ரீல்… தமிழ் சினிமாவில் புதுசாய் வரப்போகும் ரியல் சினிமா!
கதையில் இருக்கும் கதாபாத்திரங்களும் , அதன் தன்மையுமே ஒரு ரொமான்டிக் படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. குறிப்பாக தேர்ந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், அறிமுககங்களையும் பயன்பத்திக்கொள்ளும் திறமையே இப்படங்களின் தனித்துவம் என்று கூறலாம். கதாபாத்திரங்களின் வலிமையை உணர்த்தும் திரைப்படங்களை தமிழ் சினிமா நிறைய கண்டுள்ளது . இத்தகைய காதல் திரைப்படங்களை நிலையாக கொடுத்துவரும் தமிழ் சினிமாவின் வரிசையில் , நம்பிக்கையோடு சேர தயாராகயிருக்கிறது "ரீல்".
"காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றை தனித்து காட்டுகிறது . தலைப்பு என்பது ஒரு படத்தின் முக்கிய அம்சம்,இப்படத்தின் தலைப்பான "ரீல்" என்பது எதற்காக என்று கேள்விக்கு படத்தின் கதையே பதில் கூறும். நடிகர்கள் உதய்ராஜ் மற்றும் அவந்திகா கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். KPY புகழ் சரத் இப்படத்தில் முழு...









