சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

பிபின் ராவத்தின் சகோத‌ர‌ர் அஜய் ராவத் பாஜகவில் இணைந்தார்…!

பிபின் ராவத்தின் சகோத‌ர‌ர் அஜய் ராவத் பாஜகவில் இணைந்தார்…!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது இந்த நிலையில், மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இளைய சகோதரரும், ஓய்வுபெற்ற இராணுவ வீரருமான கர்னல் விஜய் ராவத், உத்தரகாண்ட் முதல்-மந்த்ரி புஷ்கர் சிங் தாமியின் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் தன்னை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார்....
இணையதளம், யூ-டியூப் சேனல்களுக்கு மத்திய BJP அரசு எச்சரிக்கை!

இணையதளம், யூ-டியூப் சேனல்களுக்கு மத்திய BJP அரசு எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இணையதளம், யூ-டியூப் சேனல்களுக்கு மத்திய BJP அரசு எச்சரிக்கை! டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் 20 இணையதள கணக்குகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்தியாவிற்கு எதிரான கருத்துகள், பொய்யான தகவல்களை பரப்பும், நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் இணையதளங்கள், யூ-டியூப் சேனல்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், 19 யூ-டியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்கள் ஏற்கனவே முடக்கப்பட்டது குறிப்ப...
49 அடி சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்காவில் மீட்புப் பணிகள் தீவிரம்!

49 அடி சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்காவில் மீட்புப் பணிகள் தீவிரம்!

flood news, HOME SLIDER, உலக செய்திகள்
  டோங்காவில் கடந்த வார இறுதியில் 49 அடி சுனாமி அலை தாக்கியதாக அந்நாட்டு அரசு  தெரிவித்தது. பசிபிக் தீவு நாடான டோங்காவில் நீருக்கடியில் எரிமலை வெடித்ததில் சுனாமி ஏற்பட்டது. டோங்காவின் மேற்குக் கடற்கரையில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாபெரும் சுனாமியால் குறைந்தபட்சம் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு நடவடிக்கைகளுக்கு பிறகு பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஒரு கிராமமே முற்றிலுமாக அழிந்துவிட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது, எரிமலை வெடிப்பினால் பலர் காயமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தீவு டோங்காவுடனான தகவல் தொடர்புத் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் பணிகள் தாமதமாகின. தற்போது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட...
இந்திய அணியில் இடம்பிடித்த இளம் வீரர்..!

இந்திய அணியில் இடம்பிடித்த இளம் வீரர்..!

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
    தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மூலம் இந்திய அணிக்கான சர்வதேச பயணத்தை தொடங்கியுள்ளார் வெங்கடேஷ். இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் வெங்கடேஷ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் களம் கண்டுள்ளார். கடந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய அவர், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கியதால், அவருக்கான இந்த வாய்ப்பு தேடி வந்துள்ளது.   இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியிருக்கும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அஸ்வின், சாஹல் என இரண்டு ஸ்பின்னர்...
முதல்வரை ஒருமையில் கருத்து பதிவிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

முதல்வரை ஒருமையில் கருத்து பதிவிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழ் மொழி மற்றும் தமிழக அரசு குறித்து சமூகவலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட சப்இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சேகர். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர், அண்மையில் பதிவிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பணியாளராக இருக்கும் அவர், அரசின் நலத்திட்டங்களையும், தமிழ் மொழியையையும் கடுமையாக விமர்ச்சித்து நண்பர் ஒருவருக்கு பதில் எழுதியிருந்தார். அதில், " தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழியில ஒருத்தன் 5000 ஆயிரம் கொடுக்க சொன்னான். வந்தா அதைக் காணோம். அதைக் கேளுங்கடா என்றால், புரியாத ஹிந்திமொழியில பேசியதை.. ஏதோ புரிஞ்ச மாதிரி... சொல்லாத லட்சத்தை கேட்கிறான் பாருங்க கொத்தடிமை..!" என பதிவிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவு போலீஸ் வட்டாரத்திலும், சமூகவலைதளத்திலும் வைரலாக பரவிய நிலையில், சென...
இளம்பெண்ணுடன் புகழ் நெருக்கமாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்! காதலியா?

இளம்பெண்ணுடன் புகழ் நெருக்கமாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்! காதலியா?

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள்
    இளம்பெண்ணுடன் புகழ் நெருக்கமாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.! காதலியா? குக் வித் கோமாளி புகழுக்கு சொந்த ஊர் கடலூர். பிரசாத் ஸ்டியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலை பார்த்துக்கொண்டிருந்த இவர் அப்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்தார், பின்னர் பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் பார்த்து ஒரு நடிகனாக அடையாளம் கண்டார். புகழின் செயல்பாடுகளை கவனித்த அவர் அவரை கலக்கப்போவது சீசன் 6 ஆடிஷனில் பங்கேற்க சொல்லியிருக்கிறார். ஆனால் அதில் பங்கேற்ற புகழ் முதலிலேயே எலிமினேட் ஆகிவிட்டார். பின்னர் கம்பியூட்டர் சர்வீஸ், வாட்டர் வாஷ் என இருந்த புகழுக்கு, சிரிப்புடா என்ற ஷோவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தொடர்ந்து சின்ன சின்ன கெட்அப்களில் நடிச்ச புகழுக்கு கலக்கப்போவது யாரு சீசன் 5 இல் லேடி கெட்ட அப் வாய்ப்பு...
கொரோனாவால் எகிறிய ”டோலோ 650” மாத்திரை விற்பனை!

கொரோனாவால் எகிறிய ”டோலோ 650” மாத்திரை விற்பனை!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
  கொரோனாவால் எகிறிய ”டோலோ 650” மாத்திரை விற்பனை! சர்வதேச அளவில் கொரோனா பரவல், குறிப்பாக ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்தியவிலும் அதிகம் காணப்படுகிறது. சர்வதேச அளவில் மக்களை பீதியில் ஆழ்த்தும் விதமாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்தியவிலும் அதிகம் காணப்படுகிறது. கொரோனா தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வரும் நிலையில், மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாத்திரை டோலோ 650 கோவிட் அலைகளில் மிக அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாத்திரை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவை தளமாகக் கொண்ட மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் தயாரித்த டோலோ 650 ஜனவரி 2020 முதல் இதுவரை இல்லாத அளவில் சாதனை அளவிலான விற்பனையை பதிவு செய்துள்ளது. கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வருவதால், டோலோ 650 என்ற ...
மொளச்சூர் முருகன் கோவிலுக்கு வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்கள் வழங்கிய சசிகலா!

மொளச்சூர் முருகன் கோவிலுக்கு வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்கள் வழங்கிய சசிகலா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள மொளச்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரானா பரவல் வழிகாட்டி விதிமுறைகளின்படி, தைப்பூச தினமான நேற்று, கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இன்று தைப்பூச விழாவை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.   சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடைபெற்ற தைப்பூச விழா  சிறப்பு பூஜையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், முன்னாள் அதிமுக பொதுச் செயலாளருமான வி.கே. சசிகலா கலந்துகொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கும் முருகப்பெருமானுக்கு 35 லட்ச ரூபாய் மதிப்பில் 4 அடி உயரமும் 35 கிலோ எடையும் கொண்ட வெள்ளி கவசத்தையும், தங்க கண் மலர்களையும் காணிக்கையாக வழங்கி சுவாமி தரிசனம் செய்தார்....
நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்..!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் விஜய் ரசிகர்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் முடுக்கிவிட்டுள்ளன. இதுதொடர்பான அனைத்துக் கட்சி கூட்டமும் சென்னையில் நடைபெறுகிறது. ஜனவரி 24 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வர இருப்பதால், அ தற்கு முன்கூட்டியே ஜனவரி 22 ஆம் தேதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட மாநில தேரதல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்நிலையில், இந்த தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுமார் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் போட்டியிட்டனர். அதில் 120 பேர் வார்டு உறுப்பினர்கள், ஊராட்...
விஜய் மல்லையாவை லண்டனிலும் விடாமல் விரட்டும் வங்கி கடன்! கை நழுவும் சொகுசு பங்களா!!

விஜய் மல்லையாவை லண்டனிலும் விடாமல் விரட்டும் வங்கி கடன்! கை நழுவும் சொகுசு பங்களா!!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
        பெங்களூர் தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் 2016-ல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் வழக்கு விசாரணையில் உள்ளது. இதற்கிடையே, லண்டன் ரிஜென்ட் பார்க் நகரில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொகுசு பங்களா மீது 2012-ல் சுவிஸ் வங்கியில் ரூ.185 கோடி கடன் பெற்றிருந்தார். 5 ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில், கடனை திரும்ப செலுத்தாததால் 2017-ல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய உத்தரவிட்டு சுவிஸ் வங்கிக்கு சாதகமாக தீ்ர்ப்பு அளித்தது. இதையடுத்து, சொகுசு பங்களாவை விட்டு விஜய் மல்லையா வெளியேறுமாறு கடந்த ஆண்டு அக்டோபரில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த ந...