புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

மரியுபோல் நகரம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் ரஷிய போர் கப்பல்கள்!

மரியுபோல் நகரம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் ரஷிய போர் கப்பல்கள்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் நகரங்கள் மீது  ரஷிய படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், துறைமுக நகரமான மரியபோல் மீது ரஷிய போர் கப்பல்கள் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அசோவ் கடல்  பகுதியில் ரஷிய போர் கப்பல்களின் செயல்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் ஏழு ரஷிய கப்பல்கள் இருப்பதாகவும், கருங்கடலில் ரஷியா 21 கப்பல்களை நிறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே உக்ரைனில் உள்ள ரஷிய படையினர் உணவு மற்றும் எரிபொருளைப் பெறுவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் உறைபனி மற்றும் கடும் குளிரை சமாளிக்க அவர்களிடம் போதுமான உபகரணங்கள் இல்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்....
தெலுங்கானாவில் மர குடோனில் தீ விபத்து- 13 தொழிலாளர்கள் பலி!

தெலுங்கானாவில் மர குடோனில் தீ விபத்து- 13 தொழிலாளர்கள் பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் சம்பத். இவர் செகந்திராபாத் போயகோடா பகுதியில் மர டிப்போ நடத்தி வருகிறார். இதில் மகாராஷ்டிரா, பீகார் மாநிலத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தொழிலாளர்கள் அனைவரும் மர டிப்போவிலேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள குடோனில் தங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. அதிகாலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. புகை மூட்டம் ஏற்பட்டதால் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  அப்போது தான் தொழிலாளர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ பயங்கரமாக எரிந்ததால் தொழிலாளர்கள் குடோனில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்கள் குடோ...
மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் ,நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை யுஎஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். எம்.சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர் .அதன்படி மாமனிதன் திரைப்படம் வருகிற மே மாதம் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். https://twitter.com/seenuramasamy/status/1506452139647721481?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1506452139647721481%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcinema.maalaimalar.com%2Fcinema%2Fcinemanews%2F2022%2F03%2F23110958%2F3604879%2FTamil-cine...
இன்று காலை தேனாம்பேட்டையில முதல்வர் திடீர் ஆய்வு !

இன்று காலை தேனாம்பேட்டையில முதல்வர் திடீர் ஆய்வு !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் நகரில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மழைநீர் வடிகால் வசதிகள் இருந்தும் தண்ணீர் வடியாததால் பல இடங்களில் 4 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மழைநீர் தேங்கிய பகுதிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வரும் காலங்களில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் வேப்பேரி, பெரம்பூர், புளியந்தோப்பு, தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வேப்பேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், திரு.வி.க.நகர் பகுதிகளில் நடைபெற்ற பணிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து இன்று தேனாம்பேட்டை பகுதி...
அரசியல் கட்சியால் சினிமாவுக்கு பிரச்னை வந்தால்… நடிகர் கார்த்தி அதிரடி பதில்!

அரசியல் கட்சியால் சினிமாவுக்கு பிரச்னை வந்தால்… நடிகர் கார்த்தி அதிரடி பதில்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் சங்க தலைவராக நடிகர் நாசர், துணைத் தலைவராக பூச்சி முருகன், பொதுச்செயலாளராக விஷால் பொருளாளராக கார்த்திக் உள்ளிட்ட வெற்றிபெற்ற 29 உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சி முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், ‘நடிகர் சங்கத் தேர்தல் வரலாற்றில் 3 ஆண்டுகள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் சங்கத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரி பத்மநாபன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். எங்கள் பக்கம் நியாயம், நேர்மை உள்ளது. பொறுமையாக காத்திருந்து வெற்றியை பெற்றதில் பெருமையடைகிறோம். நடிகர் சங்க புதி...
நயன்தாரா, விக்னேஷ் சிவனை கைது செய்யணுமாம் காரணம் கேட்டா சிரிச்சிடுவீங்க!

நயன்தாரா, விக்னேஷ் சிவனை கைது செய்யணுமாம் காரணம் கேட்டா சிரிச்சிடுவீங்க!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான கண்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ரவுடிகளை ஒடுக்க தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரவுடிகளை ஊக்குவிக்கும் விதமாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி இருப்பது பொதுமக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துவதாக புகாரில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் அஜித்தின் 62ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. அப்போது விக்னேஷ் சிவன் மற்றும் அவரது ரவுடி பிக்சர்ஸ் குழு இணைந்து பட்டாசு வெடித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகை...
உக்ரைனில் இருந்து 2300 குழந்தைகளை கடத்திய ரஷ்யா? – அமெரிக்கா குற்றச்சாட்டு

உக்ரைனில் இருந்து 2300 குழந்தைகளை கடத்திய ரஷ்யா? – அமெரிக்கா குற்றச்சாட்டு

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. இந்நிலையில், டுவிட்டரில் பதிவிட்டுள்ள உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லூகான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகளிலிருந்து 2 ஆயிரத்து 389 குழந்தைகளை சட்டவிரோதமாக அழைத்துச் சென்றுள்ளதாகவும், இது கடத்தல் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. மரியுபோல் நகரிலிருந்து படைகள் வெளியேற வேண்டும் என்ற ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் நிராகரித்தது. இதையடுத்து, அங்கு தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. அதேநேரம், மரியுபோல் நகரிலிருந்து ஒரு லட்சம் பேர் வெளியேற விரும்பினாலும், சரியான வழித்தடம் இல்லாததால், வெளியேற முடியவில்லை என்று துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் கோரிக்கை விடுத்துள்ளார். கெர்சன் நகரில் உணவு மற்றும் மருத்துவ விநியோகம் கிடைக்காமல் 3 லட்சம...
அகதிகளாக தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்!

அகதிகளாக தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
  இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து, அங்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கிடுகிடுவென விலை உயர்ந்ததை அடுத்து பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் சத்திரத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஆறு நபர்கள் நிற்பதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.   இதையடுத்து, கியூ பிராஞ்ச் போலீஸார் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து கடலோர காவல் படையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இலங்கை தலைமன்னார், யாழ்பாணத்தில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தது தெரியவந்துள்ளது. ...
ukraine war: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல கூலிப்படை

ukraine war: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல கூலிப்படை

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல வேக்னர் என்னும் கூலிப்படையை  தங்கள் நாட்டுக்குள் ரஷ்ய அதிபர் புடின் அனுப்பியுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் ரஷ்ய படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றன. மரியுபோல் நகரை தொடர்ந்து ரஷ்ய படைகள் முற்றுகையிட்டு வருகின்றன.  அந்நகரின் 80 சதவீத கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன்  மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. முதல்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாட்டின் என்ற இடத்தில் நிலத்தடி ஆயுதக் கிடங்கை கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழ...