புதன்கிழமை, அக்டோபர் 28
Shadow

உலக செய்திகள்

இணையத்தில் மீண்டும் வைரலான உலகின் அதிவேக ஓட்டக்காரர்… காரணம் இதுதான்!

இணையத்தில் மீண்டும் வைரலான உலகின் அதிவேக ஓட்டக்காரர்… காரணம் இதுதான்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  இணையத்தில் மீண்டும் வைரலான உலகின் அதிவேக ஓட்டக்காரர்... காரணம் இதுதான்! பிரபல ஜமைக்கா தடகள வீரர் உசேன் போல்ட் ஓய்வு பெற்று விட்டார். உசேன் போல்ட் தன்  பார்ட்னர் கசி பென்னட்டுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். 8ம் தேதி கசி பென்னட்டின் பிறந்தநாள் . இதையொட்டி , தன் மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைத்தளத்தில் உசேன் போல்ட் பகிர அது பெரும் வைரலானது. கடந்த ஜூன் 14- ந் தேதி உசேன் போல்ட் , கசி பென்னட் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு ஒலிம்பியா லைட்னிங் என்று பெயர் வைக்கப்பட்டது. தன் அன்பு காதலியின் பிறந்த நாளை முன்னிட்டு,  சமூகவலைத்தளத்தில் கசி பென்னட்டுடன் மகள் இருப்பது போன்ற புகைப்படங்களை உசேன் போல்ட் வெளியிட்டு, '' என் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த சிறந்த நாளை உன்னுடன் நான் கழித்தேன். உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்வதும் உன் முகத்தில் சிர...
சீன வைரஸ் விவகாரத்தால் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா! 

சீன வைரஸ் விவகாரத்தால் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா! 

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா! சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். மேலும், இந்த வைரசின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தார். ஆனால், ஐ.நா. அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பு டிரம்பின் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தது இதற்கிடையே, கடந்த மே -19 ஆம் தேதி உலக சுகாதார அமைப்புக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில் கொரானா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ...
இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    இந்தோனேசிய, சிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! இந்தோனேசியாவின் கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 6.1 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்  மத்திய ஜாவா தீவில் உள்ள படாங் கடல் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஜகார்தா  மற்றும் பாலி தீவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் தென்கிழக்கு பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானது. சர்வதேச நேரப்படி 04.24.46 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தால் சேதவிவரம் தெரிவிக்கப்படவில்லை. ரிக்டர் அளவில் 6.1 என்றாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை....
கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்… அதிர்ச்சியில் உலக நாடுகள்!

கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்… அதிர்ச்சியில் உலக நாடுகள்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்... அதிர்ச்சியில் உலக நாடுகள்! சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான கொரானா வைரஸ் காரணமாக உலகம் முழுதும் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது. கடந்த 7 மாதங்களாக பல லட்சம் மக்களை உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கிறது கொரானா. இதை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த வைரசின் முதல் அலையில் இருந்து சில மாதங்களுக்கு முன் மீண்ட சீனாவில் மீண்டும் கொரானாவின் இரண்டாம் அலைத் தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக பல மாகாணங்கள் ஊரடங்கில் உள்ளன. இந்த சூழலில் அங்கு மீண்டும் ஒரு  மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் பரவத் தொடங்கி உள்ளது தெரிய வந்துள்ளது சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்க...
புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை காலி!

புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை காலி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
கொரானாவால் இழந்த பொருளாதாரத்தை சீராக்கும் புதிய சட்டத்தால் குவைத்தில் இருந்து சுமார் 8 லட்சம் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்! கொரானா தாக்கத்தால் பிற நாடுகளை போலவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாடு குவைத். அதனால், சொந்த நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. குவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக்குழு வரைவு இந்த வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. குவைத் முழுதும் உள்ள மக்கள் தொகை 43 லட்சம். அதில் வெளிநாட்டினர் 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் இந்தியர்கள்தான் அதிகம். குவைத் அரசின் இந்த புதிய சட்டம் இந்தியர்களின் எண்ணிக்கையை 15 சதவீதமாக குறைக்க வகை செய்கிறது. அதன்படி 14 லட்சமாக இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆறு முதல் 7 லட்சமாக குறைக்கப்படும் போது, மீதமுள்ள 7 மு...
கொரானாவுக்கு அவசரகதியில் தடுப்பூசி அறிவித்தால் உலக அரங்கில் அசிங்கப்படுவோம் – நிபுணர்கள் எச்சரிக்கை

கொரானாவுக்கு அவசரகதியில் தடுப்பூசி அறிவித்தால் உலக அரங்கில் அசிங்கப்படுவோம் – நிபுணர்கள் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    கொரானாவுக்கு அவசரகதியில் தடுப்பூசி அறிவித்தால் உலக அரங்கில் அசிங்கப்படுவோம் - நிபுணர்கள் எச்சரிக்கை உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்க்கப்படுகிற கொரானா தடுப்பூசி ஆகஸ்ட் 15-ஆம் தேதி பொதுப் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்துடன், மனிதர்களின் மீதான சோதனைகள் முடிக்கப்பட்டு நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாராகும் முதல் தடுப்பு மருந்து இது. இதனால் இது மத்திய அரசு மேற்பார்வையில் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்புடன் தயாராகி வருகிறது. அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று  கூறப்படுகிறது. அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து பரிந்துரைகளும் கூட, இந்த வருடத்தின் முடிவில் வெளியாகும்...
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் – மத்திய அரசு

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் – மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
      வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்த திட்டத்தின்கீழ் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க கோரியும் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை 26 ஆயிரம் தமிழர்கள் 50 விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது....
பலியான சீன வீரர்களின் உடலை கூட காட்டாமல் அஸ்தியை அனுப்பியதாம் சீன அரசு!

பலியான சீன வீரர்களின் உடலை கூட காட்டாமல் அஸ்தியை அனுப்பியதாம் சீன அரசு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  பலியான சீன வீரர்களின் உடலை கூட காட்டாமல் அஸ்தியை அனுப்பியதாம் சீன அரசு! லடாக் பகுதியில் சீன அத்துமீறலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதோ மட்டுமில்லாமல் நமது வீரர்களின் உடல்களுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதே நேரம் இந்திய வீரர்கள் எதிர்த்தாக்குதலில் 43 சீன வீரர்கள் பலியானதாக உறுதியற்ற தகவல்கள் தெரிவித்தன. ஆனால், சீன அரசு பலி எண்ணிக்கை எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் மரணத்தை கூட  உலக நாடுகளிடம் இருந்து மறைத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பலியான ராணுவ வீரர்களின் உடல்களை கூட சம்மந்தப்பட்ட உறவினர்கள், பெற்றோர்கள் என யாரையும் பார்க்க அனுமதிக்காமல். வெறும் அஸ்தியை மட்டுமே வீட்டிற்கு அனுப்பியுள்ளது. உடலை கூட காட்...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வருகிறார் ஏன் தெரியுமா?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வருகிறார் ஏன் தெரியுமா?

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வருகிறார் ஏன் தெரியுமா? கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் அவரது நாட்டில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது மனைவி சானியாமிர்சா சர்வதேச  டென்னிஸ் தொடரை முடித்துவிட்டு மகனுடன் இந்தியாவில் தங்கியிருந்தார். இந்நிலையில் கொரானா பரவல் காரணமாக இரு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இருவரும் கடந்த ஐந்து மாதங்களாக சந்திக்க முடியாமல் போனது. இந்த நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் அணி  வரும் 28ம் தேதி சிறப்பு விமானம் மூலம் புறப்படவுள்ளது. 29 நபர்கள் கொண்ட அணியில் சோயப்மாலிக் இடம் பிடித்துள்ளார். இருப்பினும் கடந்த ஐந்து மாதங்களாகத் தனது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதால் எனது மனைவியையும், மகனையும் சந்திக்க சிறப்பு அன...
உலக யோகா தினத்தால் ஷில்பா ஷெட்டியின் யோகா பயிற்சி நாளை நேரலையில்…

உலக யோகா தினத்தால் ஷில்பா ஷெட்டியின் யோகா பயிற்சி நாளை நேரலையில்…

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  உலக யோகா தினத்தை முன்னிட்டு ஷில்பா ஷெட்டியின் யோகா பயிற்சி நேரலையில் நாளை ஒளிபரப்பாகிறது.   ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சிபிஎஸ்இ தனது மாணவர்களுக்கு யோகா பயிற்சியை வழங்க முடிவெடுத்துள்ளது. ’ஆரோக்கிய இந்தியா’ திட்டத்தின் கீழ் நடிகையும் புகழ்பெற்ற யோகா பயிற்சியாளருமான ஷில்பா ஷெட்டி, யோகா பயிற்சியை நேரலையாகச் செய்துகாட்ட உள்ளார். இந்தச் சிறப்பு நிகழ்வு ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இது ஆரோக்கிய இந்தியா யூடியூப் பக்கத்திலும் சிபிஎஸ்இ வாரியத்தின் சமூக வலைதளப் பக்கங்களிலும் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். யோகா குறித்த கேளிக்கை மற்றும் அறிவுபூர்வம...