வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

‘நானே வருவேன்’ படத்தின் போஸ்டர் வெளியீடு!

‘நானே வருவேன்’ படத்தின் போஸ்டர் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். புவனா சுந்தர் படத்தொகுப்பு செய்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தனுசுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் தனுசும் இயக்குனர் செல்வராகவனும் இடம்பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கு முன்பு செல்வரகாவன்...
15வது ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு!

15வது ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில் போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசி லீக் ஆட்டம் மே 22ம் தேதி வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. வான்கடே மைதானம் மற்றும் டி.ஒய்.பாட்டீல் ஆகிய மைதானங்களில் தலா 20 லீக் ஆட்டங்களும், மும்பை பிரபோன் மைதானம் மற்றும் புனே எம்சிஏ சர்வதேச ஸ்டேடியத்தில் தலா 15 போட்டிகளும் நடக்கின்றன. இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும். லீக் ஆட்டங்க...
போரில் சரணடைந்தார் என்பது இலங்கையின் பித்தலாட்டம், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் – மாஜி MP ரகசியம்

போரில் சரணடைந்தார் என்பது இலங்கையின் பித்தலாட்டம், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் – மாஜி MP ரகசியம்

HOME SLIDER, kodanki voice, World News, உலக செய்திகள், வீடியோ
  #LTTEPrabakaran #sivajilingamMP #srilankapolitics #DouglasDevanandam போரில் சரணடைந்தார் என்பது இலங்கையின் பித்தலாட்டம், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - மாஜி MP ரகசியம்   https://youtu.be/SD2ocYGTxrA
ரஷ்யாவின் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன உக்ரைன் அதிபர் வேதனை!

ரஷ்யாவின் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன உக்ரைன் அதிபர் வேதனை!

HOME SLIDER, NEWS, ukrain war, World News
    ரஷ்யாவின் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன உக்ரைன் அதிபர் வேதனை! ரஷ்யாவின் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன என்றும் முதல் நாளில் எப்படி ரஷ்யாவை தனியாக எதிர்த்தோமோ 2வது நாளிலும் அப்படியே எதிர்கொள்கிறோம் என்றும் மேற்கத்திய நாடுகள் எங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளது என்றும் இதை எதிர்பார்த்தோம் என்றாலும்கூட அதிக வேதனையை தருகிறது என்றும் கூறியுள்ளார். https://youtu.be/5AcWZ9gguJI...
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு ரஷ்யா தடை!

பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு ரஷ்யா தடை!

HOME SLIDER, NEWS, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடைவிதித்து ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. ரஷ்யாவின் இந்நடவடிக்கையால் அந்நாட்டு மக்கள் நம்பகமான செய்தியை அறிவதில் சிக்கல் ஏற்படும் என ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. பிபிசி உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்களும் மாஸ்கோவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவைத்துள்ளன. முன்னதாக ரஷ்ய ராணுவத்தை பற்றி வதந்தி பரப்புவோருக்கு 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டத்தில் அதிபர் புட்டின் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் நாட்டுடன் ரஷ்யா நடத்தி வரும் போர் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பெரிய அளவில் ரஷ்யாவில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக புதின் இந்த தடையை வித்திதிருக்கலாம் என்று கூறப்படுகிறது...
டார்க் காமெடி த்ரில்லர் படத்தில் RJ பாலாஜி ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!

டார்க் காமெடி த்ரில்லர் படத்தில் RJ பாலாஜி ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த ‘தியான்’ படத்தின் இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் தமிழ் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ஆர்.ஜேவாக இருந்து நகைச்சுவை நடிகராக உயர்ந்த ஆர்.ஜே. பாலாஜி தற்போது, தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன. இதையடுத்து ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். அந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் தமிழில் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார். அதேபோல் ஆர்.ஜே பாலாஜி ஜோடிக்கான நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது....
ரஷ்யாவின் கொலை முயற்சிகளில் இருந்து 3 முறை தப்பிய உக்ரைன் அதிபர்!

ரஷ்யாவின் கொலை முயற்சிகளில் இருந்து 3 முறை தப்பிய உக்ரைன் அதிபர்!

HOME SLIDER, NEWS, politics, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  ரஷ்யப் படையினரால் மூன்று முறை அரங்கேற்றப்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி லாவகமாக தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச இதழ்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 9-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்த நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியை உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. உக்ரைன் துருப்புகளின் கடுமையான பதிலடி காரணமாக, தலைநகருக்குள் ரஷ்ய படையினரால் நுழைய முடியவில்லை. ராணுவத்தினருடன் பொதுமக்களும் சேர்ந்து ரஷ்ய ராணுவத்தினருக்கு எதிராக சண்டையிட்டு வர...
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் சஸ்பெண்ட்!

கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் சஸ்பெண்ட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் பதவியில் இருந்து எம்.ரவிக்குமார் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான வார்டுகளை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கைப்பற்றின. இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்றனர். இதனை சுட்டிக்காட்டி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, இதுபோல் வெற்றி பெற்ற திமுகவினரை பதவியில் இருந்து விலகுமாறு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அவ்வாறு பதவி விலகாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,...
அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ’தீயவர் குலைநடுங்க’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ’தீயவர் குலைநடுங்க’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ’தீயவர் குலைநடுங்க’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 'திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ படங்களுக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் அர்ஜுனுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. அருள்குமார் தயாரிக்க தினேஷ் லக்‌ஷ்மணன் இப்படத்தை இயக்குகிறார். ”ஒரு க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் பின்னணியில் அழுத்தமான க்ரைம் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரம் மைய கதாப்பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது. எந்தவித கதாப்பாத்திரம் தந்தாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் அசத்தும், நடிகை ஐஷ...
முதல்வர் ஸ்டாலின் முதிர்ச்சி நிறைந்த தலைவர் – டாக்டர் திருமாவளவன் எம்.பி.பாராட்டு

முதல்வர் ஸ்டாலின் முதிர்ச்சி நிறைந்த தலைவர் – டாக்டர் திருமாவளவன் எம்.பி.பாராட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் திருமாவளவன் எம்.பி. வெளியிட்ட  அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை பொறுப்புகளுக்கான மறைமுக தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்குமிடையே குழப்பங்கள் ஏற்பட்டு நாடுதழுவிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, திமுகவுக்கு எதிராக அவை அனைத்துத் தரப்பினரின் பேருரையாடலாக மாறின. இத்தகைய சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமது வேதனைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் சில கருத்துகளை வெளியிடும் நிலை உருவானது. அத்துடன், உள்ளாட்சித் தேர்தலில் பறிபோன உரிமைகள் ஒரு புறமிருந்தாலும் கூட்டணியின் மீதான நன்மதிப்பைக் காப்பாற்ற வேண்டிய தேவையும் எழுந்தது. அதனடிப்படையில் "கூட்டணி அறத்தைக்" காப்பாற்ற வேண்டுமென விசிக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக மாண்புமிகு ம...