வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

MOVIES

சீன மொழி பேசப் போகும் தனுஷின் அசுரன்!

சீன மொழி பேசப் போகும் தனுஷின் அசுரன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சீன மொழி பேசப் போகும் தனுஷின் அசுரன்! பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடி நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்து மெகா ஹிட் அடித்த படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கல்வி எத்தனை முக்கியம் என்பதை விளக்கும் விதமாகவும், ஆதீக்க சமூகத்தின் அடக்குமுறையை அப்பட்டமாக காட்டியது. தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது. இந்த படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் வெங்கடேஷ், பிரியாமணி நடிக்கின்றனர். கன்னட மொழியிலும் அசுரன் படத்தை தயாரிக்க உள்ளனர். சிவாராஜ் குமார் நடிக்க உள்ளார். இந்த சூழலில் அசுரன் சீனாவிலும்...
55 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டதா “தலைவி” !?

55 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டதா “தலைவி” !?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    55 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டதா "தலைவி" ! கொரானா பரவல் பரபரப்பிலும் முன்னாள் முதல்வர் ஜெ., தொடர்பான செய்திகள் எது வந்தாலும் பெரும் வைரல் ஆகி வரும் நேரம் இது. காரணம் அவருக்கு சொந்தமான சொத்துக்களை யார் உரிமை கொள்வது என்ற வழக்கின் தீர்ப்பு வேறு வந்துள்ளது. இந்த நேரத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரமாண்டமான பொருள் செலவில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆ...
சாதிக்கொரு சட்டம் எதற்கு என கேள்வி கேட்டு உருவாகும் “ஓங்காரம்”

சாதிக்கொரு சட்டம் எதற்கு என கேள்வி கேட்டு உருவாகும் “ஓங்காரம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
    சாதிக்கொரு சட்டம் எதற்கு என கேள்வி கேட்டு உருவாகும் "ஓங்காரம்" ஒன்றே குலம் என்றால் சாதிக்கொரு சட்டம் எதற்கு என்ற கேள்வியை எழுப்பி ஒரு படம் எடுக்கப்படுகிறது. கொரானா ஊரடங்கு காரணமாக மதுரையில் எளிமையான முறையில் அலுவலக பூஜையுடன் ஓங்காரம் படம் தொடங்கி உள்ளது. இளையராஜா இசையில் ‘அய்யன்’, ‘சேது பூமி’ ஆகிய படங்களை இயக்கிய, ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். வி.எம்.கே நிறுவனம் தயாரிக்கிறது. இன்று அலுவலக பூஜை போடப்பட்ட நிலையில் கொரானா ஊரடங்கு முடிந்து மீண்டும் அனுமதி வழங்கப்படும் போது படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது....
பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை சினிமாவாகிறது!

பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை சினிமாவாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    சமீபமாக இந்திய திரையுலகில் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றிதரும் படைப்புகளாக  மாறியுள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள்  மேலும் சராசரி வாழ்வில் சாதனை படைத்து தனித்துவமிக்கவராக மாறி நிற்பவர்களின் வாழ்க்கை கதைகளை  திரைபடைப்பாளிகள் வெகு அற்புதமான திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர். பல்வேறு வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் உருவாகி வரும் இந்த சூழ்நிலையில் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாகவுள்ளது. பளுதூக்கும் போட்டியில் உலக அளவில் சாதனைகள் புரிந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் “கர்ணம் மல்லேஸ்வரி” என்பது குறிப்பிடதக்கது. இந்திய பெண்களுக்கு மிகப்பெரும் முன்னுதரானமாக விளங்கும் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை பன்மொழிகளில் முழுமையான இந்திய திரைப்படமாக தமி...
சினிமா ஷூட்டிங், தியேட்டர் திறக்க அனுமதியுங்கள் – முதல்வருக்கு பாரதிராஜா வேண்டுகோள்

சினிமா ஷூட்டிங், தியேட்டர் திறக்க அனுமதியுங்கள் – முதல்வருக்கு பாரதிராஜா வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை விவரம்.   வணக்கம் முதல்வர் அவர்களுக்கு, படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள். விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள். அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம். பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர். சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம். முதல்வர் அவர்கள் தயைகூர்ந்த...
படம் அல்ல பாடம் – பொன்மகள் வந்தாள் கோடங்கி விமர்சனம்

படம் அல்ல பாடம் – பொன்மகள் வந்தாள் கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    தாமதமாக வரும் நீதியும் அநீதிதான் என்று ஒற்றை வரியை மிகுந்த வலியோடு உணர்வு ரீதியாக சொல்லி இருக்கிற படம் தான் ஜோதிகா நடிப்பில் டிஜிட்டலில் வெளியான பொன்மகள் வந்தாள். இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியில் திடீர் திடீரென பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அப்படி ஒரு குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை இருவர் தடுக்க வருகிறார்கள். அவர்களை அந்த பெண் சுட்டுக்கொலை செய்கிறார். அந்த கொலையாளியை பிடிக்கும் போது போலீசார் அந்த பெண்ணை என்கவுண்டர் செய்கிறார்கள். அதோடு அந்த வழக்கு முடிக்கப்படுகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்ட அந்த என்கவுண்டர் வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுக்கிறார் வக்கீல் வெண்பாவான ஜோதிகா. அவருக்கு உதவியாக பாக்யராஜ். அதில் அவர் வெற்றி பெற்றாரா...? என்கவுண்டர் செய்யப்பட்ட பெண் யார்? அந்த பெண்ணால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆட்கள் யார்? பாக்யராஜுக்கு வெண்பா யார்...
சர்ச்சையை தேடும்விதமாக ஆடை இல்லாமல் ஆபாச போஸ்டர் வெளியிட்ட சந்தானம்!

சர்ச்சையை தேடும்விதமாக ஆடை இல்லாமல் ஆபாச போஸ்டர் வெளியிட்ட சந்தானம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சந்தானத்தின் டிக்கிலோனா பட ஆபாச போஸ்டர்..! சின்னத்திரையில் அடுத்தவர்களை நக்கல் நையாண்டி செய்து பெரிய திரையில் காமெடியனாக கால் பதித்து பின்னர் காமெடி ஹீரோவாக மாறியவர் சந்தானம். இவர் நடித்து வரும் படம் டிக்கிலோனா. படத்தின் பெயரே ஒரு மார்க்கமாக இருப்பது போல அந்த படத்தின் விளம்பர போஸ்டரிலும் ஆடை இல்லாமல் சந்தானம் நிற்கிறதை சக நடிகர்கள் பின்னால் இருந்து அதிர்ச்சியாக பார்ப்பது போல அந்த டிசைன் அமைந்துள்ளது. கண்டிப்பாக சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிந்தே சந்தானம் இப்படி டிசைன் வெளியிட்டு இருக்கிறார் போல. உலகமே கொரானா ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் போது அனைவர் கவனத்தையும் ஈர்க்க ஆடைகளை துறந்திருக்கிறாரோ சந்தானம். போஸ்டரே இப்படி என்றால் டிக்கிலோனா படம் எப்படி இருக்குமோ......
2 கோடி பேர் பார்த்த ஜோதிகாவின்  பொன்மகள் வந்தாள் டிரைலர்!

2 கோடி பேர் பார்த்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
      *அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.* ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் ம...
ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி!

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி* இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது 'டிஜி பிலிம் கம்பெனி' என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மாவுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான...
கபடதாரி படத்தில் சம்பள குறைப்பு செய்த நாசர்!

கபடதாரி படத்தில் சம்பள குறைப்பு செய்த நாசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கபடதாரி படத்தில் சம்பள குறைப்பு செய்த நாசர்! சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற இருந்த நேரத்தில் கொரானா ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையும் முடங்கிப் போனது. சுமார் 2 மாதத்திற்கு பின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அரசு அனுமதி அளித்தது. இதன் காரணமாக நிறுத்தப்பட்ட பணிகளை கபடதாரி படக்குழு பரபரப்பாக செய்யத் தொடங்கியது. படத்தில் நாசர் டப்பிங் பேசும்போது அரசு விதித்த நிபந்தனைகளை பின்பற்றி தனது பணியை செய்து முடித்தார். அதோடு, கொரானாவால் ரிலீஸ் முடக்கம் காரணமாக தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பை தன்னால் முடிந்த அளவுக்கு சரி செய்ய தனது சம்பளத்தில் இருந்து 15% தொகையை நாசர் விட்டுக் கொடுத்து தயாரிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஒரு...