செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா…!

இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர் சங்க தேர்தல் குளறுபடிக்கு ஆர்.கே.செல்வமணி காரணமா...! தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னதாக தலைவர் பதவிக்கு இயக்குனர் பாரதிராஜா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்வில் பெப்சியின் தலைவர் செல்வமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தலைவர் பதவியை பாரதிராஜா திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து இயக்குனர் சங்கத்தில் கடும் குழப்பம் நிலவியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இயக்குனர் சங்க பொதுக்குழுவில் கடும் அமளி ஏற்பட்டது. இயக்குனர் சங்க பெயரை இழந்தது தொடங்கி இப்போது ஏற்பட்ட எல்லா குளறுபடிகளுக்கும் ஆர்.கே.செல்வமணி தான் காரணம் என்று பெரும்பாலான இயக்குனர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டதால் எஸ்.பி.ஜனநாதன், அமீர் ...
டாக்டரை கை பிடித்த இயக்குனர் ஏ.எல்.விஜய்..!

டாக்டரை கை பிடித்த இயக்குனர் ஏ.எல்.விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  டாக்டரை கை பிடித்த இயக்குனர் ஏ.எல்.விஜய்..! பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் திருமணம் எளிமையான முறையில் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை அமலா பாலை திருமணம் செய்துக் கொண்ட விஜய்க்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்த விஜய்க்கு தற்போது 2வது திருமணம் நடந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்....
“பொறுக்கி” வாய்சுக்குத்தான் லாயக்கு… விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் ராதாரவி டீம்..!

“பொறுக்கி” வாய்சுக்குத்தான் லாயக்கு… விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் ராதாரவி டீம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
"பொறுக்கி" வாய்சுக்குத்தான் லாயக்கு... விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் ராதாரவி டீம்..!   பொது வெளியில் அவதூறாக கருத்திட்டு விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் டப்பிங் யூனியன்..! ராதாரவி தலைமையிலான டப்பிங் யூனியன் நிர்வாகிகள் அத்தனை சீக்கிரம் பொது வெளியில் கருத்து பதிவிடுவதில்லை. இதற்கு காரணம் ராதாரவி என்கிற ஒரு நபரின் முழு கட்டுப்பாட்டில் தான் டப்பிங் யூனியன் செயல்படுகிறது. நிர்வாகத்தை எதிர்த்து கருத்து பதிவிடுபவர்களை சங்கத்தை விட்டு வெளியேற்றி விட்டு அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத படி செய்து விடுவார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் பாடகி சின்மயி. இப்போது நடிகர் விஜய் சேதுபதி மீது டப்பிங் சங்கம் திடீரென பாய்ந்திருக்கிறது. அந்த சங்கத்தின் செயலாளர் கதிரவன் பாலு சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை மிக அவதூறான வார்த்தைகளில் வசை பாடி கமெண்ட் போட்டிருக்கிறார். ரா...
கவிஞர் முத்துலிங்கம் வெளியிட்ட சாதனை பயணம் பட பாடல்கள்..!

கவிஞர் முத்துலிங்கம் வெளியிட்ட சாதனை பயணம் பட பாடல்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முதல் படத்திலேயே கலக்கல் ஸ்டார் பட்டத்தை பெற்ற ‘சாதனை பயணம்’ ஹீரோ பரமேஸ்வரர் நடிகர்களின் நடிப்பு திறமையையும், மக்களிடம் அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பையும் பொருத்தே சினிமாவில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், தல அஜித் என்று பல முன்னணி நட்சத்திரங்களின் பெயர்களுக்கு முன்னால் இப்படி தான் பட்டங்கள் சேர்ந்தாலும், தற்போது கோடம்பாக்கத்தில் உதிக்கும் சில திடீர் ஸ்டார்கள் வரும்போதே, பட்டத்துடனேயே வருகிறார்கள். பவர்ஸ் ஸ்டார், பப்ளிக் ஸ்டார், வின் ஸ்டார் என்று மாதம் ஒரு ஸ்டார்கள் கோடம்ப்பாக்கத்தில் அவதரித்தாலும், இவர்களில் திறமை இருப்பவர்கள் நிரந்தர ஸ்டாராக மக்கள் மனதில் நின்றுவிடுகிறார்கள். அந்த வரிசையில், புதிதாக தமிழ் சினிமாவில் அவதரித்திருப்பவர் ‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர். சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தினாலும், ஆசைய...
இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் வேட்புமனு தள்ளுபடி – சங்க தேர்தல் பரபரப்பு

இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் வேட்புமனு தள்ளுபடி – சங்க தேர்தல் பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் வேட்புமனு தள்ளுபடி - தேர்தல் பரபரப்பு தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக சமீபத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் பாரதிராஜா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்ட நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய ஜூலை 21ஆம் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிட இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், பி.வாசு, கே.எஸ். ரவிக்குமார் உள்பட ஒரு சில இயக்குனர்கள் விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இயக்குனர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கான இயக்குனர் அமீர், ஜனநாதன் ஆகியோரின் வேட்புமனு விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. இவர்களின் மனு தள்ளுபடி ஆனது தெரிந்ததும் இயக்குனர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்ப...
விக்ரம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு..!

விக்ரம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விக்ரம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு..! அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரமின் 58-வது படமாக உருவாகும் புதுப்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் வேகமெடுத்திருக்கும் நிலையில், இப்படத்தில் புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துவைக்க இப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் நிறுவனமும் இணைந்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது விக்ரமின் 58-வது படத்தில் நடிக்க விருப்பமுள்ள மற்றும் நடிப்பில் ஆர்வமுள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினர்களும் இமெயில் மூலம் புகைப்படங்களையும், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வீடியோக்களையும் அனுப்புமாறு பதிவிட்டுள்ளார். விக்ரம் நடிப்பில் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியாக உள்ள கடாரம் கொண்டான் படம் ரிலீசுக்கு ரெடியான நிலையில் தனது அடுத்த பட அ...
விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..!

விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..! விஜய் ஆண்டனியின் கொலைகாரனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தில் இணைகிறார் அர்ஜுன். விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அவர் தற்போது கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை கவனித்து கொண்டே விஜய் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளையும் கவனித்து வருகிறார். விஜய்-லோகேஷ் இணையும் இந்த படத்தில் ராஷிகண்ணா மற்றும் ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் கேரக்டர் ஹீரோவுக்கு இணையான வலுவான கேரக்டர் என்பதால்...
அஜீத் படத்தில் நைட் கிளப் ஆங்கில பாடல்..!

அஜீத் படத்தில் நைட் கிளப் ஆங்கில பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    அஜீத் படத்தில் நைட் கிளப் ஆங்கில பாடல்..! அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானின் இருள்’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து தற்போது ‘காலம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் இசையில் இந்தப் பாடலை நாகார்ஜுன், யோன்ஹோ ஆகியோர் இணைந்து எழுத அலிஷா தாமஸ், யோன்ஹோ பாடியுள்ளனர். ’கவலை வேண்டாமே என் தோழா’ என தொடங்கும் இந்த பாடலில் ராப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன. நைட் கிளப்பில் இடம்பெறும் வகையில் இந்த பாடல் வரிகள் உள்ளன. இந்த படம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது....
கே.பி.90 விழாவில் இயக்குனர் பாலச்சந்தர் புகழ் பாடிய பிரபலங்கள்..!

கே.பி.90 விழாவில் இயக்குனர் பாலச்சந்தர் புகழ் பாடிய பிரபலங்கள்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் அவர்கள், ‘இயக்குனர் ஐயா அவர்களுக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான் தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா.? என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குனர் என்றால் அது ஐயா கே பாலசந்தர் அவர்கள் தான். வளரும் இயக்குனர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குனருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள். காதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தன் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில் ஒரு சிறப...
ஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும் “கோமாளி”.!

ஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும் “கோமாளி”.!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும்..! அடங்கமறு' வெற்றிப் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோமாளி'. இந்த படத்தில் ஜெயம் ரவி, ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் நடித்திருக்கிறார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார். படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் காமெடி வேடங்களில் வர, ஆர்.ஜே ஆனந்தி இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது....