‘ஜோ’ இயக்குநருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்!
‘ஜோ’ இயக்குநருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்
லார்க் ஸ்டூடியோஸ் – பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணையும் புதிய படம்
லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படமாக இது உருவாகிறது. இதன் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தினை ‘ஜோ’ வெற்றி படத்தினை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார். அவர் சொன்ன கதையைக் கேட்டுவிட்டு நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசையமைத்து, தயாரிப்பாளராக இணையவும் முடிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இருந்து வேறுபட்டு, முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடி...









