வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

யாருக்கு எந்த பதவி… கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

யாருக்கு எந்த பதவி… கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
யாருக்கு மேயர், துணைமேயர், நகராட்சித்தலைவர் பதவிகளை வழங்குவது என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் நடைபெற்றது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் இந்த பேச்சுவார்த்தையில் தங்களுக்கு வேண்டிய இடங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நிறைவுற்றதை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் எங்களுக்கு சில பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஒப்...
பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தின் முக்கிய அறிவிப்பு!

பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தின் முக்கிய அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். அந்தகன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை (02.03.2022)...
உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்- புதின் உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்!

உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்- புதின் உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்!

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 6-வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷியா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ரஷியாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பு 400 பேரை ரஷியாவுக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வாக்னர் குழுமத்தில் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை கூலிப்படையினராக உள்ளனர். இந்த அமைப்பு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் கூட்டாளியான யெவ்ஜெனி பிரிகோஜினால் நட...
சயின்ஸ்பிக்சன் ஃபேண்டஸி, ஹாரர் காமெடி திரைப்படத்தில் ஹன்சிகா!

சயின்ஸ்பிக்சன் ஃபேண்டஸி, ஹாரர் காமெடி திரைப்படத்தில் ஹன்சிகா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  R.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா! சயின்ஸ்பிக்சன் ஃபேண்டஸி, ஹாரர் காமெடி திரைப்படம்! Masala Pix  நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர்  ஆர்.கண்ணண்  - Focus Films நிறுவனத்துடன் இணைந்து “Production no 7” படத்தை டைரக்ட் செய்து தயாரிக்கிறார். #ஜெயம்கொண்டான், #கண்டேன்காதலை, #சேட்டை, #இவன்தந்திரன், போன்று எல்லா வகை கதைகளையும் டைரக்ட் செய்து அனைவருக்கும் பிடிக்கும் தரமான வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து வருபவர்  இயக்குநர் R.கண்ணன். தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான #கிரேட்இந்தியன்கிச்சன் படத்தை தமிழில் டைரக்ட் செய்து ரிலீஸ் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளார். மும்பை தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதை தயாரித்துள்ளார்கள். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். இதை அடுத்து, மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் நடிக்கும் #காசேதான்கடவுளடா படத்தை...
அஜீத்தின் வலிமை படத்தில் வக்கீல்களை அவதூறாக சித்தரித்து காட்சிகள் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!

அஜீத்தின் வலிமை படத்தில் வக்கீல்களை அவதூறாக சித்தரித்து காட்சிகள் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்திய அத்திரைப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் கடந்த 24 ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தி உள்ளதாகவும், அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சாந்தி, தான் கடந்த 25 ஆம் தேதி வலிமை திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று கண்டதாகவும், அப்போது அத்திரைப்படத்தின் தொடக்கக் கா...
முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள்!

முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள்!

HOME SLIDER, Photos, politics, அரசியல்
  முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்கள்!    
ஸ்டாலினுக்கு இவ்வளவு வயசா? எனது அம்மா நம்பவில்லை – அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்திய ராகுல்

ஸ்டாலினுக்கு இவ்வளவு வயசா? எனது அம்மா நம்பவில்லை – அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்திய ராகுல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார் கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக்கொண்டார். இந்த சுயசரிதை நூலில், மு.க.ஸ்டாலின் அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார். பூம்புகார் பதிப்பகம்‘ இந்த நுலை வெளிக்கொண்டுவந்துள்ளது. இந்த விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலம...
என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்துள்ளது – சென்னையில் ராகுல் உருக்கமான பேச்சு!

என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்துள்ளது – சென்னையில் ராகுல் உருக்கமான பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களின் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, அண்ணன் மு.க ஸ்டாலின் அவர்களை பாராட்ட விரும்புகிறேன். இதுபோன்ற அற்புதமான புத்தகத்தை அளித்துள்ளார். அவருடைய வாழ்க்கை மிக நீண்ட போராட்டத்தைக் கொண்டது. மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்த இடத்திற்கு ஸ்டாலின் வந்துள்ளார். ‘நான் நாடாளுமன்றத்தைவிட்டு வெளியே வரும் போது ஒரு செய்தியாளர் உங்களுடைய பேச்சில் தமிழ்நாடு என்று ஏன் நிறைய முறை குறிப்பிட்டீர்கள். அப்போதுதான் நான் உணர்ந்தேன் அடிக்கடி நான் தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளதை. என்னை அறியாமல் நானும் தமிழன்தான் என்று குறிப்பிட்டேன். பிறகு, காரில் இருக்கும்போது யோசித்தேன். ஏன் தமிழன் என்று கூறினேன் என்று யோசித்தேன். என்னுடைய வாயிலிருந்து ஏன் அந்த வார்த்தை வந்தது என்று யோ...
உக்ரைன் போர்… சிக்கி உள்ள தமிழர்களுக்கு உதவ தொலைபேசி எண் அறிவிப்பு!

உக்ரைன் போர்… சிக்கி உள்ள தமிழர்களுக்கு உதவ தொலைபேசி எண் அறிவிப்பு!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  உக்ரைன் போர் சூழலில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு இந்தியத் தூதரகம் வழியாக விரைந்து உதவிட முதல்வர் உத்தரவு - திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா உதவி தேவைப்படும் உக்ரைன் வாழ் தமிழர்கள் [email protected]ல் தொடர்பு கொள்ளலாம் - எம்.எம்.அப்துல்லா எம்.பி.   044-2851 5288, 96000 23645 ஆகிய தொலைபேசி உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் - எம்.எம்.அப்துல்லா எம்.பி.    ...
யுவன்ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டு திரைப்பயணம்… TMJA நிர்வாகிகள் வாழ்த்து

யுவன்ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டு திரைப்பயணம்… TMJA நிர்வாகிகள் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் தடம் பதித்து 25 ஆண்டுகள் ஆவதை பத்திரிகையாளர்களோடு மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம் இருவரும் யுவனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். https://twitter.com/onlykodanki/status/1498379399166840832?s=20&t=uMmHRoiAE0u5BcPvFJZpdg...