பார்க்க வேண்டிய படமா மிக மிக அவசரம் – கோடங்கி விமர்சனம்
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி பட்ட படங்கள் வரும்.
ஒரு சாதாரண அதே நேரம் அவசியமான ஒரு விஷயத்தை மைய கருவாக வைத்து ஒரு மேம்பாலத்தின் மீது மொத்த படத்தையும் வைத்து படமெடுத்து அதை சாதனை ஆக்கிய துணிச்சல் இயக்குனர் சுரேஷ் காமாட்சிக்குத்தான் உண்டு.
உடம்பை காட்டி ரசிகனை ஏமாற்றாத அழகான கதை நாயகி... ஒரு மேம்பாலம்... நேர்மையான ஒரு காவல் உயர் அதிகாரி.... காவல் துறையை களங்கப்படுத்தும் ஒரு இன்ஸ்பெக்டர்... மனைவியின் தங்கையை களங்கப்படுத்தாத மாமா... மனிதாபிமானம் உள்ள ஒரு போலீஸ்காரர், நியாயமான போலீஸ் டிரைவர் என இவர்களை சுற்றி நடக்கின்ற கதைதான் மிக மிக அவசரம்.
அதிரடி தயாரிப்பாளராக சினிமா வட்டாரத்தில் அறியப்பட்ட சுரேஷ் காமாட்சியை அழகான திரைக்கதையை மிக எளிமையாக அதே நேரம் நேர்த்தியாக காட்சிப் படுத்தி இயக்குனர் ஆக தனி முத்திரை பதித்திருக்கிறார் சுரேஷ் காமாட்சி.
கடந்த சில வருடங்களில...









