வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

அண்டை நாடுகளில் 30 லட்சம் உக்ரேனியர்கள் தஞ்சம்!

அண்டை நாடுகளில் 30 லட்சம் உக்ரேனியர்கள் தஞ்சம்!

HOME SLIDER, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. போருக்கு அஞ்சி உக்ரைனிலிருந்து இதுவரை 30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையிலும் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. சிறிய நகரங்கள், முக்கியமான வர்த்தக பகுதிகள், தலைநகர் கீவ் என மும்முனை தாக்குதலை ரஷ்ய ராணுவம் தொடங்கியுள்ளது. தலைநகர் கீவில் 15 மாடிகள் கொண்ட குடியிருப்பு மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு விரைந்த மீட்பு படை வீரர்கள், கட்டடத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதேபோல் பொடில் ஸ்கை, டர்னிட் ஸ்கை உள்ளிட்ட பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. குடியிருப்புகளை ...
உன்னை மேடையில் சந்திக்கிறேன் – பதிலளித்த இளையராஜா!

உன்னை மேடையில் சந்திக்கிறேன் – பதிலளித்த இளையராஜா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசை கச்சேரிகளை பல நாடுகளில் நடித்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம், இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சென்னையில் வருகிற 18-ஆம் தேதி 'ராக் வித் ராஜா' என்ற இசைக்கச்சேரி நடக்கவுள்ளது. இதில் இளையராஜாவும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பாடல்களை பாடவுள்ளனர். இந்த நெகிழ்வான தருணத்தை வெளிப்படுத்தும் வகையில் தேவி ஸ்ரீ பிரசாத் "எனது கனவு நனவாகப் ப...
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பரியேறும் பெருமாள், கர்ணன் படப் புகழ் இயக்குனர் மாரி செல்வராஜ்  தனது அடுத்த படமான மாமன்னன் எனும் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் பகத் பாசில், நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்  இசையமைக்க இருக்கிறார்.  இது ஒரு அரசியல் திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சேலம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் உதயநிதி ஸ்டாலின் சேலம் அண்ணா பூங்கா அருகே புல்லட்டில் செல்லும் காட்சி பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வேகமாகப் பரவி வருகிறது....
பயணி முதல் சிங்கிள்….அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

பயணி முதல் சிங்கிள்….அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இயக்குனர் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார். ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி ஐஸ்வர்யா தனது மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இ...
அஜித்துடன் இணையும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா!

அஜித்துடன் இணையும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை மீண்டும் எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் லால் அல்லது நாகார்ஜூனா இருவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், இவர்களுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அஜித்குமார் அவர்களின் 62-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'காதுவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி முடித்துள்ள விக்னேஷ் சிவன், அஜித்குமாரின் அடுத்த  படத்தின் பணிகளை தற்போதே தொடங்கி விட்டதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர்...
உண்மையை பேசும் தரமான அரசியல் படம் தான் குதிரைவால்!

உண்மையை பேசும் தரமான அரசியல் படம் தான் குதிரைவால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  குதிரைவால் திரைப்படத்தை ஏன் திரையரங்கில் பார்க்கவேண்டும். படக்குழுவினர் சொல்லும் ரகசியம். தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், புது முயற்சிகளை கையில் எடுத்து உருவாகி வரும் புதிய படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது ‘குதிரைவால்’ திரைப்படம். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் இப்படம் மார்ச் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோன...
21-வது நாளாக நீடிக்கும் போர்: கீவ் நகரில் ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல்!

21-வது நாளாக நீடிக்கும் போர்: கீவ் நகரில் ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன்  மீது ரஷியா கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் இன்று 21-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைனை சுற்றியுள்ள எல்லைகளில் இருந்து ரஷிய படைகள் அந்நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. தொடக்கத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகளை அழிக்க ஏவுகணைகள் வீசப்பட்டன. பின்னர் முக்கிய அணு உலை நிலையங்களை ரஷிய படையினர் கைப்பற்றினர். தற்போது குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் சில நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய ராணுவம், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் ரஷிய படை தலைநகர் கிவ்வுக்குள் முழு பலத்துடன் செல்ல முடியாமல் திணறி வருகிறத...
புதிதாக 2,876 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு!

புதிதாக 2,876 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்தியாவில் கொரோனாவால் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து கடந்த 13-ந் தேதி 3,116 ஆக இருந்தது. மறுநாள் 2,500 ஆக குறைந்த நிலையில், நேற்று 2,568 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 29 லட்சத்து 98 ஆயிரத்து 938 ஆக உயர்ந்தது. கேரளாவில் கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது. இந்நிலையில் அங்கு புதிய பாதிப்பு 1,193 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 98 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 72 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,16,072 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,884 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவ...
பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இன்று பஞ்சாப் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் பகவந்த் மானுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொழியுரிமை மற்றும் இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களுக்கான உரிமைகள் குறித்துக் குரலெழுப்புவதில் தமிழ்நாட்டிற்கும் பஞ்சாபிற்கும் நெடிய வரலாறு உண்டு. பஞ்சாப் மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசின் ஆட்சிக்காலம் வெற்றிகரமானதாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
கரு.பழனியப்பன் பட நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்தது தவறு – சீனு ராமசாமி காட்டம்

கரு.பழனியப்பன் பட நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்தது தவறு – சீனு ராமசாமி காட்டம்

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
    கரு.பழனியப்பன் அவர் நடித்த பட நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்தது தவறு – சீனு ராமசாமி காட்டம்   https://youtu.be/sGStkdTxZhI