செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

MOVIES

துக்ளக் தர்பாரில் விஜய் சேதுபதியுடன் இணைந்த பார்த்திபன்..!

துக்ளக் தர்பாரில் விஜய் சேதுபதியுடன் இணைந்த பார்த்திபன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சங்கத் தமிழன்’, கடைசி விவசாயி, லாபம், மாமனிதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும், துக்ளக் தர்பார் படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் துக்ளக் தர்பார் படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். படத்தில் விஜய்சேதுபதியுடன் பிரபல நடிகர் பார்த்திபன் இணைந்து நடிப்பதாக தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தனுஷ்..!

இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தனுஷ்..! நடிகர் தனுஷ் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. கால்ஷீட் டைரி தேதி ஒதுக்க முடியாதபடி நிரம்பி வழிகிறது. பல படங்களில் நடித்து வந்தாலும் அவரது நிறுவனம் சார்பில் பட தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நல்ல படங்கள் அமையும் போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்க தனுஷ் முடிவு செய்து இருந்தார். சமீபத்தில் இந்தியில் ரிலீஸ் ஆன ஆர்ட்டிகல் 15 படம் அங்கே சூப்பர் ஹிட் அடித்தது. அதோடு நல்ல கதையமைப்பு உள்ள படம் என்ற பெயரையும் பெற்றது. இதனால் அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் முடிவு செய்து இருக்கிறார். சட்ட ஓட்டைகளை தோலுரித்த படம் என்பதால் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டது....
இம்சை அரசன் விவகாரம் இறங்கி வந்த வடிவேலு… நஷ்டத்தை ஈடுகட்ட படம் நடிக்கிறார்..!

இம்சை அரசன் விவகாரம் இறங்கி வந்த வடிவேலு… நஷ்டத்தை ஈடுகட்ட படம் நடிக்கிறார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      இம்சை அரசன் விவகாரம் இறங்கி வந்த வடிவேலு... நஷ்டத்தை ஈடுகட்ட படம் நடிக்கிறார்..! வடிவேல் நடித்து வெற்றிகரமாக ஓடிய இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்கினர். சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேல் நடித்த இந்த படத்தை ஷங்கர் தயாரித்தார். சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து விலகினார் வடிவேல். அவரை சமரசப்படுத்தி மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சியில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஈடுபட்டன. ஆனாலும் வடிவேல் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் தனக்கு ரூ.10 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று ஷங்கர் புகார் கூறினார். இதைத்தொடர்ந்து வடிவேல் புதிய படங்களில் ந...
ஹீரோக்களுக்கு இணையாக அதிகாலை காட்சியாக ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட உள்ள ஜோதிகா..!

ஹீரோக்களுக்கு இணையாக அதிகாலை காட்சியாக ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட உள்ள ஜோதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஹீரோக்களுக்கு இணையாக அதிகாலை காட்சி ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட உள்ள ஜோதிகா..! பிரபலமான மாஸ் காட்டும் நடிகர்களின் படங்கள் மட்டுமே சில ஆண்டுகளாக அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில் தற்போது பெரும்பாலான நடிகர்களின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்பட்டு வருகிறது. ஹீரோக்கள் படங்கள் மட்டுமே அதிகாலை காட்சியை திரையிடப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு சில நடிகைகளின் திரைப்படங்களும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுகின்றன. குறிப்பாக சமந்தா, நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகளின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்படுகிறது இந்த நிலையில் முதல் முறையாக ஜோதிகா நடித்த திரைப்படமும் அதிகாலை காட்சி திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை GK சினிமாவில் ஜோதிகா நடித்த 'ஜாக்பாட்' திரைப்படம் வரும் வெள்ளியன்று அதிகாலை 5.30 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான முன்ப...
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 கேமராமேன் திடீர் மாற்றம்..!

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 கேமராமேன் திடீர் மாற்றம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 கேமராமேன் திடீர் மாற்றம்..! உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 தொடங்கிய வேகத்தில் திடீரென கிடப்பில் போனது. கமல் கட்சி தொடங்கி அரசியலுக்கு போனதால் படம் டிராப் ஆனதாக கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பின் இந்தியன் 2 வேலைகளை தொடங்கினார் ஷங்கர். ஏற்கனவே ஹீரோயின் காஜல் அகர்வால் இருந்தார். அவரோடு புதிதாக பிரியா பவானி ஷங்கர் இணைந்தார். படத்தின் அடுத்த கட்ட காட்சிகள் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி பகுதியில் நடை பெற உள்ளது. இந்த நிலையில் படம் தொடங்கிய போது ரவி வர்மன் தான் ஒளிப்பதிவு செய்தார். இப்போது அவருக்கு பதில் ரத்னவேலு ஒளிப்பதிவாளர் ஆக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்திலும் ரத்னவேலு தான் ஒளிப்பதிவு செய்தார். ரவி வர்மன் மாற்றத்திற்கு காரணம் கூறப்படவில்லை. ஆகஸ்ட் மா...
மயூரன் கதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கிறாராம் ஹீரோ – பகீர் புகார்

மயூரன் கதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கிறாராம் ஹீரோ – பகீர் புகார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் மயூரன், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறார். தன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் பிரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் என்கிறார். கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும் என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார் இருவரையும் ஒருசேர அழைக்காமல் புரமோஷன் எப்படி செய்வது என்று தயாரிப்பாளர் தவியாய் தவிக்கிறார்கள். படத்திற்கு விளம்பரம் அமைவதே பெரிய கடினம். கதாநாயகன்-கதாநாயகி இருவரும் இப்படி செய்தால் எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்ய முடியும் என்று புலம்புகிறது தயார...
சஞ்சய் தத் வில்லனாக களம் இறங்கும் கே.ஜி.எப் 2

சஞ்சய் தத் வில்லனாக களம் இறங்கும் கே.ஜி.எப் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் கே.ஜி.எப் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.ஜி.எப் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது. கன்னடத்தில் ரூ.200 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார். கோலார் தங்க சுரங்கத்தில் பல காலமாக இருந்து வந்த அடிமை முறையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமைந்திருந்தது. தென்னிந்திய வரலாற்று படங்களில் கே.ஜி.எப் ரசிகர்கள் வரவேற்பிலும், வசூலிலும் புதிய சாதனை படைத்தது. படத்தின் இரண்டாம் பாகம் பரபரப்பாக நடந்து வருகிறது. சஞ்சய் தத் மு...
ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் தாணுவின் குருஷேத்திரம்

ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் தாணுவின் குருஷேத்திரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு "குருக்ஷேத்ரம்" மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம். கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும், இந்த காவியத்தின் குருக்ஷேத்ர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் 'குருக்ஷேத்ரம்'. உலகளவில் 3D முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன் அளிக்கும், வி கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு வழங்கும் பிரம்மாண்ட படைப்பு இந்தப் படம். தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாகன்னா இயக்கியிருக்கும் இந்த மகாபாரத இதிகாசம் உருவாக முக்கிய காரணம் இருந்தவர்கள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள். இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனன் ஆக தர்ஷன், கர்ணன் ஆக அர்ஜுன் சார்ஜா, பீஷ்மர் ஆக அம்பரீஷ், கிருஷ்...
மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ்..!

மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ்..! விஸ்வாசம் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக தனுஷ் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் இந்த படத்தை இயக்கப் போகிறார். இதில் தனுஷ் மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே கொடி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சினேகா கதாநாயகியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் விவேக் மெர்வின் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள். தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாஸ் என படத்தின் பெயரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது....
அழுத்தமான காதல்… செண்டிமெண்டான கிளைமாக்ஸ் சொல்லப் போகும் கழுகு 2

அழுத்தமான காதல்… செண்டிமெண்டான கிளைமாக்ஸ் சொல்லப் போகும் கழுகு 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
*கழுகு-2விலும் அழுத்தமான காதல், உருகவைக்கும் க்ளைமாக்ஸ் உண்டு ; சத்யசிவா..!*     2012ல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சத்யசிவா.. இடையில் சில படங்களுக்கு பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.. முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி என அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் என முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களும் இந்த படத்தில் உடன் பயணிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கழுகு முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பாக அந்த படத்தின் கிளைமாக்ஸ்.. இதனாலேயே இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ‘கழுகு 2’ படம் எப்படி உருவாகி இருக்கிறது என்பது பற...