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது. பாடகர் சித்ஸ்ரீராம் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது. முதல் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்தார். புது கவிஞர் சிவா அனந்த் எழுதிய வரிகள் அனைத்தும் மக்களிடையே வெகுவாக கவர்ந்துள்ளது. மெலோடி பாடலான ‘கண்ணு தங்கம் ராசாத்தி.. உன்ன கண்டாலே நெஞ்சு மூச்சூடும் தீவாளி.. சொன்னா வம்பு மகராசி ஒம் பேரு சொல்லாட்டி.. மழை ஊருக்கு பெய்யாது டீ.. தனியில நடக்கையில்.. எனக்கு நீ துணையிரு.. மடியில... மனசுல... உறங்கிட... யெடங்கொடு...’ இந்த பாடல் வரிகள் ஹிட்டாகி உள்ளது. இந்த புது காம்பினேஷனான சித்ஸ்ரீராம் - சிவா அனந்த் கூட்டணியின் மற்ற பாடல்களு...
சந்தானம் – இயக்குநர் ஆர்.கண்ணன் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

சந்தானம் – இயக்குநர் ஆர்.கண்ணன் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சந்தானம் - இயக்குநர் ஆர்.கண்ணன் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. மசாலா ஃபிக்ஸ் உடன் இணைந்து M.K.R.P. புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமான இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத் பகுதிகளில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது. விரைவில் பெயர் சூட்டபடவிருக்கும் இதன் டைட்டில் லுக் முதலில் வெளிவரவிருக்கிறது. இந்த டைட்டிலில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது என்று மட்டும் சொன்னார் இயக்குநர் ஆர்.கண்ணன். முழுக்க முழுக்க நகைச்சுவையில் மீண்டும் கலக்கியிருக்கிறார் சந்தானம். நகைச்சுவை, காதல், ஆக்ஷன் என முழு மசாலாவாக படம் தயாராகி வருகிறது. குடும்பங்கள் ரசிக்கும் வகையில் அமைந்த இப்படத்தில் தாரா அலிஷா பெர்ரி நாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சுவாதி முப்பாலா நடிக்க, ஆனந்த்...
கருத்துக்களை பதிவு செய் முதல் போஸ்டரை வெளியிட்ட திருமாவளவன்..!

கருத்துக்களை பதிவு செய் முதல் போஸ்டரை வெளியிட்ட திருமாவளவன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *சமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை மைய்யாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளப் படம் " கருத்துக்களை பதிவு செய் *இப்படத்தின் முதல் விளம்பர பதாகையை ( First Look Poster ) பாராளுமன்ற உறுப்பினர் " எழுச்சித் தலைவர்  தொல் திருமாவளவன்  வெளியிட்டார். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் பேரன் ஆரியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வங்காளத்தைச் சேர்ந்த உபாசனா அறிமுகம் ஆகிறார். படத்தின் இயக்குனர் ராகுல் மற்றும் படக் குழுவைச் சேர்ந்த ஜே.எஸ்.கே.கோபி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த தோழர் தொல் திருமாவளவன் அவர்கள், இது போன்ற திரைப்படங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், தோழர் வன்னியரசு ஆகியோர் கலந்துகொண்டனர்....
விழுந்து எழுவதும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஜெயிப்பதும் லிப்ரா புரொடக்‌ஷனுக்கு புதிதல்ல… குற்றம் சாட்டியவர்களுக்கு காலம் பதில் சொல்லும் – லிப்ரா ரவி

விழுந்து எழுவதும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஜெயிப்பதும் லிப்ரா புரொடக்‌ஷனுக்கு புதிதல்ல… குற்றம் சாட்டியவர்களுக்கு காலம் பதில் சொல்லும் – லிப்ரா ரவி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    அனைவருக்கும் வணக்கம் கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற மிகப்பிரமாண்டாமான முறையில் புரோமோட் செய்து 350+ க்கும் மேற்ப்பட்ட திரையில் வெளியீடு செய்துள்ளோம் இதற்கு முழு ஆதரவு தந்த விஜயா புரொடக்ஷன்ஸ் சுந்தர் , பாரதிரெட்டி மேடம் அவர்களுக்கும் , இயக்குனர் விஜய் சந்தர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் இறுதிவரை என்னுடன் இருந்து என் உடன்பிறவா அண்ணணாக உதவிய பெடரேசன் தலைவர் .அருள்பதி , அவருடன் சேர்ந்து உதவிய  JSK சதீஷ் குமார், தேணாண்டாள் முரளி ,  H.முரளி அவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்...
மீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கும் “சக்ரா”

மீண்டும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கும் “சக்ரா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஷால் நடிப்பில் 'ஆக்ஷன்' படம் வெளியாகும் அன்றே அவர் நடிக்கும் அடுத்தப் படமான 'சக்ரா' படத்தின் முதல் பார்வை போஸ்டரும் இன்று வெளியானது. விஷால் ஃபிலிம் ஃபாக்டரி சார்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இயக்குநராக அறிமுகமாகும் எம் எஸ் ஆனந்தன் இயக்கும் 'சக்ரா' படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறியதாவது :- குடும்ப உணர்வுகளோடு, தொழில் நுட்பம் சார்ந்த ஆக்ஷன் திரில்லரை தேசபக்தியோடு உருவாகும் படம் தான் 'சக்ரா'. தொழில் நுட்பம் சார்ந்தது என்பதால் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு படமாகவும் இருக்கும். அறிமுக இயக்குநருக்கு முதல் படத்திலேயே பெரிய நாயகன் கிடைப்பது அதிர்ஷ்டம். அதிலும், விஷால் நாயகனாக கிடைத்தது என்னுடைய மிகப்பெரிய அதிர்ஷ்டம். ஒரு இயக்குநராக 'சக்ரா' படத்திற்கு கதை எழுதும்போதே இந்த மிலிட்டரி அலுவலர் கதாபாத்திரத்திற்கு...
28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் அமலா..!

28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் அமலா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நான் இன்னொரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு திரும்பி வந்துள்ளேன்.. அமலா அக்கினேனி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் தமிழில் திரைப் பயணத்தைத் தொடங்கும் அமலா அக்கினேனியின் செய்தி. 'மைதிலி என்னை காதலி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி 1980-90 களில் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா. ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடித்த பல படங்கள் வெற்றி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றிருக்கிறார். 1991-ல் ஃபாசில் இயக்கத்தில் 'கற்பூர முல்லை' படத்தில் தனி நாயகியாக நடித்திருந்தார். அதன் பின்பு தெலுங்கு ந...
தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..!

தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் பட டப்பிங் தொடங்கினார் ரஜினி..! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் பிரமாண்ட படம் தர்பார். இதில் ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு உட்பட பலர் நடிக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது. இப்போது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது. ரஜினிகாந்த் டப்பிங் பணியை இன்று தொடங்கினார். இன்றும் நாளையம் அவர் நடித்த காட்சிகளில் டப்பிங் பேசி முடிக்க இருக்கிறார் ரஜினி. ரஜினி டப்பிங் பேசும் படங்கள் வெளியாகி வைரல் ஆனது....
தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஆக அறிமுகமாகும் படம் ஹாலிவுட் ரீமேக்கா..!?

தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஆக அறிமுகமாகும் படம் ஹாலிவுட் ரீமேக்கா..!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் தனஞ்செயன். பல படங்களை தயாரித்திருந்த தனஞ்செயன் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கப்போவதாகவும், அதற்காக பல மாதங்களாக கதை விவாதத்தில் ஈடுபட்டு அழகான திரைக்கதையை உருவாக்கி படத்தையும் பூஜை போட்டு தொடங்கி விட்டார் என சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வந்தது. இந்த நிலையில் சமூக வலைதளபக்கம் ஒன்றில் தயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஆக உள்ள படம் ஹாலிவுட் ரீமேக் என பதிவு வெளியாக தமிழ் திரையுலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஏற்கனவே கதை திருட்டு புகார்களில் தமிழ் திரையுலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. பலரும் நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கி வருகிறார்கள். இந்த சூழலில் தயாரிப்பாளர் இயக்குநர் ஆகும் படம் ரீமேக் படம் என்ற தகவல் உண்மையா இல்லையா என்பதை சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் இயக்குனர் தான் சொல்ல முடியும். காத்திருப்போம். - கோடங்கி...