வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

சயின்ஸ்பிக்சன் ஃபேண்டஸி, ஹாரர் காமெடி திரைப்படத்தில் ஹன்சிகா!

சயின்ஸ்பிக்சன் ஃபேண்டஸி, ஹாரர் காமெடி திரைப்படத்தில் ஹன்சிகா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  R.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா! சயின்ஸ்பிக்சன் ஃபேண்டஸி, ஹாரர் காமெடி திரைப்படம்! Masala Pix  நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர்  ஆர்.கண்ணண்  - Focus Films நிறுவனத்துடன் இணைந்து “Production no 7” படத்தை டைரக்ட் செய்து தயாரிக்கிறார். #ஜெயம்கொண்டான், #கண்டேன்காதலை, #சேட்டை, #இவன்தந்திரன், போன்று எல்லா வகை கதைகளையும் டைரக்ட் செய்து அனைவருக்கும் பிடிக்கும் தரமான வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து வருபவர்  இயக்குநர் R.கண்ணன். தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான #கிரேட்இந்தியன்கிச்சன் படத்தை தமிழில் டைரக்ட் செய்து ரிலீஸ் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளார். மும்பை தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதை தயாரித்துள்ளார்கள். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். இதை அடுத்து, மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் நடிக்கும் #காசேதான்கடவுளடா படத்தை...
அஜீத்தின் வலிமை படத்தில் வக்கீல்களை அவதூறாக சித்தரித்து காட்சிகள் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!

அஜீத்தின் வலிமை படத்தில் வக்கீல்களை அவதூறாக சித்தரித்து காட்சிகள் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்திய அத்திரைப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் கடந்த 24 ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தி உள்ளதாகவும், அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சாந்தி, தான் கடந்த 25 ஆம் தேதி வலிமை திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று கண்டதாகவும், அப்போது அத்திரைப்படத்தின் தொடக்கக் கா...
முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள்!

முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள்!

HOME SLIDER, Photos, politics, அரசியல்
  முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள்!    
ஸ்டாலினுக்கு இவ்வளவு வயசா? எனது அம்மா நம்பவில்லை – அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்திய ராகுல்

ஸ்டாலினுக்கு இவ்வளவு வயசா? எனது அம்மா நம்பவில்லை – அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்திய ராகுல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார் கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக்கொண்டார். இந்த சுயசரிதை நூலில், மு.க.ஸ்டாலின் அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார். பூம்புகார் பதிப்பகம்‘ இந்த நுலை வெளிக்கொண்டுவந்துள்ளது. இந்த விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலம...
என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்துள்ளது – சென்னையில் ராகுல் உருக்கமான பேச்சு!

என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்துள்ளது – சென்னையில் ராகுல் உருக்கமான பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களின் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, அண்ணன் மு.க ஸ்டாலின் அவர்களை பாராட்ட விரும்புகிறேன். இதுபோன்ற அற்புதமான புத்தகத்தை அளித்துள்ளார். அவருடைய வாழ்க்கை மிக நீண்ட போராட்டத்தைக் கொண்டது. மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்த இடத்திற்கு ஸ்டாலின் வந்துள்ளார். ‘நான் நாடாளுமன்றத்தைவிட்டு வெளியே வரும் போது ஒரு செய்தியாளர் உங்களுடைய பேச்சில் தமிழ்நாடு என்று ஏன் நிறைய முறை குறிப்பிட்டீர்கள். அப்போதுதான் நான் உணர்ந்தேன் அடிக்கடி நான் தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளதை. என்னை அறியாமல் நானும் தமிழன்தான் என்று குறிப்பிட்டேன். பிறகு, காரில் இருக்கும்போது யோசித்தேன். ஏன் தமிழன் என்று கூறினேன் என்று யோசித்தேன். என்னுடைய வாயிலிருந்து ஏன் அந்த வார்த்தை வந்தது என்று யோ...
உக்ரைன் போர்… சிக்கி உள்ள தமிழர்களுக்கு உதவ தொலைபேசி எண் அறிவிப்பு!

உக்ரைன் போர்… சிக்கி உள்ள தமிழர்களுக்கு உதவ தொலைபேசி எண் அறிவிப்பு!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  உக்ரைன் போர் சூழலில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு இந்தியத் தூதரகம் வழியாக விரைந்து உதவிட முதல்வர் உத்தரவு - திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா உதவி தேவைப்படும் உக்ரைன் வாழ் தமிழர்கள் [email protected]ல் தொடர்பு கொள்ளலாம் - எம்.எம்.அப்துல்லா எம்.பி.   044-2851 5288, 96000 23645 ஆகிய தொலைபேசி உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் - எம்.எம்.அப்துல்லா எம்.பி.    ...
யுவன்ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டு திரைப்பயணம்… TMJA நிர்வாகிகள் வாழ்த்து

யுவன்ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டு திரைப்பயணம்… TMJA நிர்வாகிகள் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் தடம் பதித்து 25 ஆண்டுகள் ஆவதை பத்திரிகையாளர்களோடு மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம் இருவரும் யுவனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். https://twitter.com/onlykodanki/status/1498379399166840832?s=20&t=uMmHRoiAE0u5BcPvFJZpdg...
அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் திரைப்படமான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர் அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிப்போடு பிரபல பாடகியாகவும் வலம் வந்த அகிலா நாராயணன், கலைத்துறையோடு தனது சாதனை பயணத்தை  நிறுத்திக்கொள்ளாமல், ராணுவத்தில் இணைய வேண்டும் என்று முடிவு செய்தார். மிக கடினமான பயிற்சிகளை கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும், தனது மகளின் விருப்பத்துக்கு அகிலாவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க, கடுமையான பல மாத பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார். இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த ம...
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி… வைரலாகும் காஜல் அகர்வாலின் வீடியோ!

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி… வைரலாகும் காஜல் அகர்வாலின் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமண வாழ்க்கையில், புகுந்து விட்டார். கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தனது நீண்டநாள் காதலர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டு விட்டார். இந்தியன் 2 படம் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே போக, அந்தப் படத்திலிருந்தே விலகிவிட்டார் காஜல் அகர்வால். ஏன் விலகினார் என்று பலரும் கேட்ட நிலையில் அதன் பிறகுதான் அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தது. இந்தியன் 2 படத்தில் காஜலுக்குப் பதில் தமன்னா ஒப்பந்தம் ஆனார். சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தேறியது. மொத்தக் குடும்பமும் ஒன்று சேர்ந்து காஜலை கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இந்நிலையில், கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செல்லும் வீடியோவை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்...
ராதே ஷ்யாம் படக்குழுவினரின் புதிய அப்டேட்!

ராதே ஷ்யாம் படக்குழுவினரின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீசர் அக்டோபர் 23-ந் தேதி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளன்று காலை வெளியானது. இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் புதிய டிரைலரை மார்ச் 2ஆம் தேதி மதியம் 3 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மார்ச் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது....