செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்!

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டு, தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். தமிழக பாஜக தலைவராக வருவதற்கு பலரும் போட்டியில் இருந்தார்கள். இல.கணேசன் உட்பட மூத்த தலைவர்களை கொண்டு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது எல்.முருகன் என்பவர் பாஜக தமிழக தலைவராக அகில இந்திய தலைவரான ஜே.பி.நட்டாவால் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக இருந்தார்....
சென்சார் காட்சியில் சிரித்து மகிழ்ந்து அதிகாரிகள் பாராட்டை பெற்ற அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

சென்சார் காட்சியில் சிரித்து மகிழ்ந்து அதிகாரிகள் பாராட்டை பெற்ற அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சென்சார் காட்சியில் சிரித்து மகிழ்ந்து அதிகாரிகள் பாராட்டை பெற்ற அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம் சென்சாரில் யூ சான்றிதழ் வாங்கியுள்ளது. சென்சார் பெறுவதற்கான காட்சியை பார்த்த சென்சார் உறுப்பினர்கள் பலரும் ரசிகராக மாறி சிரித்து மகிழ்ந்தது குறிப்பிடதக்கது. படமும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கிறது எனபது படத்தின் பிளஸ். இந்த திரைப்படம் அடுத்த மாதம் விடுமுறையை மனதில் வைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். சின்னத்திரை விளம்பரங்களை இயக்கி வந்த அவினாஷ் ஹரிஹரன் இயக்குனராகி இருக்கிறார். ஆராஸ் சினிமாஸ் மகேஷ் படத்தை தயாரித்திருக்கிறார். வீரா, மாளவிகாநாயர், பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தில் நடித்திருக்கிறார்கள்....
துப்பறிவாளன் 2 படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்!

துப்பறிவாளன் 2 படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  #துப்பறிவாளன்2 படத்தை நானே இயக்குகிறேன். மிஷ்கினுக்கு விஷாலின் பதில் . இயக்குநராக அறிமுகமாக மக்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை 6மணிக்கு படத்தின் முதல்  தோற்றத்தை  வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். - விஷால் ————————- “துப்பறிவாளன்2” படத்தின் இரண்டாவது கட்ட படபிடிப்பு முன்னதாக , நடிகர், தயாரிப்பாளர் விஷால்-க்கு டைரக்டர் மிஷ்கின் போட்ட திடீர் நிபந்தனை விதித்தார். அது இன்று இணையதளம் மற்றும் ஊடகங்களில் வெளியானது. அதற்கு விஷால் பதிலளித்துள்ளதாவது. —————— ஒரு இயக்குநர் திரைப்படத்தை விட்டு பாதியில் விலகுவதற்கான காரணங்கள் என்னென்ன? கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்க...
ரஜினி,விஜய்,அஜீத் பற்றி கருத்து சொல்லி சிக்கிய விவேக் ரசிகர்களை குரங்கு என குறிப்பிட்டதால் மீண்டும் சர்ச்சை!

ரஜினி,விஜய்,அஜீத் பற்றி கருத்து சொல்லி சிக்கிய விவேக் ரசிகர்களை குரங்கு என குறிப்பிட்டதால் மீண்டும் சர்ச்சை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    ரஜினி, விஜய், அஜீத் ஆகியோரிடம் பிடித்த பண்புகள் என கருத்து வெளியிட்டதால் கமல் ரசிகர்களிடம் சிக்கிய விவேக்! நடிகர் விவேக் அடிக்கடி ஏதாவது பேசியோ அல்லது பதிவிட்டோ சர்ச்சைகளில் சிக்குவார். இந்த முறை தனது "குருவி" பக்கத்தில் "எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள். 1. யார் பற்றியும் அவதூறு பேசாதே- திரு. ரஜினிகாந்த். 2.ignore negativity- திரு. விஜய். 3.வாழு;வாழ விடு-திரு. அஜீத்" என பதிவிட அந்த பட்டியலில் கமல் பெயர் இல்லை என கமல் ரசிகர்கள் விவேக்கை வறுத்தெடுத்தார்கள். அதில் சிலரது கேள்விகளுக்கு விவேக் பதில் பதிவும் போட குருவி பக்கம் பரபரப்பாக காணப்பட்டது. ஏற்கனவே தான் ஹீரோவாக நடித்து நீண்டகாலமாக கிடப்பில் இருந்து ரிலீசுக்கு வந்த பாலக்காட்டு மாதவன் படம் ரிலீஸ் ஆன அதே நேரத்தில் தனது பாபநாசம் படத்தை கமல் ரிலீஸ் செய்து தனது படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டார...
பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கில் போட வேண்டும் – கவர்னர் தமிழிசை ஆவேசம்

பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கில் போட வேண்டும் – கவர்னர் தமிழிசை ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கில் போட வேண்டும் - கவர்னர் தமிழிசை ஆவேசம் திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்கள் மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- உலக மகளிர் தினம் என்பது ஒரு நாள் மட்டும் கொண்டாடக்கூடியது அல்ல. வருடம் முழுவதும் 365 நாட்களும் மகளிர் தினம் தான். தமிழகத்தில் திருமண வீட்டிற்கு பெற்றோருடன் சென்ற ஒரு பெண் குழந்தை நசுக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை பார்த்தேன். எப்படி இந்த மனம் மனித மிருகங்களுக்கு வருகிறது. அதனால் இப்படிப்பட்ட மிருகங்களுக்கு தூக்கு தண்டனை ...
“மாஸ்டர்” விஜய் வாய்க்கு பூட்டு போட மீண்டும் ரெய்டு மிரட்டலா?!

“மாஸ்டர்” விஜய் வாய்க்கு பூட்டு போட மீண்டும் ரெய்டு மிரட்டலா?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "மாஸ்டர்" விஜய் வாய்க்கு பூட்டு போட மீண்டும் ரெய்டு மிரட்டலா?! நடிகர் விஜய் சமீபத்திய படங்கள் எல்லாம் ரிலீஸ் நேரத்தில் பெரும் சர்ச்சையை எதிர் கொள்ளும். குறிப்பாக சமீபத்திய பட ரிலீசுக்கு முன் நடைபெறும் ஆடியோ விழாவில் விஜய் சொல்லும் குட்டிக்கதையும் இந்த பரபரப்புக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் மாஸ்டர் படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே படக்குழுவும், விஜய்யும் தொடர்ந்து ஏதாவது பரபரப்புகளுக்கு சிக்கி வருகிறார்கள். நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் வருமானவரித்துறை திடீரென ஷூட்டிங்கை நிறுத்தி வைத்து விஜய்யை ஒரு கிரிமினல் குற்றவாளி போல காரில் அழைத்து சென்று 48 மணி நேரம் வெளியுலக தொடர்புகளை தடுத்து ரெய்டு நடத்தி கடைசியில் ஒரு ரூபாய் கூட கைப்பற்றாமல் கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த ரெய்டுக்கு காரணம் விஜய் மீதான ஆட்சியாளர்களின் பயம் என்ற கருத்தும் உலாவராமல் இல்லை. இந...
மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பும் விஜய்யின் “வாத்தி கம்மிங்” !

மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பும் விஜய்யின் “வாத்தி கம்மிங்” !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
    மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பும் விஜய்யின் "வாத்தி கம்மிங்" ! விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படம் தொடங்கிய நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போகிறது. சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நுழைந்து ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு விஜய்யை தங்களின் காரில் அழைத்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் வரும் மார்ச் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையில், உருவாகி உள்ள வாத்தி கம்மிங் பாடல், தர லோக்கல் குத்து பாடலாக அமைந்துள்ளது. கல்லூரியில் மாணவர்களுடன் நடிகர் விஜய் ஆடும் மாஸ் ஓபனிங் பாடலாக வாத்தி கம்மிங் பாடல் அமைந்துள்ளது. https://youtu.be/vxzfsBDx590 மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால...
கொரானா வைரஸ் பீதி… இருமலா, சளியா திருப்பதி கோயிலுக்கு வராதீங்க..! தேவசம் போர்டு உத்தரவு!!

கொரானா வைரஸ் பீதி… இருமலா, சளியா திருப்பதி கோயிலுக்கு வராதீங்க..! தேவசம் போர்டு உத்தரவு!!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கொரானா வைரஸ் பீதி... இருமலா, சளியா திருப்பதி கோயிலுக்கு வராதீங்க..! தேவசம் போர்டு உத்தரவு!! கொரானா அறிகுறி உள்ள பக்தர்கள் யாரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு வரவேண்டாம் என தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருவேண்டும் என்றும், கைகளை கழுவுவதற்கு தேவையான கிருமி நாசினிகளை கொண்டு வர வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள பக்தர்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என திருப்பதி கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினிகளை தெளிக்கவும் தேவஸ்தானம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பணிபுரியும் ஊழியர்களும் முகமூடி அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலக அளவில் தினமும் அதிக ...
ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது! பாஜக திரைமறைவு வேலையா?

ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது! பாஜக திரைமறைவு வேலையா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் தனது ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. முதல்வராக உள்ள கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இப்போது ஆட்சி பறிபோகும் நிலைக்கு காரணமாகி உள்ளது. ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவருடைய ஆதரவாளர்களாக கருதப்படும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென கட்சி தலைமையிடம் தெரிவிக்காமல் வெளியேறி, பெங்களூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு வந்தார்கள். இதனால் ம.பி. அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கமல்நாத் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக கூறப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் சோனியா காந்திக்கு ஜோதிராதித்யா சிந்தியா கடி...
வருமானவரித்துறை விழாவுக்கு வராவிட்டால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து பிடிப்போம் – ரெய்டு மிரட்டலால் பயந்தாரா நயன்தாரா!?

வருமானவரித்துறை விழாவுக்கு வராவிட்டால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து பிடிப்போம் – ரெய்டு மிரட்டலால் பயந்தாரா நயன்தாரா!?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    வருமான வரி துறை நிகழ்ச்சிக்கு நயன்தாரா போனதற்கு "ரெய்டு" பயமா?! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தோடு வலம் வருபவர் நயன்தாரா. ஆண்டுக்கு ஆண்டு வயசு கூடினாலும் தனது மார்க்கெட்டையும், சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டே போகும் நயன்தாராவுக்கு பொது நிகழ்ச்சிகள் என்றால் மட்டும் அலர்ஜி. பலகோடி சம்பளம் கொடுத்து தன்னை வைத்து படம் தயாரிக்கும் பட விழாக்களுக்கு கூட வர மாட்டார் நயன்தாரா என்பது பல ஆண்டுகளாக அவர் மீதான் குற்றச்சாட்டு. ஆனாலும் ரசிகர்கள் விருப்பத்தால் வேறு வழியின்றி நயன்தாரா பின்னால் ஓட வேண்டிய நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளது. பணம் மொத்தமாக வருகிறது சம்பளம் கேட்டது கிடைக்கிறது என்பதற்காக தனது நெற்றிக்கண் படத் தயாரிப்பையே நிறுத்தி விட்டு ஐசரி கணேஷ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க போனார் நயன்தாரா. இந்த படத்தில் நயனுக்கு...