வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

காங்கிரஸ் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் ராகுல்காந்தி..!

காங்கிரஸ் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் ராகுல்காந்தி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்க இருப்பதையடுத்து டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் காலை முதலே குவிந்து வருகின்றனர். பட்டாசுகளுடன் காங்கிரஸ் கட்சி அலுவலக வாசலில் காத்திருக்கும் தொண்டர்கள், இனிப்பு தட்டுகளையும் வரிசையில் அடுக்கி வைத்துள்ளனர். ராகுல்காந்தி பொறுப்பேற்றவுடன் தொண்டர்களுக்கு வழங்குவற்காக இனிப்புகளுடன் தொண்டர்கள் காத்துக்கிடக்கின்றனர்....
ஆய்வின் போது பெண் குளிப்பதை எட்டிப்பார்த்தாரா கவர்னர்… பதறிய கவர்னர் மாளிகை மறுப்பு..!

ஆய்வின் போது பெண் குளிப்பதை எட்டிப்பார்த்தாரா கவர்னர்… பதறிய கவர்னர் மாளிகை மறுப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கடலூரில் பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி தவறு... கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம் கடலூரில் ஆய்வு செய்தபோது கீற்று மறைவில் பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக கூறும் செய்தி தவறு என்று கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம், வண்டிபாளையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு நடத்தினார். அம்பேத்கர் நகரில் ஆய்வு செய்தபோது அங்குள்ள கீற்று மறைப்பை பார்வையிட்டார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஆளுநரை கண்டு அலறியதாகவும், இதை கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் ஆளுநரை சுற்றிவளைத்ததாகவும் செய்திகள் வந்தன. இதை ஆளுநர் தரப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து இணை தலைமை செயலாளர் கூறுகையில் கவுரி என்பவரது வீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை ஆளுநர் பார்வையிட இருந்தார். ஆனால் அதை ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் துறை பெண் அதிகாரியும், ஆட்சி...
பவர்ஃபுல் ஆர்மி கேர்ள், பாமர கேர்ள்: ஆண்ட்ரியாவின் அவதாரங்கள்..!

பவர்ஃபுல் ஆர்மி கேர்ள், பாமர கேர்ள்: ஆண்ட்ரியாவின் அவதாரங்கள்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பவர்ஃபுல் ஆர்மி கேர்ள், பாமர கேர்ள் என இரண்டு படங்களில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அசத்தி வருகிறார் ஆண்ட்ரியா. நடிகை ஆண்ட்ரியா நடித்த சமீபத்திய படங்களான அவள், தரமணி படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து அவர் நடித்து வரும் இரண்டு படங்கள் அவரை மார்க்கெட்டின் உச்சத்திற்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்தில் ஆர்மி கேர்ளாக நடிக்கும் ஆண்ட்ரியா, ம்ற்றொரு பக்கம் வெற்றிமாறன் இயக்கும் தனுஷின் வடசென்னை படத்தில் கிராமத்து பெண் சந்திராவாக நடித்துள்ளார். ஒருபுறம் பவர்ஃபுல் கேர்ள், மற்றொருபுறம் பாமர கேர்ள் என நடிப்பது வித்தியாசமான அனுபவம் கிடைத்துள்ளதாக இரண்டு புகைப்படங்களுடன் கூடிய ஒரு பதிவை அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.  ...
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நடனமாடியே போக்குவரத்தை சரிசெய்யும் காவலர்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நடனமாடியே போக்குவரத்தை சரிசெய்யும் காவலர்

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடனமாடும் போக்குவரத்து காவலர் ராமிரோ ஹினோஜாஸ் கிறிஸ்துமஸ் சீசனை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்துள்ளார். நடனமாடியபடியே அவர் மணிலாவின் முக்கிய சாலை ஒன்றில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார். போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் கடுமையான பணியை ஏன் நடனமாடியபடியே செய்யக்கூடாது என்று எண்ணிய அவர், பணியில் சேர்ந்த இரண்டாம் ஆண்டில் இருந்தே நடனமாடும் காவலராக புகழ் பெற்றுவிட்டார்.என்னதான் நடுரோட்டில் நடனமாடினாலும், தன் கைகள் வாகனங்கள் செல்ல வேண்டிய திசை நோக்கியே இருக்கும் என்கிறார் இந்த நடனமாடும் சாண்டா கிளாஸ்!  ...
அவரை நான் அப்பாவாக கருதவில்லை; தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார்’: கவுசல்யா

அவரை நான் அப்பாவாக கருதவில்லை; தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார்’: கவுசல்யா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட உடுமலை இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யா, தனது தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் தன்னை விமர்சிப்பவர்களுக்கும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார் கவுசல்யா. அவருடன் 'எவிடன்ஸ'அமைப்பின் நிறுவனர் கதிரும் இருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், "உங்கள் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மகளாக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?" எனக் கேட்டார். ...
தமிழக வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு வந்த கள்ள நோட்டுக்கள்… ஷாக் ஆன RBI

தமிழக வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு வந்த கள்ள நோட்டுக்கள்… ஷாக் ஆன RBI

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராமநாதபுரம் ஸ்டேட் வங்கியிலிருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய ரூபாய் நோட்டுகளில் 14,500 ரூபாய் மதிப்புடைய கள்ளநோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் கொடுத்த புகாரின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  வருகின்றனர்.   நாட்டில் அதிக அளவில் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் திடீரென புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கரன்சிகளான 500, 1000 ரூபாய் நோட்டுக்கல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார் .  மேலும் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடும் சிரமங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றினர். இந்நிலையில் சென்னை ரிசர்வ் வங்க...
லட்சுமி மேனன் தனது உடல் எடையை குறைத்த ரகசியம்

லட்சுமி மேனன் தனது உடல் எடையை குறைத்த ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தென்னிந்திய நடிகை லட்சுமி மேனன் தனது உடல் எடையை குறைத்த ரகசியம் தெரிய வந்துள்ளது. பூசினாற் போன்று இருந்த லட்சுமி மேனன் பிரகு குண்டாக காணபபட்டார். இதனால் அவரை ரசிகள் பலரும் கினடல் செய்து வந்தனர். வெயிட் போட்ட  காரணத்தால் பல பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. இந்நிலையில் பிரபுதேவாவின் யங் மங் சங் படத்தை தவிர லட்சுமி மேனன் கையில் புது படங்கள் இல்லை. இந்நிலையில்  அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். தற்போது லட்சுமி மேனன் தான் ஸ்லிம்மான செல்ஃபி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லட்சுமி மேனனா இது? என ஆச்சரியத்தில்  உள்ளனர். வழக்கமாக நடிககைகள் உடல் எடையை குறைக்க நடிகைகள், உணவுக் கட்டுப்பாடு, ஜிம் என இருப்பார்கள், ஆனால் லட்சுமி மேனன் வேறு விஷயத்தை பின்பற்றியுள்ளார். அது என்னவென்றால் தினமும் நீச்சல் பயிற்சி, இடைவிடாத  டான்ஸ் பயிற்சிகளா...
மே 19–ந்தேதி  இங்கிலாந்து இளவரசர் ஹாரி–மேகன் மார்க்லே காதல் திருமணம்

மே 19–ந்தேதி இங்கிலாந்து இளவரசர் ஹாரி–மேகன் மார்க்லே காதல் திருமணம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
இங்கிலாந்து இளவரசர் ஹாரி (வயது 33), அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவை காதலித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதைத்தொடர்ந்து அவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என இங்கிலாந்து அரச குடும்பம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இளவரசர் திருமணத்துக்கான தேதி வெளியிடப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மே 19–ந்தேதி இவர்களது திருமணம் நடைபெறும் என கென்சிங்டன் அரண்மனை நேற்று அறிவித்தது. வின்ட்சரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இளவரசர் ஹாரியின் திருமணம் நடைபெறுவதாக அரண்மனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நடிகை மேகன் மார்க்லே, இளவரசர் ஹாரியை திருமணம் செய்த பின் இங்கிலாந்து குடிமகளாக மாறுகிறார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் பட்டத்துக்கான வரிசையில் ஹாரி, 5–வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  ...
ஏ.எல்.விஜய்யின் ‘கரு’ பிப்ரவரி-9ல் ரிலீஸ்..!

ஏ.எல்.விஜய்யின் ‘கரு’ பிப்ரவரி-9ல் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
ஏ.எல்.விஜய் இயக்கி வரும் படம் ‘கரு’. லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கதையின் நாயகியாக ‘பிரேமம்’ படப் புகழ் சாய் பல்லவி நடிக்கிறார். கரு கலைப்பு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையைக் கொண்ட இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து தற்போது இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. https://youtu.be/MDP_SdBI2wE இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை குறித்துள்ளார் படக்குழுவினர். ‘கரு’ படத்தை வரும் ஃபிப்ரவரி 9-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சாய் பல்லவியுடன் நாக சௌர்யா, வெரோனிகா அரோரா ஆகியோரும் நடிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி இசை அமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கரு’ திரைப்படம் ‘கனம்’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது....
அஞ்சலி-ஜெய் ஜோடியின் பலூன் பட  டிரைலர் வெளியீடு..!

அஞ்சலி-ஜெய் ஜோடியின் பலூன் பட டிரைலர் வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஜெய், அஞ்சலி நடப்பில் உருவாகி வரும் படம் பலூன்.இந்த படத்தை சின்ஸ்ஷ் இயக்குகிறார். இந்த படத்தின் ப்பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி உள்ளது.இதை நடிகர் சிலம்பரசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதில் ஜோக்கர் போன்று வேடமிட்டு கையில் ஒரு இரும்பு பைப்புடன் வருகிறார் ஜெய். அது கத்தி படத்தில் விஜய் வரும் சீன் போன்றே முடித்துள்ளனர். https://youtu.be/9VAZ0WCTrGk பிக்பாஸ் புகழ் ஓவியா மூலம் மிகவும் பாப்புலரான ‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ என்ற வார்த்தையை மையமாக வைத்து பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது ‘பலூன்’ பட டீம். சினீஸ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்காக ‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ என்ற பாடல் ஒன்றை எழுதியுள்ளார் ‘நெருப்புடா...’ புகழ் அருண் ராஜா காமராஜ். படத்தின் டிரைலர் வெளியாகி  உள்ளது. ஜெய் பல கெட்டப்பு...