ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

படம் அல்ல பாடம் – பொன்மகள் வந்தாள் கோடங்கி விமர்சனம்

படம் அல்ல பாடம் – பொன்மகள் வந்தாள் கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    தாமதமாக வரும் நீதியும் அநீதிதான் என்று ஒற்றை வரியை மிகுந்த வலியோடு உணர்வு ரீதியாக சொல்லி இருக்கிற படம் தான் ஜோதிகா நடிப்பில் டிஜிட்டலில் வெளியான பொன்மகள் வந்தாள். இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியில் திடீர் திடீரென பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அப்படி ஒரு குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை இருவர் தடுக்க வருகிறார்கள். அவர்களை அந்த பெண் சுட்டுக்கொலை செய்கிறார். அந்த கொலையாளியை பிடிக்கும் போது போலீசார் அந்த பெண்ணை என்கவுண்டர் செய்கிறார்கள். அதோடு அந்த வழக்கு முடிக்கப்படுகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்ட அந்த என்கவுண்டர் வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுக்கிறார் வக்கீல் வெண்பாவான ஜோதிகா. அவருக்கு உதவியாக பாக்யராஜ். அதில் அவர் வெற்றி பெற்றாரா...? என்கவுண்டர் செய்யப்பட்ட பெண் யார்? அந்த பெண்ணால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆட்கள் யார்? பாக்யராஜுக்கு வெண்பா யார்...
சர்ச்சையை தேடும்விதமாக ஆடை இல்லாமல் ஆபாச போஸ்டர் வெளியிட்ட சந்தானம்!

சர்ச்சையை தேடும்விதமாக ஆடை இல்லாமல் ஆபாச போஸ்டர் வெளியிட்ட சந்தானம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சந்தானத்தின் டிக்கிலோனா பட ஆபாச போஸ்டர்..! சின்னத்திரையில் அடுத்தவர்களை நக்கல் நையாண்டி செய்து பெரிய திரையில் காமெடியனாக கால் பதித்து பின்னர் காமெடி ஹீரோவாக மாறியவர் சந்தானம். இவர் நடித்து வரும் படம் டிக்கிலோனா. படத்தின் பெயரே ஒரு மார்க்கமாக இருப்பது போல அந்த படத்தின் விளம்பர போஸ்டரிலும் ஆடை இல்லாமல் சந்தானம் நிற்கிறதை சக நடிகர்கள் பின்னால் இருந்து அதிர்ச்சியாக பார்ப்பது போல அந்த டிசைன் அமைந்துள்ளது. கண்டிப்பாக சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிந்தே சந்தானம் இப்படி டிசைன் வெளியிட்டு இருக்கிறார் போல. உலகமே கொரானா ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் போது அனைவர் கவனத்தையும் ஈர்க்க ஆடைகளை துறந்திருக்கிறாரோ சந்தானம். போஸ்டரே இப்படி என்றால் டிக்கிலோனா படம் எப்படி இருக்குமோ......
மக்களின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்துங்கள் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார் வேண்டுகோள்

மக்களின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்துங்கள் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார் வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்துங்கள் - மத்திய அரசுக்கு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார் வேண்டுகோள் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக நாடுமுழுவதும் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார் மத்திய மோடி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தனது சமூக வலைதளத்தில் அவர் கூறும்போது: கொரானா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலையிழந்துள்ள மக்களுக்கு நிவாரண உதவி தொகையாக ரூ.10 ஆயிரத்தை அவர்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்து அவர்கள் சொந்த மாநிலங்கள் செல்ல உதவி செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்...
2 கோடி பேர் பார்த்த ஜோதிகாவின்  பொன்மகள் வந்தாள் டிரைலர்!

2 கோடி பேர் பார்த்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
      *அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.* ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் ம...
“அக்னி” க்கு பைபை… கன மழைக்கு வாய்ப்பு!

“அக்னி” க்கு பைபை… கன மழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    "அக்னி" க்கு பைபை... கன மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வருவதால் ஏற்படக்கூடிய வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யும். விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது, இதில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில தினங்களுக்கு முன் கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, திருச்சி, மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்ச வெப்ப நிலை 42 டிகிரி செல்சியஸாக இருக்கும். எனவே அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும். இந்த மாவட்டங்களில...
ஜெ., வீடு அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் ஆகிறதா?!

ஜெ., வீடு அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் ஆகிறதா?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
    ஜெ., வீட்டை ஏன் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் ஆக்கக்கூடாது? - யோசனை சொன்ன கோர்ட் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி என்பவர் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். ஐகோர்ட்டில் அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகி, ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள் என்றும் தங்களை சட்டப்பூர்வமான வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்றும் தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, ஜெயலலிதாவின் சொத்துக்க...
வெட்டுக்கிளி தாக்குதல் ஆபத்து தமிழகத்திற்கு வராது என்கிறது வேளாண்துறை!

வெட்டுக்கிளி தாக்குதல் ஆபத்து தமிழகத்திற்கு வராது என்கிறது வேளாண்துறை!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  வெட்டுக்கிளி தாக்குதல் ஆபத்து தமிழகத்திற்கு வராது என்கிறது வேளாண்துறை! உலகிலேயே உணவு உற்பத்தியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் இடம் பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. அதன்மூலம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு உண்டாகும். இப்போது, இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் மையம் கொண்டுள்ளன. அங்கு பெரும் நாசத்தை உண்டாக்கி வருகின்றன. அதே சமயத்தில், அடுத்த மாதம் இந்தியாவுக்கு படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து தமிழக ...
மதுரையை எரித்த கண்ணகி- கோவலன் நினைவாக சிலப்பதிகார பூங்கா ஜூன் 1ம் தேதி திறக்கப்படுகிறது!

மதுரையை எரித்த கண்ணகி- கோவலன் நினைவாக சிலப்பதிகார பூங்கா ஜூன் 1ம் தேதி திறக்கப்படுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      மதுரையை எரித்த கண்ணகி- கோவலன் நினைவாக சிலப்பதிகார பூங்கா ஜூன் 1ம் தேதி திறக்கப்படுகிறது! மதுரை என்றதும் உடனடியாக நினைவுக்கு வருவது மதுரையை எரித்த கண்ணகியும், கோவலனும், சிலப்பதிகாரமும் இந்த வரலாற்று சம்பவங்களை நினைவு படுத்தும் விதமாக மதுரை போலீஸ் எஸ்.பி.அலுவலகத்தில் சிலப்பதிகார பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:- வணிகம் செய்ய மதுரை வந்த கோவலனும், கண்ணகியும் கடச்சனேந்தலில் உள்ள ஒரு வீட்டில் தங்கினர். இங்கிருந்து தான் அதாவது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் வழியாக தான் பாண்டிய மன்னனிடம் கண்ணகி நியாயம் கேட்க சென்றார். இதனால் சிலப்பதிகார பூங்கா உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது. மதுரையை பற்றிய குறிப்புகள் சங்க கால இலக்கியங்கள் பலவற்றில் உள்ளன. அதிலும் பண்டைய கால மதுரையை அங்குலம் அங்குலமாக பதிவு...
ஜூலையில் பள்ளிகள் திறக்கலாமாம்… அதுவும் 8முதல் 12வரை மட்டுமே…

ஜூலையில் பள்ளிகள் திறக்கலாமாம்… அதுவும் 8முதல் 12வரை மட்டுமே…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    8 முதல் 12ம் வகுப்புகள் ஜூலையில் தொடங்கலாம்! மனித வள மேம்பாட்டு துறையிடம் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. கொரானா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. சில பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றன. இதற்கிடையே பள்ளிகளை மீண்டும் எப்போது திறப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் குழு சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த குழு தனது அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறையிடம் அளித்துள்ளது. அதன்படி பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை கோடை விடுமுறைக்கு பின்பு ஜூலை மாத மத்தியில் திறக்கலாம்” என்று பரிந்துரைத்துள்ளது. ...
ஊரடங்கு விதி மீறல் 7.63 கோடி அபராதம் வசூல்!

ஊரடங்கு விதி மீறல் 7.63 கோடி அபராதம் வசூல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஊரடங்கு விதி மீறல் 7.63 கோடி அபராதம் வசூல்! கொரானா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு வரும் 31ந்தேதி வரை அமலில் இருக்கும்.  தமிழகத்தில் உள்ள 144 தடை உத்தரவை மீறி பல இடங்களில் மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 26 ஆயிரத்து 507 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.  ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4 லட்சத்து 94 ஆயிரத்து 770 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இதுவரை ரூ.7.63 கோடி அபராதம்...