புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ (MANTHIRA STUDIOS) – ஆர்.டி. ராஜா அறிவிப்பு!
தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளையும், புதுமையான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா புதிய தயாரிப்பு நிறுவனமான ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் வழக்கமான திரைப்பட உருவாக்க முறைகளைத் தாண்டி, புதிய தொழில்நுட்பங்களுடன் தனித்துவமான படைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
33 ஆண்டுகால அனுபவம் கொண்ட கலை இயக்குநரான டி. முத்துராஜ், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயக்கி, தயாரிக்கும் ஹைப்பர் ரியலிஸ்டிக் டிஜிட்டல் ஹைப்ரிட் ஃபீச்சர் ஃபிலிம் (HYPER - REALISTIC DIGITAL -HYBRID FEATURE FILM), மெய்நிகர் தொழில்நுட்பத்தையும் புதுமைய...
தனது தாத்தா அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளில் புதிய அலுவலகம் திறந்த அல்லு அர்ஜூன்!
மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் 'ICONZA' என்ற தனது புதிய அலுவலகத்தை திறந்தார்.
எளிமையாக நடைபெற்ற தொடக்க விழா பூஜையில் அல்லு அர்ஜூன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பான நாளின் புகைப்படங்களைப் பகிர்ந்த அல்லு அர்ஜுன், தனது தாத்தாவின் நிலைத்திருக்கும் கலைப் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிப்பாக இந்த புதிய அலுவலகம் செயல்படும் என்றார்.
இந்திய சினிமாவின் முன்னோடியாகப் போற்றப்படும் அல்லு ராமலிங்கய்யா அவர்களின் புகழ்பெற்ற திரைப்பயணம் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் உள்ளடக்கியது. தனது தாத்தாவின் பிறந்தநாளில் இந்த புதிய பயணத்தைத் தொடங்கும் அல...
'த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி ராஜ்குமார் தியேட்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது
எதிர்மனுதாரர்களின் பதில் மற்றும் வழக்கின் விசாரணைக்காக அக்டோபர் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மலையாளத்தில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி மொழி ரீமேக் மற்றும் அதன் வர்த்தகப் பயன்பாடு தொடர்பான தங்களது உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. விசாரணை நடைபெற்று முடியும் வரை, ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி பதிப்பை உலகின் எந்தப் பகுதியிலும் வெளியிடுதல...
அப்போலோ மருத்துவமனைகளின் ₹8,600 கோடி விரிவாக்கத் திட்டம் – திட்ட இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா (Upasana Kamineni Konidela) நியமனம்!
புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்துதல், நோயாளிகளுக்கான மருத்துவச் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை உபாசனா காமினேனி கொனிடெலா மேற்கொள்ள உள்ளார்.
அப்போலோ மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் தனது மருத்துவக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், உபாசனா காமினேனி கொனிடெலாவை Director – Projects பொறுப்பில் நியமித்துள்ளது. அப்போலோ குழுமத்தின் தலைமை நிர்வாகம், மருத்துவக் குழுக்கள் மற்றும் திட்டப் பங்குதாரர்களுடன் இணைந்து, இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள மருத்துவமனைத் திட்டங்களின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் பணிகளில் அவர் கவனம் செலுத்த உள்ளார்.
...
மூன்று சமையல் ஜாம்பவான்கள். ஒரே பிரம்மாண்ட சமையலறை,விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகும் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில்,Chef Sashi Cheliah, Chef Venkatesh Bhat மற்றும் Chef Shreeya Adka ஆகியோர் நடுவர்களாக இடம்பெறுகின்றனர்.
சமையலறை தயாராகிவிட்டது. ஏப்ரன்கள் அணியப்பட்டுவிட்டது.இனி Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமையலுடன் சேர்ந்து பரபரப்பாக இருக்க போகிறது.
Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்த புதிய சமையல் நிகழ்ச்சி, சுவையான உணவுகளுடன் எதிர்பாராத திருப்பங்களையும், சுவாரஸ்யமான போட்டிகளையும் வழங்க இருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக புகழ்பெற்ற Chef, உணவக உரிமையாளர், Hospitality துறை நிபுணர் மற்றும் தொலைக்காட்சியில் பிரபலமான Chef Venkatesh Bhat, MasterChef Australia Season 10 வெற்றியாளர் Chef Sashi Cheliah, மேலும் கோய...
400-க்கும் மேற்பட்ட வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள் ரத்ததானம்: “ரத்தம் கொடுப்போம்; நம்பிக்கையை வழங்குவோம்” என்ற செய்தியுடன் சிறப்பு ரத்ததான முகாம்
இந்தியாவின் முன்னணி உணவக நிறுவனங்களில் ஒன்றான வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில், ஊழியர்களுக்கான சிறப்பு ரத்ததான முகாம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விபி வேர்ல்டு (VB World) வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.
செப்டம்பர் 22 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த ரத்ததான முகாம், சமூக நலனுக்கு பங்களிக்கும் நோக்கிலும், ஊழியர்களிடையே தன்னார்வ ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முன்னெடுப்பு...