செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

தனுஷின் அசுரன் 100 நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் தாணு நன்றி!

தனுஷின் அசுரன் 100 நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் தாணு நன்றி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தனுஷின் அசுரன் 100 நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் தாணு நன்றி! தனுஷின் அசுரன் திரைப்படம் 100-வது நாளாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு திரைப்படமும் தொடர்ந்தார் போல 2 வாரங்களை கடப்பதே அரிதாகிவிட்டது. அதிலும் 100 நாட்கள் ஓடுவது மிகப் பெரிய இமாலய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் அப்படி சில தமிழ் படங்களே அச்சாதனையை படைத்துள்ளது. ஒரு திரைப்படம், ஒரே நாளில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகி 100-வது நாளைத் தொட்டுள்ளது படம் சமீபத்தில் அசுரன் மட்டும் தான். வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் -மஞ்சு வாரியர் ஜோடி நடிப்பில் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியான படம் அசுரன். இப்படத்தில் கென் கருணாஸ், டீஜே அருணாசலம், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபி...
MGR சுடப்பட்ட தினம் இன்று – நீங்காத நினைவுகள்

MGR சுடப்பட்ட தினம் இன்று – நீங்காத நினைவுகள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  இதே ஜனவரி 12ம் நாள். 1967 - எம். ஜி. ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டார். அன்று மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். எம். ஜி. ஆருக்கும் எம். ஆர் . ராதாவுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி ராதா தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கி மூலம் எம். ஜி. ஆரை சுட்டதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவரது இடது காதருகே சுடப்பட்டார். துப்பாக்கி குண்டு அவரது தொண்டையில் பாய்ந்தது. இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும். எம் ஆர். ராதா மீது வழக்கு தொடர...
ரிலீஸ் ஆன அன்றே 100 கோடியை தாண்டிய மெகா வசூல்… தர்பார் மூலம் 2ம் முறையாக சாதனை படைத்த ரஜினிகாந்த்!

ரிலீஸ் ஆன அன்றே 100 கோடியை தாண்டிய மெகா வசூல்… தர்பார் மூலம் 2ம் முறையாக சாதனை படைத்த ரஜினிகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ரிலீஸ் ஆன அன்றே 100 கோடியை தாண்டிய மெகா வசூல்... தர்பார் மூலம் 2ம் முறையாக சாதனை படைத்த ரஜினிகாந்த்! லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் உலகம் முழுதும் ஏராளமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், சத்தமில்லாமல் உலகளவில் ரஜினிகாந்த் ஒரு சாதனையை செய்துள்ளார். பொதுவாக தமிழ் நடிகர்களின் திரைப்படம் ஒரு வாரத்தில் 100 கோடி வசூல் செய்துள்ளது என்றாலே 100 கோடி கிளப்பில் சேர்ந்து விட்டார்கள் என பெரிதாக கொண்டாடுவார்கள். இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.119 கோடியை வசூல் செய்து மாபெரும் சாதனையை செய்துள்ளது. அதோடு, இந்திய நடிகர்களிலயே இரண்டு முறை இந்த 100 கோடி சாதனையை செய்த ஒரே நடிகர் என்ற பெயரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுள...
500 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் போத்ரா மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!

500 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் போத்ரா மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  500 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் போத்ரா மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழக அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்! கடன் பிரச்சனை தொடர்பான கைது செய்யப்பட்ட தன்னையும், தன் குடும்பத்தினரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டதற்காக ரூ.500 கோடி இழப்பீடு வழங்க கேட்டு, பிரபல சினிமா பைனான்சியர் போத்ராவின் மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சென்னை போலீஸ் கமிசனர் ஏ.கே. விஸ்வநாதன், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக,  சென்னை சவுகார்பேட்டை, தங்கச்சாலை தெருவைச்  சேர்ந்த ககன் போத்ரா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை முகுந்த் சந்த் போத்ரா பிரபல சினிமா பைனான்சியர் மற்றும் வைர மதிப்பீட்டாளர். சினிமா தயாரிப்பாளர்கள், நட...
பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி” பாடல் புரோமோவுக்கு 2 மில்லியன்  ரசிகர்கள் வரவேற்பு!

பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி” பாடல் புரோமோவுக்கு 2 மில்லியன் ரசிகர்கள் வரவேற்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் "ஜிகிடி கில்லாடி" பாடல் புரோமோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு! பொங்கலுக்கு வெளியாகவுள்ள தனுஷின் பட்டாஸ் திரைப்படத்திலிருந்து ‘ஜிகிடி கில்லாடி' பாடல் ப்ரோமோ வெளியாகி வைராகிவருகிறது. ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘பட்டாஸ்'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேரீன் பிர்ஜாதா மற்றும் சினேகா நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபில்ம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷ் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்துக்கு விவேக்-மெர்வின் கூட்டணி இசையமைத்துள்ளது. இப்படத்திலிருந்து தனுஷ் பாடிய ‘சில் ப்ரோ' உட்பட அனைத்துப் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அதையடுத்து, இப்படத்தின் அதிகாரப்பூரவ ட்ரைலர் ரிலீஸ் ஆகி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. தணிக்கைக் குழு இப்படத்துக்கு ‘யூ' சான்றிதழ் வழங்கியுள்ளது. ஜனவரி 15-ஆம் த...
விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது!

விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது! விபசாரத்திற்கு பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது செய்யப்பட்டுள்ளது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மும்பையில் உள்ள கோரேகாவ்ன் பகுதியில் இருக்கும் 5 ஸ்டார் ஹோட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போலியாக வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்பியதில் அங்கு விபசாரம் நடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹோட்டலுக்குள் நுழைந்த போலீஸ் துணை கமிஷனர் டி.எஸ்.சுவாமி தலைமையிலான போலீசார் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டு இருந்த 2 பெண்களை மீட்டனர். . அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பாலிவுட் நடிகை அம்ரிதா தனோவா(32) மற்றும் மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரிதா மற்றும் ரிச்சா ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் விபசார த...
விஜய் படத்துக்காக நீண்ட தலைமுடியுடன் புது கெட்டப்பில் விஜய் சேதுபதி..!

விஜய் படத்துக்காக நீண்ட தலைமுடியுடன் புது கெட்டப்பில் விஜய் சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஷிமோகா உட்பட பல இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் தற்போது பிரமாண்ட செட் அமைத்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய்சேதுபதி இந்த படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதற்காக இரட்டை லகர கோடிகள் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இதற்காக தனது கெட்டப்பையும் நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமாக மாற்றி இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த புகைப்படமும் இணையத்தில் வைரல ஆனது. பொங்கல் முடிந்ததும் விஜய் - விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் கூறப்பட்டது....
4 நாட்களுக்கு தர்பார் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி!

4 நாட்களுக்கு தர்பார் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. தமிழ் சினிமாவில் சமீப காலமாக பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். விஜய் நடித்த பிகில் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டு நீண்ட இழுபறிக்கு பின் ஒரு நாள் அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது. இந்நிலையில் ரஜினி நடித்த தர்பார் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில் தர்பார் படத்துக்கும் சிறப்பு காட்சிகள் வழங்காமல் இழுபறி நிலை இருந்தது. இந்நிலையில் பல கட்ட பேச்சுக்கு பின் 4 நாட்களுக்கு சிறப்பு காட்சிகள் நடத்த அரசு அனுமதி அளித்தது. அதோடு மலேசியாவில் ரிலீஸ் ஆக இருந்த தடையும் கோர்ட் உத்தரவு படி விலகியதால் படம் உலகம் முழுதும் நாளை ரிலீஸ் ஆகிறது. இது ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தி உள்ளது....
த்ரில்லர் கதையில் ரெஜினா கஸண்ட்ரா..!

த்ரில்லர் கதையில் ரெஜினா கஸண்ட்ரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் புதிய படம் துவக்கம் ! திருடன் போலீஸ், உள்குத்து படங்கள் மூலம் விமர்சக ரீதியிலும் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். Apple Tree studios தங்களது முதல் திரைப்படமாக தயாரிக்க உள்ள இப்படம் மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக தயாராகிறது. ரெஜினா கஸண்ட்ரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஜனவரி 13 முதல் துவங்கவுள்ளது. Apple Tree studios ராஜ் சேகர் வர்மா கூறியதாவது.. ஒரு தயாரிப்பாளராக இல்லாமல் பார்வையாளனாகவே இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்ன கதை, என்னை மிகவும் ஈர்த்தது. எவரும் கேள்விப்பட்டிராத தளத்தில் வித்தியாசமான பாணியில் பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அவரது கதை இருந்தது. சமீப காலம...
கொலை மிரட்டல் புகார்… நடிகர் வடிவேலு தலைமறைவா?! அவரே அளித்த பதில்!

கொலை மிரட்டல் புகார்… நடிகர் வடிவேலு தலைமறைவா?! அவரே அளித்த பதில்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கொலை மிரட்டல் புகார்... நடிகர் வடிவேலு தலைமறைவா!? அவரே அளித்த பதில். நடிகர் வடிவேலு மற்றும் தம்பி மணிகண்டன் உட்பட மேலும் இரண்டுபேர் மீது எலி திரைப்பட தயாரிப்பாளர் கொடுத்த கொலை மிரட்டல் புகார் தொடர்பாக மதுரை கே புதூர் போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத செக்சனில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக் செெய்திகள்வெளியானது இதையடுத்து தான் எப்படியும் கைது செய்யப்படலாம் என நினைத்து நடிகர் வடிவேலு தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது.   மதுரையில் உள்ள அவரது வீட்டில் வடிவேலு இல்லை. அவர் எங்கு சென்றார் என்பதும் தெரியாததால் வடிவேலு தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில் நடிகர் வடிவேலுவிடம் தொலைபேசியில் கேட்ட போது  "என் மீது  எந்த வழக்கும் இல்லை. . நான் எங்கும் தலைமறைவாக ஓடவில்லை. என் தலையை மறைக்கவே முடியாது. மீண்டும் நடிக்க வரப்போவதால் பரபரப்பு கிளப்பி விடுகிறார...