சவுந்தர்யா விசாகனின் நீச்சல் குள படம்… பதிவிட்ட சில மணிகளில் டெலிட் செய்யப்பட்ட மர்மம்..!
நீச்சல் குளத்திலிருந்து சவுந்தர்யா விசாகன் வெளியிட்ட படம்... சில மணிகளில் டெலிட் செய்யப்பட்ட மர்மம்..!
ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா விசாகன் அடிக்கடி சமூக வலை தளத்தில் ஏதாவது படத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவார்.
இப்போதும் ஒரு நீச்சல் குள படத்தை பதிவிட்டதால் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
குழந்தைகளுக்கு நீச்சல் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு கருத்தை எழுதி அதற்கு ஏற்றார் போல தன் மகன் வேத் உடன் தானும் நீச்சல் குளத்தில் படுத்துக் கொண்டு ஒய்யாரமாக போட்டோவும் பதிவிட்டார்.
இதுதான் எல்லா சர்ச்சைக்கும் காரணமாக அமைந்தது. தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நேரத்தில் நீச்சல் குளத்தில் ஒய்யார போஸ் அவசியமா என கடுமையான கமெண்ட்கள் வந்ததால் உடனடியாக அந்த பதிவை நீக்கினார் சவுந்தர்யா....









