வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

நடிகைகள்

நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்

நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய் நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், நாடக கலைஞர்கள், பழம் பெரும் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய வாக்கை பதிவு செய்திருக்கிறார். நடிகர் விஜய் வரும் போது கடும் தள்ளுமுள்ளு நடைபெற்றது. போலீசார் சிரமபட்டு விஜயை பாதுகாப்புடன் வாக்களிக்க வைத்து அனுப்பி வைத்தனர்....
தமிழ் நடிகைக்கு திடீர் திருமணம்..!

தமிழ் நடிகைக்கு திடீர் திருமணம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  தமிழில் செல்வா இயக்கிய ‘நாங்க’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஷ்ணுபிரியா. புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஸ்பீடு டிராக் படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். ராத்திரி மழா, மகர மன்சு, கிரைம் ஸ்டோரி, பெண் பட்டினம், நாட்டி பிரபொசர், காட்ஸ் ஓன் கண்ட்ரி உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாள டி.வி. தொடர்களிலும் நடிக்கிறார். விஷ்ணுபிரியா பரதநாட்டியம் கற்றவர். மேடை நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடி வருகிறார். விஷ்ணுபிரியாவுக்கும், பிரபல மலையாள இயக்குனரும் தயாரிப்பாளருமான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய்க்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் ஆழப்புழையில் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர்...
ஆதியின் ‘கிளாப்’ ஷூட்டிங் சத்தமில்லாமல் வேகமெடுக்க தொடங்கிடுச்சி..!

ஆதியின் ‘கிளாப்’ ஷூட்டிங் சத்தமில்லாமல் வேகமெடுக்க தொடங்கிடுச்சி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆதியின் 'கிளாப்' ஷூட்டிங் சத்தமில்லாமல் வேகமெடுக்க தொடங்கிடுச்சி..! அடுத்த எதிர்வரும் நாட்களுக்கு, ஆதி வியர்வையில் நனைவது, தசைகளை நெகிழச் செய்வது, மூட்டுகளை நீட்டுவதை நீங்கள் காண முடியும். ஆம், ஒரு கடுமையான தடகள வீரரான அவர், அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் “கிளாப்” படத்தில், தன் கதாபாத்திரத்திற்கு தன் உயிரையும், ஆன்மாவையும் தந்து உழைக்கிறார். ‘தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்’ என்ற உத்வேகம் அளிக்கும் டேக்லைன் உடன் படம் வெளியாகிறது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிப்பில் ஜூன் 12ஆம் தேதி ஒரு எளிய சடங்கு விழாவுடன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜூன் 20) முதல் முழு வீச்சில் தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள நேர்த்தியான மற்றும் அழகான பகுதிகளில் படமாக்கப்படுகிறது. ஆதி ஒரு பரிபூரணமான தடகள வீரராக பிர...
அருண் விஜய் ஜோடியான நிக்கியின் தங்கை..!

அருண் விஜய் ஜோடியான நிக்கியின் தங்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அருண் விஜய் ஜோடியான நிக்கியின் தங்கை..! அருண்விஜய் நடிக்கும் புதிய படமான ‘பாக்ஸர்’ படத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. விவேக் இயக்கத்தில் மார்க்கஸ் ஒளிப்பதிவில் லியோன் இசையில் உருவாகும் இந்த படத்தை வி.மதியழகன் தயாரிக்கவுள்ளார் இந்த படத்தில் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் என்றாலும் ஏற்கனவே இவர் தெலுங்கு, கன்னட, மலையாள திரையுலகில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜையை அடுத்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது....
சாய் தன்ஷிகா, தமிழிசையுடன் யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு

சாய் தன்ஷிகா, தமிழிசையுடன் யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், நடிகை தன்ஷிகா உடபட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  
உஷ்… இது ரகசியம் ரெஜினாவுக்கு கல்யாணமாம்..!

உஷ்… இது ரகசியம் ரெஜினாவுக்கு கல்யாணமாம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  கண்ட நாள் முதல் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் ரெஜினா கசான்ட்ரா. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பிரபலமானார். சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி, சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது சிம்புதேவன் இயக்கும் கசட தபற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். ‘ஏக் லட்கி கோ தேக்கா’ என்ற படம் மூலம் இந்தியிலும் அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ரெஜினாவுக்கு தற்போது 28 வயது ஆகிறது. நிலையில் ரெஜினாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. குடும்பத்தினர் மட்டுமே இதில் கலந்துகொண்டதாகவும், மிகவும் ரகசியமாக நிச்சயதார்த்தத்தை நடத...
எம்பி ஆன நடிகைக்கு துருக்கியில் தொழிலதிபருடன் டும் டும்..!

எம்பி ஆன நடிகைக்கு துருக்கியில் தொழிலதிபருடன் டும் டும்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  நடிகைக்கு துருக்கியில் தொழிலதிபருடன் டும் டும்..! பாராளுமன்ற தேர்தலில் பசிராத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வங்காள நடிகை நுஸ்ரத் ஜஹான், மூன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு வயது 29. பிரசாரத்தின்போது, இவரைக் காண பெரும் கூட்டம் கூடியது. முதல்முறை எம்.பி.யாகி உள்ள நுஸ்ரத் ஜஹானுக்கு துருக்கி நாட்டில் உள்ள போட்ரம் நகரில் திருமணம் நடைபெற்றது. மணமகன் பிரபல தொழிலதிபர் நிகில் ஜெயின். நுஸ்ரத் ஜஹானின் பெற்றோர், சகோதரி மற்றும் இதர நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், நுஸ்ரத் ஜஹானின் நெருங்கிய தோழியும், அவரைப்போல் எம்.பி. ஆகி உள்ள வங்காள நடிகையுமான மிமி சக்ரவர்த்தியும் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தில் மணமகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நுஸ்ரத் ஜஹான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்...
மலைப்பாம்புடன் மடோனா செபஸ்டியன் சாகசம்..!

மலைப்பாம்புடன் மடோனா செபஸ்டியன் சாகசம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  மலைப்பாம்புடன் மடோனா செபஸ்டியன் சாகசம்..! பிரேமம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபஸ்டியன். அப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுதது அவர் தமிழில் ‘கவண்’, ‘பவர் பாண்டி’ ஆகிய படங்களில் நடித்தார். துணிச்சல் மிக்க நடிகை என பேர் பெற்ற மடோனா மற்ற நடிகைகள் போல கவர்ச்சிபடங்களை பதிவிடாமல் அதிரடி படத்தை பதிவிட்டு இருக்கிறார். சுற்றுலா போன இடத்தில் மலைப்பாம்பை பயமில்லாமல் தன் மீது போட்டுக் கொண்டு மடோனா சாகசம் செய்த படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது....
நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா..! களத்தில் நேரடியாக குதித்த அதிமுக!! – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா..! களத்தில் நேரடியாக குதித்த அதிமுக!! – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா களத்தில் நேரடியாக குதித்த அதிமுக - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் நாடக நடிகர்களின் வீடு வீடாக போய் ஓட்டு கேட்கும் அதிமுக எம்.எல்.ஏ, முன்னாள் மேயர் - இது சேலம் கலாட்டா நடிகர் சங்க தேர்தல் பொது தேர்தலை விட பல திருப்பங்கள், திரை மறைவு வேலைகளில் நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வெறும் 3 ஆயிரத்து சொச்சம் வாக்காளர்கள் இருக்கும் ஒரு அமைப்பு. அதிலும் ஆயிரத்து சொச்சம் உறுப்பினர்கள் மட்டுமே கடந்த முறை வாக்களித்தார்கள். இதைவிட ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட எந்த சங்கத்திலும் அதன் தேர்தல் நேரங்களில் இத்தகைய பரபரப்பு ஏற்படுவதில்லை. இதற்கு காரணம் தமிழக அரசியலையும் திரைத்துறையையும் குறிப்பாக நடிகர்களையும் பிரிக்க முடியாது. சரி விஷயத்திற்கு வருவோம்... நடிகர் சங்கத்தில் ராதாரவி-சரத்குமார் கூட்டணி பதவியில் இருந்த போது ...
கொலைகாரியாக ஹாலிவுட்டில் நடிக்கப் போன ஸ்ருதிஹாசன்..!

கொலைகாரியாக ஹாலிவுட்டில் நடிக்கப் போன ஸ்ருதிஹாசன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  பகலில் ஹோட்டல் பணிப்பெண் இரவில் படுபயங்கர கொலைகாரி ஸ்ருதிஹாசனின் புதிய அவதாரம்..! கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் இப்போது விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் முக்கிய ரோலில் நடிக்க ஸ்ருதி ஹாசன் தேர்வாகியுள்ளார். உலகப்புகழ் பெற்ற Jason Bourne universeன் Treadstone சீரிஸில் தான் ஸ்ருதி நடிக்கிறார். டெல்லியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்துகொண்டே மற்ற நேரங்களில் கொலை செய்பவராக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். ஹங்கேரியின் புத்தாபெஸ்ட்டில் நடக்கவுள்ள ஷூட்டிங்கில் அவர் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார். ஹாலிவுட் படங்களை சீரியல்களை நாம் பார்த்து வியந்த காலம் போய் இப்போது ஹாலிவுட் படங்களில் சீரியஸ்களில் நமது நடிகர்கள், நடிகைகள் நடிப்பது தமிழ் திரைத்துறைக்கு கிடைத்த மரியாதை என்றே சொல்லலாம்.  ...