’ஜென்டில்மேன் டிரைவர் ' விருது வென்ற அஜித்!
ரேஸர் அஜித்குமாருக்கு ’ஜென்டில்மேன் டிரைவர் ஆப் தி இயர் 2025’ ('GENTLEMAN DRIVER OF THE YEAR 2025') விருது வழங்கி எஸ் ஆர் ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் கவுரவித்துள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் அஜித் தனது குடும்பத்துடன் பங்கேற்று விருதினை பெற்றுக்கொண்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இதற்கிடையில், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கினார்.
இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த அணி ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.
...
*மகளிர் உலக கோப்பையின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின், முதன் முறையாக சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை தந்த, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் !!*
இந்திய நாடே போற்றிய மாபெரும் உலகக் கோப்பை வெற்றிக்கு பின், முதன்முறையாக, சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை புரிந்துள்ள, இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) பிரம்மாண்ட பிக்கில் பால் (Pickle Ball) நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
சமீபத்தில் உலகின் பலமான 8 அணிகள் கலந்துகொண்ட உலககோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில், அசத்தலாக விளையாடியதுடன், அணியை வழிநடத்தி, இந்தியா மகளிர் அணிக்கு முதல் உலககோப்பையை பெற்றுத் தந்து, இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர் இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர்.
இந்தியாவெங்கும் மகளிருக்கு முன்னுதாரண முகமாக மாறிய...
குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன்.
இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலு...
**Youngest World Chess Champion Gukesh Meets Actor Sivakarthikeyan**
In a heartfelt encounter, Gukesh, the youngest World Chess Champion, met his idol, actor Sivakarthikeyan, at the actor’s office yesterday. Accompanied by his family, Gukesh was joined by Velammal Correspondent Velmohan and Deputy Correspondent Sriram for the special occasion.
A biggest fan of Sivakarthikeyan since his childhood, Gukesh was thrilled to receive a meaningful gift – a watch – from the actor. Sivakarthikeyan praised Gukesh's remarkable achievement, describing it as an inspiration to millions of young Indians.
The meeting became even more memorable with a cake-cutting ceremony to celebrate Gukesh’s historic success. This heartwarming interaction highlighted the power of admiration and the...
சென்னையைச் சேர்ந்த 11 வயது இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத்தம், இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் (International Karting Championship) பட்டத்தை இருமுறை வென்றுள்ளார். மேலும், 2024 அக்டோபர் மாதத்தில் ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் நடைபெற்ற FIA மோட்டார்ஸ்போர்ட் கேம்ஸில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை இளம் சாதனையாளரான ரிவான் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் இளம் வீரருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள காசோலையை துணை முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார்.
தமிழக அரசின் புதிய முன்னோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தின் கீழ், மோட்டார் விளையாட்டுத் துறையில் சாதனை ...
*(Celebrity Cricket League) சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*
*இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது*.
*இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும், சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்*.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றனர்.
திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, மேலும் மேலும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார் மற்...
சி.எஸ்.கே. அணியிடம் தோற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறாமல் போனது குறித்து குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
நாங்கள் பலமாக இருந்த போதும் சில தவறுகள் செய்துவிட்டோம். 15 ரன்களை கூடுதலாக விட்டு கொடுத்துவிட்டோம். இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. நிறைய விஷயங்களை நாங்கள் சரியாக செய்தோம்.
சில ஓவர்களில் ரன் அதிகமாக சென்றுவிட்டது. ஆட்டத்தில் பனி வரும் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை.
நாங்கள் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை. இறுதிப் போட்டியில் நுழைய எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த போட்டியை சந்திப்போம்.
சிஎஸ்கே ரசிகர்களை மறைமுகமாக சாடிய ஜடேஜா பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவதில் டோனிக்கு நிகர் அவர்தான். அவரை போன்று பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவது கடினம். டோனி அடிக்கடி ...
ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில், ஜெர்மனி அணி காலிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஜெர்மனி அணியில் இடம்பெற்ற கிராம்புஷ் சகோதரர்கள் தனிச்சிறப்பு பெற்றுள்ளனர்.
ஒரே தேசிய அணிக்காக சகோதரர்கள் விளையாடுவது புதிதல்ல, ஆனால் இருவரும் ஒரே போட்டியில் கோல் அடிப்பது என்பது மிகவும் அரிது.
அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணியின் கிராம்புஷ் சகோதரர்கள் (கிராம்புஷ் மேட்ஸ் மற்றும் கிராம்புஷ் டாம்) கோல் அடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.
போட்டியின் பெரும்பாலான நேரம் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி, 2-0 என முன்னிலையில் இருந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில், அதாவது 57வது நிமிடத்தில் மேட்ஸ், 58வது நிமிடத்தில் டாம் கோல் அடிக்க, போட்டி 2...
15-வது உலக கோப்பை ஆக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கெலா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்தப்போட்டியில் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு நேரடியாக தகுதி பெறும். மற்ற 4 அணிகள் 2-வது சுற்று மூலம் முன்னேறும். ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய நாடுகள் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. 2-வது போட்டியில் இங்கிலாந்துடன் கோல் எதுவுமின்றி 'டிரா' செய்தது.
இந்திய அணி 3-வது மற்றும் கடைசி 'லீக்' ஆட்டத்தில் வேல்சை நாளை (19-ந் தேதி) எதிர்கொள்கிறது. இரவு 7 மணிக்கு புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது.
இந்திய அணி ...