பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.
மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் இன்று(18.02.2022) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் சரியாக 6 மணிக்கு வெளியானது. இந்த டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்....
உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஆலியா பட். இவர் தற்போது கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'கங்குபாய் கத்யாவாடி' படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் 1960களில் மும்பையிலுள்ள காமாட்டி புரத்தில் வாழ்ந்த பெண் தாதா கங்குமாய் பற்றிய கதை. காதலனால் கைவிடப்பட்ட பெண், ஒரு தாதாவின் தன் தங்கையாக பாலியல் தொழில் செய்யும் பகுதியில் வாழ்கிறார்.
பின்னாளில் அவரே அண்ணன் தாதாவின் இடத்திற்குக் கொண்டுவரப்படுகிறார், இதுவே கதை. ஆனால் படத்தில் கங்குமாய் விபச்சாரம் செய்வது போலக் காட்டியிருப்பதாகக் கூறி கங்குமாயின் வளர்ப்பு மகன் பாபு ராவ்ஜி ஷா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
இது பற்றி அவர் கூறியிருப்பதாவது இந்தப் பட...
கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆரிப் முகமது கான் உரை நிகழ்த்தினார்.
அப்போது, முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை கட்டப்படும். முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்த்தப்படாது என
பேசினார்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை பலமுறை கேரள மாநில அரசு மீறிய நிலையில், தற்போது ஆளுநர் உரையில் புதிய அணை
கட்டப்படும் என்பது இடம் பெற்றுள்ளது....
இந்திய சினிமாவில் நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில் பயணித்து கொண்டிருப்பவர் பிரபு தேவா.
இவர் தற்போது ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை', ’மை டியர் பூதம்’ போன்ற பல படங்களில் நடித்துவருகிறார்.
இவர் கடைசியாக நடித்த ”தேள்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் பிரபு தேவா அடுத்தாக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விடிவி கணேஷ், மாஸ்டர் மகேந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு 'முசாசி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஜாய் பிலிம்ஸ் பாக்ஸ் என்டர்டைமென்ட் நிறுவனத்தின் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார்.
ஜப்பானிய ப...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடந்த பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு பணியில் சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 2 தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது.
குரூப் 2 -வில் மொத்தம் 5 ஆயிரத்து 831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்திருந்தார்.
இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் சட்டசபை தேர்தல் 20-ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு காங்கிரஸ் எப்போதும் துரோகம் செய்து வந்துள்ளது எனக் குற்றம் சாட்டினார்.
நதிகள் இணைப்புத்திட்டம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை ம...
கேரளாவில் பிரசித்தி பெற்ற சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் பல மணி நேரம் காத்திருந்து, கோவில் நடை திறந்தவுடன் நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் தரிசனம் செய்தனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சோட்டானிக்கரை கோவிலில் மகம் நட்சத்திர தினம் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதையொட்டி, சோட்டானிக்கரை தேவி கோவிலில் ஏழாம் நாள் திருவிழாவையொட்டி மகம் தொழுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதனைக்காண கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.
இந்நிலையில், இன்று சோட்டானிக்கரையில் தரிசனம் செய்ய வந்த தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை நயன்தாரா,
நடிகர் ஜெயராமின் மனைவி பார்வதி ஜெயராம் ஆகியோர் பல மணி நேரம் காத்திருந்து, கோவில் நடை திறந்தவுடன் தரிசனம் செய்தனர்.
நயன்தாராவுடன் அவரது காதலரும் தம...
கடலூர் மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவர், 1-வது வார்டில் போட்டியிடும் புஷ்பலதா அவர்களை ஆதரித்து செம்மண்டலம் நான்குமுனை சந்திப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததில் இருந்து, தலைசிறந்த, வளர்ச்சி மிகுந்த மாநிலமாக சாதனை புரிந்துள்ளது என்று கூறினார்.
இந்தியாவின் தலை சிறந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று சர்வே முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது என்றும், சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன.
ஆனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பிறகு அந்த கூட்டணி சிதறி போனது. இது அதிமுக ஒற்றுமையாக இல்லை என்பதையே காட்டுகிறது.
கூட்டணியில் அத...
நீண்ட காலத்திற்குப் பிறகு இளையராஜாவும், அவரது தம்பி கங்கை அமரனும் சந்தித்துக் கொண்டார்கள். அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் அவரது குடும்பத்தார் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இளையராஜா குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோகாதரர்கள்.. மூத்தவர் பாவலர் வரதராஜன். கம்யூனிஸ்ட். ஊர் ஊராகச் சென்று தனது பாடல்களின் வழியாக கம்யூனிஸ்ட் கொள்கைகளை பரப்பியவர். தேர்தல் பிரச்சாரம் செய்தவர்.
அவர் காங்கிரஸுக்கு எதிராக பாடிய பாடலின் வடிவம்தான் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபாயும் தாரேன்.. பாடல். அவருக்கு அடுத்து பாஸ்கர். அடுத்து இளையராஜா, கடைசியாக கங்கை அமரன்.
கடைசி மூவரும்தான் சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடினார்கள். பாவலர் சகோதரர்கள் என்பது அவர்களின் பெயர். நால்வரில் இப்போது இளையராஜாவும், கங்கை அமரனும் மட்டுமே இருக்கிறார்கள்.
பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்தி...